அருள்மிகு லக்ஷ்மி திருப்பதம்மா திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
லக்ஷ்மி திருப்பதம்மா |
|
அம்மன்/தாயார் | : |
லக்ஷ்மி திருப்பதம்மா |
|
ஊர் | : |
பெனுகாஞ்சிபுரோலு |
|
மாவட்டம் | : |
கிருஷ்ணா
|
|
மாநிலம் | : |
ஆந்திர பிரதேசம் |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
மாசி மாதத்தில் திருப்பதம்மா உற்சவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இதில் திருப்பதம்மா கல்யாண உற்சவமும், ஊஞ்சல் உற்சவமும் மிகப் பிரசித்தமானவை. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
சபரிமலை போன்று பக்தர்கள் இங்கு இருமுடி கட்டி செல்வது சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு லக்ஷ்மி திருப்பதம்மா திருக்கோயில்
பெனுகாஞ்சிபுரோலு,கிருஷ்ணா. |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
ஆலயத்தின் கருவறையில் திருப்பதம்மாவுக்கும், அவள் கணவன் கோபய்யாவுக்கும் விக்ரகங்கள் உள்ளன. கோபய்யாவின் இடப்புறம் திருப்பதம்மா எழுந்தருளியிருக்கிறாள். சுற்றிலுள் உள்ள சன்னதிகளில் கிராம தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பெத்தம்மா தேவி என்று அழைக்கப்படும் ஜ்யேஷ்டா தேவி, சர்ப்பம் குடை பிடிக்க சிம்ம வாகனத்தில் காவல் தெய்வமாக கொலு வீற்றிருக்கிறாள். சற்றுத் தாழ்வாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிலுகொண்ட அங்கம்மா வாரி சன்னதியும் உள்ளது. கோயிலுக்கு வெளியே காவலர்காரர்களான மல்லய்யா, சந்திரம்மா சன்னதிகள் உள்ளன. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
பிரச்சனைகள் தீரவும், திருமண பாக்கியம் கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
அம்மனுக்கு திருவிழாவின் போது பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி, மண்டல விரதம் அனுஷ்டித்து, பவுர்ணமி அன்று பூஜா திரவியங்களை எடுத்து வந்து திருப்பதம்மாவுக்கு சமர்ப்பிக்கின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
திருப்பதம்மா ஆலயத்தின் அருகே ஓடும் முனியேறு என்ற சிற்றாறு. மவுத்கல்ய முனிவரின் தவ வலிமையால் உருவாக்கப்பட்டதாம். பக்தர்கள் திருப்பதம்மாவுக்கு பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம் வளையல்கள் போன்ற மங்கலப் பொருட்களையும் இதர பூஜா திரவியங்களையும் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். உற்சவத் திருமேனிகளும் உள்ளன.
வாழ்வாங்கு வாழ்ந்த சிறந்த பெண் மணியை தெய்வமாகவே ஏற்றுக் கொண்டு தங்கள் கோரிக்கைகளைக் கூறி வழிபடும் பக்தர்கள் கூட்டத்தினைக் காணும்போது இத்தலத்தில் குடி கொண்டிருக்கும் அம்மனின் சான்னித்தியம் புலப்படுகிறது. திருப்பதம்மா போன்ற தமிழகத்திலும் பல மாவட்டங்களில் தீப்பந்தங் கோயில் எனப்படும் சிறிய கோயில்களில் பெண்கள் தீப்பாய்ஞ்ச அம்மனாக வழிபடப்படுகின்றனர். தென் மாவட்டங்களில் தீப்பாய்ந்த அம்மன் கோயில்கள் நிறைய உள்ளன. பலரால் குலதெய்வமாக வழிபடப்படுகின்றனர். பிற மதத்தவரும் இந்த அம்மனை வழிபடுகின்றனர். தமிழகத்தில் உள்ள இது போன்ற கோயில்கள் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்டதாகக் கூறுகிறார்கள். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
இந்தக் கிராமத்தில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த திருப்பதம்மா என்ற பெண்மணி பொறுமைக்கும், கற்பின் பெருமைக்கும் நிலைக்களனாகத் திகழ்ந்தவர். கொல்லா சிவராமய்யா ரங்கம்மா தம்பதிக்கு மகளாகப் பிறந்த திருப்பதம்மா சிறிய வயதிலேயே மணம் முடித்து, எத்தனையோ கஷ்டநஷ்டங்களுக்கு மணம் முடித்து, எத்தனையோ கஷ்டநஷ்டங்களுக்கு இடையேயும் தன் கணவருக்கு உத்தம மனைவியாக இருந்தவள். கணவன் இறந்தாலும் கற்பின் பெருமையை நிலைநாட்டும் வகையில் அக்கால வழக்கப்படி அக்னிப்பிரவேசம் செய்த லக்ஷ்மி திருப்பதம்மா சக்தியின் அம்சமாக வழிபடப்படுகிறார். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
சபரிமலை போன்று பக்தர்கள் இங்கு இருமுடி கட்டி செல்வது சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|