Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்துமாரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முத்துமாரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துமாரி
  அம்மன்/தாயார்: முத்துமாரி
  தல விருட்சம்: வேப்ப மரம்
  ஊர்: காரைக்குடி
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசி மாதக் கடைசி செவ்வாய் கிழமை அம்பாளுக்கு காப்புக்கட்டி விழா துவங்கும். பங்குனி முதல் செவ்வாய் எட்டாம் நாளில் அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மது முளைப்பாரி, கரகம், அக்கினிச்சட்டி எடுத்தல் சிறப்பாக நடத்தப்படும். பால்குடங்கள், பூக்குழி இறங்குதல் நடக்கின்றது. பல்லாயிரக் கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்துவர். மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது சிறப்பு. திருவிழா அன்று காலை முத்தாளம்மன் கோயில் ஊரணியில் நீராடிய பக்தர்கள், அங்கிருந்து பால்குடங்களை ஏந்தி கொப்புடையம்மன் கோயில் வீதி, செக்காலை ரோடு, முத்துப்பட்டணம் வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைவார்கள். அம்மனுக்கு பால் அபிஷேகம் ஆனந்த வெள்ள அருவியாக நடக்கும். கோயிலில் கரகம், மது, முளைப்பாரி, மறுநாள் காலை 9.30 மணிக்கு கோயில் காவடி, பால்குடம், பூக்குழி இறங்குதல், மாலை முளைப்பாரி புறப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து அம்மன் திருவீதி உலா, சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில், காரைக்குடி 630 001 சிவகங்கை.  
   
போன்:
   
  +91 4565 232199 
 
பிரார்த்தனை
    
  இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  முத்துமாரி அம்மனுக்கு, தாவிவரும் வேல்போட்டு, காவடியும் பால்குடமும், முளைப்பாரி மதுக்குடமும், தீச்சட்டி பூமிதியும், நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் இத்தலத்தில் தக்காளியை தங்களது காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா என்றாள். அவரோ! சிரித்தபடியே,என் வீட்டிலா?கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது எனக் கிண்டலாகப் பதில் கூறினார். சிறுமியோ,நீ போய்ப் பார். தக்காளியைக் கொண்டு வா எனக் கூறினாள். அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு கிணற்றடியில் திடீரென முளைத்திருந்த தக்காளிச் செடியில் ஒரே ஒரு பெரிய தக்காளிப்பழம் மட்டும் இருந்தது. அப்போது தான் அவருக்கு அந்த தெய்வச் சிறுமியின் மகிமை புரிந்தது. உடனே தக்காளிப்பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்து அவளது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அன்று முதல் பக்தர்கள் இத்தலத்தில் தக்காளியை தங்களது காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் வந்து அன்னையை வழிபடுகின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  செட்டிநாட்டுச் சீமையின் முக்கிய நகரான காரைக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள உள்ளது முத்துமாரியம்மன் கோயில். 1956ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் லலிதா என்ற 8வயது சிறுமி காரைக்குடி அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு உடல் முழுவதும் அம்மையுடன் வந்தாள். சமயபுரத்தில் இருந்து தனியாக வந்த அந்த சிறுமியை மக்கள் பார்த்தார்கள். சிலநாளில் சிறுமியின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகளெல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிலநாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலபேர் சிறுமியை கிண்டலடித்தனர். அதை அவள் பொருட்படுத்தவில்லை.

ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா என்றாள். அவரோ! சிரித்தபடியே,என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது எனக் கிண்டலாகப் பதில் கூறினார். சிறுமியோ,நீ போய்ப் பார். தக்காளியைக் கொண்டு வா எனக் கூறினாள். அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு கிணற்றடியில் திடீரென முளைத்திருந்த தக்காளிச் செடியில் ஒரே ஒரு பெரிய தக்காளிப்பழம் மட்டும் இருந்தது. அப்போது தான் அவருக்கு அந்த தெய்வச் சிறுமியின் மகிமை புரிந்தது. உடனே தக்காளிப்பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்து அவளது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அன்று முதல் பக்தர்கள் இத்தலத்தில் தக்காளியை தங்களது காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ஒருநாள் அந்த தெய்வச்சிறுமி,நான் மகமாயியாக இதே இடத்தில் இருந்து அருள்பாலிப்பேன். எனக்கு கோயில் அமைத்து வழிபட்டால் நோய்நொடிகள் தீரும். மனமகிழ்ச்சி கூடும். கன்னியருக்கு மணமாகும். தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல நலன் வீடு தேடி வந்து சேரும் எனக்கூறி முக்தியடைந்தாள். அவளை முத்துமாரியாகக் கருதி மக்கள் வழிபட்டனர். 1956ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar