தமிழ்ப் புத்தாண்டு, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகா தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி ஆகியவை வெகு, விமரிசையுடன் கொண்டாடப்படுகின்றன. திருக்கார்த்திகையன்று கோயில் வாசலில் நடைபெறும் பிரமாண்டமான சொக்கப்பனை கொளுத்தும் வைபவத்தில் தாழை மடல்களைப் பயன்படுத்துவது சிறப்பு. ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா வருவார். பிரதோஷ வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல்12 மாலை 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
பிரம்மனூர், திருப்புவனம் வழி
சிவகங்கை.630611
போன்:
+91 9787594871
பொது தகவல்:
பலிபீடம், நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை என்று அமையப்பெற்ற கிழக்கு நோக்கிய கோயில். மகாமண்டபத்தில் பிரம்மா, சரஸ்வதி, மகாவிஷ்ணு, மகாலட்சுமி சன்னதிகளும், மகாமண்டபத்தின் வட பகுதியில் தெற்கு நோக்கி காமாட்சி அம்மன் சன்னதியும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன் அருள, கருவறையில் மூலவர் கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். மூலவர் விமானம் பாண்டியர்கால கலையம்சத்தை நினைவூட்டுகிறது. பிராகாரத்தை வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலை கணபதி, லிங்கேத்பவர், ஸ்ரீதேவி - பூதேவி சமேத வேங்கடநாதர், வள்ளி -தேவசேனா முருகன், சண்டிகேஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நவகிரகம், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.
பிரார்த்தனை
கைலாசநாதரை வழிபட்டால் செய்வினைக்கோளாறுகளும், பித்ரு தோஷம் உள்பட சகல தோஷங்களும் நீங்குகிறது.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள ஆறடி உயரம் கொண்ட சூரியபகவானுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று செவ்வரளி மாலை, சிவப்பு வஸ்திரம் சாத்தி, கோதுமைப் பாயசம் நைவேத்யமாகப் படைத்து அர்ச்சனை செய்ய தோஷ பாதிப்புகளும், சகல துன்பங்களும் விலகி, வளமான வாழ்வு அமைகின்றன.
தல வரலாறு:
ஈசன் விஸ்வரூபம் எடுத்து நின்றபோது அவரது திருவடியும் திருமுடியும் காண நாரணனும் நான்முகனும் போட்டியிட்டார்கள். அப்போது பிரம்மா, தாழம்பூவின் துணையோடு, இறைவனின் சிரத்தினைக் கண்டதாகப் பொய் கூறினார். அதனால் சிவனின் கோபத்துக்கும், அவரது சாபத்துக்கும் ஆளானார், பிரம்மா. தன் தவறை உணர்ந்த பிரம்மா, சாபவிமோசனம் பெற சிவனை வேண்டினார். மனமிரங்கிய மகேசன், பூலோகம் சென்று தன்னை வழிபட்டு சாப விமோசனம் பெறலாம் என்றார். பூலோகம் வந்த பிரம்மா, வைகையாற்றின் தென்கரைத் தலம் ஒன்றில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்யலானார். அதனால் அவருக்கு ஏற்பட்ட சாபம் விலகியது.
இறைவனுக்கு நன்றி தெரிவித்த பிரம்மா, எதிர்காலத்தில் தனது பெயராலேயே இவ்வூர் அழைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனையும் நிறைவேற்றி அருளினார் ஈசன். அதன்படி பிரம்மனூர் என இத்தலம் அழைக்கப்படுகிறது. படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்து வரும் மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரோடு எழுந்தருளியுள்ள ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தலம் பிரம்மனூர். நிலவளம், நீர்வளம் மிகுந்து நான்குபுறமும் நெல்வயல்கள், தென்னந்தோப்புகள், கரும்பு வயல்கள் சூழ்ந்திருக்க ஊரின் தென்மேற்குப் பகுதியில் காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோயில் எழிலோடு காட்சியளிக்கிறது. ஒரு காலகட்டத்தில் பழமையான இக்கோயிலின் கல்கட்டுமானம் இயற்கைச் சீற்றங்களால் பழுதாகிட, பழைய கட்டுமானத்தை அகற்றிவிட்டு புதிய கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கும் செய்து முடித்துள்ளனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் விமானம் பாண்டியர்கால கலையம்சத்தை நினைவூட்டுகிறது.
இருப்பிடம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ. தூரத்தில் பிரம்மனூர் அமைந்துள்ளது. டவுன் பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை
தங்கும் வசதி : சிவகங்கை
கொங்கு டவர்ஸ் சத்திய மூர்த்தி தெரு, சிவகங்கை போன்: +91 98424 64749 மீனா ரெசிடன்சி காந்தி வீதி, சிவகங்கை போன்: +91 4575 242 424 94879 72424 பி.என்.ஆர்.,லாட்ஜ் தொண்டி ரோடு சிவகங்கை போன்: +91 94426 40803 ஸ்ரீசண்முகபவன் லாட்ஜ் அரண்மனை வாசல் சிவகங்கை போன்: +91 98424 40432 ஜெய் லாட்ஜ் காந்தி வீதி , சிவகங்கை போன்: +91 98424 41096 பி.எல்.எஸ்., லாட்ஜ் அரண்மனை வாசல் சிவகங்கை போன்: +91 4575 240488 சலீம் டவர்ஸ் பாரத் லாட்ஜ் நேரு பஜார் சிவகங்கை போன்: +91 948874 5577 இதயா டவர்ஸ் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சிவகங்கை போன்: +91 91504 84949