ஆவணி மாதம் தொடக்கத்தில் சூரிய ஒளி விநாயகர் மீது படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில்,
சி.முட்லுõர் அஞ்சல் கிள்ளை கிள்ளை வழி,
சிதம்பரம் வட்டம்,
கடலூர்-608102.
போன்:
+91 75983 02955.
பொது தகவல்:
கிழக்குப் பக்கம் வாயில், மகாமண்டபத்தில் 50 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். விமானத்தில் ஒரு கலசம், தரை தளம் டைல்ஸ், தலைகீழ் ‘ப’ வடிவில் தரை தளம் உள்ளது. நிலைப்படி முன் கஜெலெட்சுமி நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். சிமெண்ட் சுதையில் ஆறு பூதகனங்கள், நான்கு காளை வாகனம் இடம் பெற்றுள்ளது. நுழைவு வாயில் தலைப்பில் சிவன், முருகன், விநாயகர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் மூலவரான செல்வ விநாயகர் சிரித்த கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். 1964 ல் கு ம்பாபிஷேகம் அதன் பின் 2014 ல் கும்பாபிஷேகம் நடந்தது.
பிரார்த்தனை
ஆண்டியப்ப முதலியார் அன்னசத்திரம் கட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அனைத்து மக்களும் செல்வ வளம் பெருக இக்கோயிலை கட்டியுள்ளார். இவரை வணங்கினால் செல்வ வளம்பெரும் அதனால் செல்வ விநாயகராகவே அருள்பாலிக்கிறார். திருமணத்தடையை போக்கும் மாப்பிள்ளை கோலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
நேர்த்திக்கடன்:
நெய் தீபம், எருக்கு, அருகம்புல்லில் மாலை சார்த்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.
தலபெருமை:
இக்கோயிலில் இருந்து 4 கி.மீ., தொலைவில் சிதம்பரம் நடராஜர் உள்ளதுடன், இக்கோயிலுக்கு தை அமாவாசை மற்றும் மாசி மகத்தில் நடராஜர் வருகையும், புவனகிரி ராகவேந்திரர் கோயில், மருதூர் வள்ளலார் பிறந்த இடம் என்பதாலும், இக்கோயில் நின்று சிதம்பரம் நடராஜர் கோயில் நான்கு கோபுரத்தையும் தரிசிக்கும் இடமாக இருப்பதால் கோயிலுக்கு பெருமையாக உள்ளது.
தல வரலாறு:
சிதம்பரத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள ஆ.ம ண்டபத்தில் வாழ்ந்த ஆண்டியப்ப முதலியார் செல்வ களிப்பில் ஏழைகளுக்கு பொருளுதவி செய்தார். மற்ற மக்களும் நலம் பெற வேண்டும். என்ற நோக்கில் முதன் முதலில் கீற்றுக் கொட்டகையில் கோயில் நிறுவி செல்வ விநாயகர் என்ற அழைத்து வழிபாடு நடத் தினர். அப்பகுதியில் அதிகளவில் திருமணம் நடக்காமல் இருந்த ஆண்களுக்கு திருமணத்தடையை போக்க மாப்பிள்ளை கோலத்தில் கல்யாண சுந்தரேஸ்வர் சிலை அமைத்து வழிபாடு நடத்தியதால் இன்றளவும் திருமணமாகாத முதலியார் உள்ளிட்ட பிற சமூகத்தினர்கள் வந்து செல்கின்றனர். கல்யாண சுந்தரேஸ்வரர் இன்றளவும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆண்டியப்பமுதலியார் இறந்த பின் அவரின் புத்திரர்கள் திருஞானம் மற்றும் தியாகராஜன் கோயில் கட்டினர். இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டியப்பமுதலியார் சந்ததியினர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஆவணி மாதம் தொடக்கத்தில் சூரிய ஒளி விநாயகர் மீது படுகிறது.