ஆங்கிலயேர் ஆட்சியில் தோப்புகள் சூழ்ந்த இப்பகுதியில் ஊற்று (சுணை) வெட்டி பிற பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச் சென்றனர். பாணிக்காடு என்பே பிற்காலத்தில் பனங்காடு என மறுவியுள்ளது.
கிழக்குப் பக்கம் வாயில், விமானத்தில் ஒரு கலசம், கோயில் வலப்பக்கம் குளம் மற்றும் தல விருட்சமான வேப்ப மரம் உள்ளது. நுழைவு வாயில் முன் இடப்பக்கத்தில் விநாயகர் மற்றும் பொய்யாமொழி விநாயகர் தலா ஒரு கலசத்துடன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். கோயில் மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கோயிலுக்குள் இடபக்கம் பேச்சியம்மன் நான்கு கரங்களுடனும், சற்று தொலைவில் எட்டு கரங்களுடன் துர்க்கை வடக்குப்பக்கம் பார்த்தும், கருவறையில் கிழக்குப் பக்கம் பார்த்து அம்மன் சிரித்த கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். மூன்றறையடி உயரத்தில் ஐம்பொன் உற்சவர் சிலை உள்ளது. மகா மண்டபத்தில் கோயில் மணி உள்ளது. கோயில் புதுப்பிக்கப்பட்டு 2001 மற்றும் 2013 ஆண்டில் கும்பாபிஷேகம் நடந் துள்ளது.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு, நோய்களுக்கும், வெளிநாடு பயணத்திற்கும் சிறந்த கோயிலாக திகழ்வதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள், பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நேர்த்திக்கடனை செதுத்துக்கின்றனர்.
தலபெருமை:
குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக ஸ்ரீமுஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமைச் சேர்ப்பதாகும்.
தல வரலாறு:
கிள்ளையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் நஞ்சை வயலும், மரங்களும் சூழ்ந்த பகுதியாக இருந்துள்ளது. இப்பகுதியில் ஆங்கிலயர்கள் குடிநீருக்காக குட்டை வெட்டி தண்ணீர் எடுத்துச் சென் றனர். அதன் காரணமாகவே காலப்போக்கில் மக்கள் குடியேறிய பின் பாணிக்காடு என்பது மருவி பங்காடு என்றாகியது. முதன் முதலில் அம்மபவாணன் படையாட்சி என்பவர் சிங்கப்பூர் சென்று பொருள் ஈட்டி வந்தவர், அப்போது இப்பகுதியில் தெய்வ வழிபாடு இல்லாததால் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனக் கூறி சொந்த செலவில் 1938 ஆம் ஆண்டு கோயில் கட்டினார்.
அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் குடியேறி யவர்கள் மட்டும் வணங்கினர். சிங்கப்பூரார் கோயில் என்று அழைக்கப்பட்டது பலரும் இக் கோவி லில் பிரார்த்தனை செய்த பின் வெளிநாடு சென்றுள்ளனர். இங்கிருந்து பல்வேறுப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் திருவிழா காலங்களில் விழா சிறக்க உதவி வருகின்றனர். அம்பல வாணன் மறை ற்குப் பின் அவரது குடும்பத்தினர்கள் கண்காணித்து வந்தனர். தற்போது கிராமத்தின் கோயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் அருகில் 30 அடி தொலைவில் யோக விநாயகர், கோயில் முகப்பு முன் விநாயகர், கோயில் உள் பிரகாரத்தில் துர்க்கை மற்றும் பேச்சியம்மன் தனித்தனி சன்னிதி கட்டியும், மகா மண்டபம், கோயிலைச் சுற்றி மதிற் சுவரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செய்துள்ளனர். தற்போது இங்கு படையாட்சி பட்டம் உள்ளவர்கள் வசிக்கின்றனர். இங்கு குலதெய்வ வழிபாட்டிற்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஜூலை முதல்வாரம் அம்மன் மற்றும் விநாயகர் மீது சூரிய ஒளி விழுகிறது.
இருப்பிடம் : 100 ஆண்டுகள் பழமையானது, கோயில் புதுப்பிக்கப்பட்டு 2001 மற்றும் 2013 ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் வழி: சிதம்பரத்தில் இருந்து கிள்ளை சென்று அருங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம் 3 கி.மீ.,