காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்,
பெருமாள் கோயில் தெரு,
சிவகங்கை.
போன்:
+91 9786062619
பொது தகவல்:
கோயிலின் கருவறை வட்டவடிவமாக விளங்குவது விசேஷம். நல்ல உயரத்தில் அழகான கட்டுமானத்தில் காண்பார் உள்ளத்தை கொள்ளை கொள்வது ஒரு கவிதையழகுடையதாக விளங்குகிறது. பெருமாள் கோயில்களுக்கு போனால் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷம் கேட்கும். இது பாவம் போக்கும் மந்திரம். கோவிந்தா என்றால் திரும்ப வராதது என்று பொருள். ஆம்... அழகர் தரிசனம் பாவம் செய்யும் எண்ணத்தைத் திரும்ப வராமல் செய்துவிடும். செய்த பாவத்தின் பலனும் நம்மை அண்டாது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கோ என்றால் தலைவன். விந்தம் என்றால் திருவடி. அவனது பாதார விந்தங்களைத் தரிசித்தால், பாவம் முற்றிலும் நீங்கி விடும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு அழகரைப் பக்திப்பூர்வமாகத் தரிசிக்கிறார்கள்.
பிரார்த்தனை
இங்கு நினைத்தது நிறைவேற 12 முறை சுற்றி பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சக்கரத்தாழ்வார் இவருக்கு 12 சனிக்கிழமையில் துளசிமாலை சாத்தி 12 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
தலபெருமை:
நினைத்தது நிறைவேற 12 முறை சுற்றுங்க: திருமாலின் சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். இதை வழிபட்டால் துன்பம் நீங்கும். பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயிடமிருந்து பிறக்காமல், தூணில் இருந்து வெளிப்பட்டதால், அவசரத் திருக்கோலம் என்பர். நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது என்று இவரைச் சிறப்பித்து சொல்வர். சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது நரசிம்மருடன் சேர்த்து வழிபட வேண்டும். என்ற அடிப்படையில் சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோகநரசிம்மர் வீற்றிருப்பதைக் காணலாம். இக்கோயிலின் முன் மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. இவருக்கு 12 சனிக்கிழமையில் துளசிமாலை சாத்தி 12 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
தல வரலாறு:
சிவகங்கை சீமையை ஆண்ட ஜமீன்தார்களில் ஒருவர் போதகுருசாமித்தேவர். இவரை ‘அபாத்திய ஜமீன்தார்’ என்றால், முறையான வாரிசு இல்லாமல் அரியணை ஏறியவர் என பொருள் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முறையான வாரிசு இல்லாமல் அரியணை ஏறியவர் என்பதை காட்டவே ‘அபாத்திய’ என்ற இந்த அடைமொழி. போதகுருசாமி நல்ல பக்திமான். வாரிசு வழக்குகளால் மன அமைதி இழந்தார். இவருடைய மனைவி மகமுநாச்சியார். மூத்தமகன் கவுரிவல்லபன். இவரை பெரியதுரை என்றும், இளைய மகன் சுந்தரபாண்டியனை சின்னத்துரை என்றும் அழைத்துள்ளனர். ஒரு நாள் மதுரையில் இருந்து ஜார்ஜ்பிஷர் என்ற வெள்ளைக்கார கலெக்டர் மற்றும் துரைமார்கள் சிலர் சிவகங்கை அரண்மனைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கல்லல்- சிறுவயல் காடுகளில் வேட்டையாடப்பட்டு வரும் மான்கறி, பன்றிக்கறியை சாப்பிட ஆசை. இதற்காக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
ராஜா ஏற்பாட்டில் விருந்து நடந்த போது அரண்மனையே மகிழ்ச்சியில் இருந்தது. விருந்தினராக வந்த கலெக்டர் துரையின் தங்கப்பேனா அப்போது காணாமல் போய்விட்டது. தங்கப்பேனா காணாமல் போன கவலையோடு கலெக்டர் சென்று விட்டார். போதகுருசாமி ராஜா இதனால் வேதனை அடைந்தார். தனது இளைய மகன் மீது அவருக்கு சந்தேகம். கலை நயமான பொருட்களை கண்டால் கவர்ந்து கொள்ளும் ஆசை அவருக்கு சின்ன வயதிலேயே இருந்துள்ளது. பலவிதமாக கேட்டும் சின்னத்துரை திருட்டை ஒப்புக்கொள்ளவில்லை. அன்றிரவே முத்துப்பட்டிக்கு மூன்று கல் தூரத்தில் இருந்த தோப்பில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் பேனா அரண்மனை சோபா ஒன்றின் இடுக்கில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜநீதி தப்பிப்போனதால் குருசாமி நிலைகுலைந்து போனார்.
மகமுநாச்சியார் அரண்மனையில் இருந்து வெளியேறி ஆசிரம வாழ்க்கை மேற்கொண்டார். அவருடைய பொருட்செலவில் உருவானது தான் சிவகங்கை பெருமாள் கோயில். தன்னால் ஏற்பட்ட விபரீதம் வெள்ளைக்கார துரையையும் வேதனைபட வைத்தது. ஜார்ஜ் பிஷர் என்ற பெயர் கொண்ட அவர் திருப்பணியை முன்னின்று நடத்தியதோடு திருமாஞ்சோலை என்று இப்போது அழைக்கப்படும் திருமாலிருஞ்சோலை கிராமத்தையும் தானசாசனமாக கோயிலுக்கு எழுதி வைத்தார். தாயார் மகமுநாச்சியார் சிலையையும், பலியான சின்னத்துரை சுந்தரபாண்டியன் சிலையையும் கோயிலில் எழுப்பினார். கோவில் நிர்வாகம் மகமுநாச்சியாரின் வாரிசுதாரர்களிடமே இருந்து வந்தது. அவர்கள் இடம் பெயர்ந்ததால் இப்போது இந்து சமய அறநிலைய ஆட்சியின் கீழ் வந்துள்ளது.
இருப்பிடம் : சிவகங்கை நகரில் பெருமாள் கோயில் தெருவில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை
தங்கும் வசதி : சிவகங்கை
கொங்கு டவர்ஸ் சத்திய மூர்த்தி தெரு, சிவகங்கை போன்: +91 98424 64749 மீனா ரெசிடன்சி காந்தி வீதி, சிவகங்கை போன்: +91 4575 242 424 94879 72424 பி.என்.ஆர்.,லாட்ஜ் தொண்டி ரோடு சிவகங்கை போன்: +91 94426 40803 ஸ்ரீசண்முகபவன் லாட்ஜ் அரண்மனை வாசல் சிவகங்கை போன்: +91 98424 40432 ஜெய் லாட்ஜ் காந்தி வீதி , சிவகங்கை போன்: +91 98424 41096 பி.எல்.எஸ்., லாட்ஜ் அரண்மனை வாசல் சிவகங்கை போன்: +91 4575 240488 சலீம் டவர்ஸ் பாரத் லாட்ஜ் நேரு பஜார் சிவகங்கை போன்: +91 948874 5577 இதயா டவர்ஸ் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சிவகங்கை போன்: +91 91504 84949