வினாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, ஆடி மாதம் முதல் வெள்ளி பேச்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மற் றும் நான்காம்வெள்ளி திருவிளக்குப் பூஜை, தை மாதம் முதல் வெ ள் ளி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் கடைசி வெள்ளி சுமங்கலி பூஜை யும், வைகாசிமாதம் தீ மிதி உற்சவம் உள்ளிட்டவை சிறப்பாக நடந்து வருகிறது.
தல சிறப்பு:
15 உயரத்தில் அம்மன் புற்று வடிவில் அருள் பாலிக் கிறார். அதிசயத்தின் அடிப்படையில் அமைந்த கோவில்
திறக்கும் நேரம்:
காலை முதல் 8.00மணி முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை
முகவரி:
அருள்மிகு ஸ்ரீ புற்றுமாரியம்மன் திருக்கோவில்
தில்லைவிடங்கன் மற்றும் அஞ்சல் கிள்ளை வழி, கடலுார் மாவட்டம்- 608102
போன்:
+91 9442832630
பொது தகவல்:
கிழக்குப்பக்கம் வாயில், நுழைவு வாயில், மகா மண்டபம் தகரத்தில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. விமானம் சீமை ஓட்டினால் கட்டப்பட்டுள்ளது. விமானத்தில் ஒரு கலசம் மற் றும் நான்கு பக்கம் பூதகனங்கள். வெளி பிரகாரத்தில் வடக்குப் பக்கம் பார்த்து துர்க்கை அருள் பாலிக்கிறார் கோவில் சிறு கலசம் உள்ளது. உள் பிரகாரத்தின் எட்டு கரங்களுடன் ரத்த காளி, நான்கு கரங்களுடன் பேச்சியம்மன், இரு கரங்களுடன் பெரியாச்சியும், மூன்றடியில் கிராம தேவதையாக பெரியாச்சியும் வடக்குப்பக்கம் பார்த்து அருள் பாலிக் கின்றனர்.
கோவில் நுழைவு வாயில் முன் இடப்பக்கம் வினாயகர், வலப்பக்கம் ஐந்தடியில் ஐம்பொன் வேலும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் உள் ளே 15 அடி உயரத்தின் ஸ்ரீ புற்று மாரியம்மன் மனித உருவிலும் அரு கில் மூலவர் கருங்கல் விக்ரகத்தில் அருள் பாலிக்கின்றார். மகா மண் டபத்தில் 150 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம், வெளியூர் மற்றும் நாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் வை காசிமாதம் நடக்கும் தீமிதி உற்சவ த்திற்கும் குல தெய்வ வழிபாட்டிற்கும் வந்து செல்கி ன்றனர்.
பிரார்த்தனை
கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், கண் நோய் மற்றும் அம்மை உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த பரிகா ஸ்தலம்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் நெய் தீபம், தானிங்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்கள் இக்கோவில்களுக்கு பெருமையாக உள்ளது.
தல வரலாறு:
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த முனுசாமி பிள்ளை குடும்பத்தில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. அங் கிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கோவில் பள்ளம் மகாமாரியம் மன் கோவிலில் சென்று பிரார்த்தனை செய்து வந்துள்ளார். அன்று இரவு அவர் மனைவி அமிர்தவள்ளிஅம்மா அம்மை நோயுடன் படுத்திருந்தவர் கனவில் அம்மன் தோன்றி தில்லைவிடங்கன் சங்கிலி கொண்டவன் மதகு என்ற இட த்தில் சிறிய புற்று வடிவில் கொடி கொ ண்டுள்ளேன்.
அங்கு வேம்பு மற்றும் மஞ்சல் உள்ளது அவற்றைஎடுத்துச் சென்று உடம்பில் பூசி விட்டு வேம்பை அருகில் வைத்துக் கொள் என கூறி மறைந்துள்ளார். மனைவி மூலம் தகவலறிந்தவர் மறுநாள் காலை சென்றுபார்த்த போ து அம்மன்கூறி அனைத்தும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடை ந்தவர். அந்த இடத்தில் சிறு கொ ட்டகை அமைத்து வழிபாடு நட த்தினார். காலப்போக்கில் புற்றுவளர்ந்து தற் போது 15 அடி உயரத்தில் அம்மன் மனி உருவில் அருள் பாலிக்கிறார். விமானம் ஓடு வேயப்பட்டும் மகா மண்டபம் தகரம் மற்றும் கீற்று கொட்டகையும் அமைக்கப் பட்டு ள்ளது. பல்வேறுப்பகுதியில் இருந்து இன்றளவும் குல தெய்வ வழிபா ட்டி ற்கும், அம்மை நோய் குணமடைய இங்குள்ள கோவிலில் இருந்து மஞ்சல் வேம்பு வழங்கப்படுகிறது. மேலும் புத்திரப் பாக்கிய ம், கண் நோய், திருமணத்தடை உள்ளிட்ட வைகளுக்கு பக்தர்கள் வந்து செல் கின்றனர். திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜைகளுக்குவெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:15 உயரத்தில் அம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.