தை மாதத்தில் வரும் பூசம் திருவிழா திருத்தேருடன் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மற்றும் கந்த சஷ்டி உற்சவம் ஏழு நாட்களும் பக்தர்களின் பக்தி பெருக்கோடு நடைபெற்று வருகிறது. மாதாந்திர கிருத்திகை நாள்.
தல சிறப்பு:
இந்திரன் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம்
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 7 மணி வரை
முகவரி:
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், பாலமலை, பவித்ரம் போஸ்ட் 639 002
போன்:
+91 97861 49608, 97876 62303.
பொது தகவல்:
கரூவூர் ஆனிலை பகவதிஸ்வரர் திருக்கோயிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள
இத்தலம் 54 படிகளுன் கூடிய சிறு குன்றின் மேல் கிழக்கு முகமாக
அமைந்துள்ளது.
பிரார்த்தனை
இங்கு செவ்வாய் கிழமைகள். கிருத்திகை மற்றும் விசாக நட்சத்தின்று 9 நெய் தீபங்கள் ஏற்றி மனமுருகி வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது, குழந்தை பாக்கியம் அமையும். பக்தர்களின் வேண்டுதல்கள் உடனடியாக நிறை வேறுகிறது.
தலபெருமை:
மலை அடிவாரத்தில் மயில் ஒன்றின் பெரிய சிலை வாகனம் மண்டபத்துடன் அமைந்துள்ளது. நாற்பது படிகட்டுகள் கடந்தவுடன் இடும்பன் சன்னதி உள்ளது. அதன் மேல் பத்து படிகளை கடந்தவுடன் முருகன், சிவனுக்கு தனி சன்னதிகள். வெளி பிரகாரத்தில் விநாயகர், மாதேஸ்வரர் சன்னதிகள் தனி தனியாக அமைந்து உள்ளது. வெளி பிரகாரத்தில் வலம் வந்து மகா மண்டபம், அர்த்த மண்டபங்களை கடந்து அருள்மிகு பால சுப்ரமணியரை தரிசிக்க வேண்டும். மலையின் மேற்கு பகுதியில் திருக்குளம் உள்ளது. இதில் நீராடினால் பாவங்கள் நீங்கும். இன்பங்கள் பெருகும் என்று கூறப்படுகிறது.
தல வரலாறு:
பழம் பெருமை மிக்க புராண காலத்தில் சோழ பேரரசன் சிவ பக்தி சிகாமணியாகிய முசுகுந்த சக்கரவர்த்தி கரூவூரை தலை நகராக கொண்டு ஆண்டு வந்தார், அச்சமயத்தில் ஒரு கோமாதா புல்லை மேயும் போது. அருவுருவமாகிய பிம்பத்தில் பால் சொறிந்து கொண்டு இருந்தது. அதை பார்த்த மாடு மேய்க்கும் சிறுவன் அந்த செய்தியை இராஜ மந்திரியிடம் சொல்ல, அவர் முசுகுந்த சக்ரவர்த்தியிடம் தெரிவித்தார்.
அன்றே அச்சிறுவன் முருகப் பெருமான் ரூபத்தில் முசுகுந்த சக்ரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். முருகப் பெருமானின் தரிசனத்தால் பேரானந்தம் அடைந்த அரசன் ஸ்ரீ பால முருகனுக்காக இத்தலத்தை அமைத்தார் என்பதும் புராண வரலாறு.
மேலும் ஸ்கந்த புராண காலத்தில் தேவந்திரன் சூரபன்மாதி அசுரர்களுக்கு பயந்து அக்ஞாத வாசம் செய்த போது தன் நித்ய ஆத்மார்த்த பூஜைக்களுக்கு வேண்டி இந்த ஊரில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்தார். அதனால் இங்குள்ள சிவலிங்கத்திற்க்கு தேவந்திர லிங்கம் என்றும் அம்மன் தேனாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
தேவேந்திரன் அக்ஞாத வாசம் செய்து கொண்டிருந்த போது தன் நித்ய பூஜைக்களுக்காக புஷ்பவனம் ஒன்றை அமைத்தாதகவும் அமைத்ததாகவும், இந்த வனம் தண்ணீர் இல்லாமல் காய தொடங்கிய போது மீண்டும் தேவேந்திரன் ஈசனை நோக்கி தவம் இருந்த போது தேவேந்தீரேஸ்வரர் பிரசன்னமாகி புஷ்ப வனத்திற்க்கு மழை வருவித்தார் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இந்திரன் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம்
இருப்பிடம் : கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 11 கி.மீ தொலைவில், பவித்ரம் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. கரூரிலிருந்தும், பரமத்தி வேலூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.