அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
பிரம்மபுரீஸ்வரர் |
|
உற்சவர் | : |
பிரம்மபுரீஸ்வரர் |
|
அம்மன்/தாயார் | : |
பிரசன்ன நாயகி |
|
தல விருட்சம் | : |
காளான் செடி |
|
தீர்த்தம் | : |
பிரம்மதீர்தம் |
|
ஆகமம்/பூஜை | : |
சிவாஆகமம் |
|
ஊர் | : |
பரமேஸ்வரநல்லூர் (சிங்காரத்தோப்பு) |
|
மாவட்டம் | : |
கடலூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இக்கோயில் வசிஷ்டரால் பூஜிக்கப்பட்டுள்ளது. பின்பு கி.பி.642ல் இரண்டாம் பரமேஸ்வர்மன் பல்லவன் செங்கற்களால் கோயில் கட்டியுள்ளார். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6:00 – இரவு 9:00 மணி | | | | |
|
முகவரி: | | | | | |
பிரம்மபுரீஸ்வரர் கோயில், சிங்காரத்தோப்பு, பரமேஸ்வரநல்லூர், சிதம்பரம் |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
சிவபெருமானின் திருமுடி கண்டதாகப் பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் இலிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் “பிரம்மபுரீஸ்வரர்” ஆனார்.
|
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், பிரசன்ன நாயகி, விநாயகர், சுப்ரமணியர், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி சன்னிதிகள் தனியாக உள்ளது. இங்கு சிவாகாமம் முறைப்படி பூஜைசெய்யப்படுகிறது. காளான் செடி தலவிருஷமாக உள்ளது. |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
இக்கோயில் வசிஷ்டரால் பூஜிக்கப்பட்டுள்ளது. பின்பு கி.பி.642ல் இரண்டாம் பரமேஸ்வர்மன் பல்லவன் செங்கற்களால் கோயில் கட்டியுள்ளார்.
இக்கோயிலில் பல்லவன் சிங்கவர்மன் உடல்பிணியால் பதவியேற்கயிலாது, தீர்த்தயாத்திரை புறப்பட்டு மேலும் பயணிக்கயிலாது இக்கோயிலில் தங்கினான். இச்சமயம் சிவபெருமானின் தண்டகாரண்ய நடனக்காச்சியை தில்லையில் காட்டியருள வேண்டி வியாக்ரபாதரும், பதஞ்சலியும் தவம் மேற்கொண்டு வந்தனர்.
திருவாடுதுறையில் திருமூலர் திருமந்திரம் இயற்றி போதி மரத்தடியில் வைத்து விட்டு தமது சீடர்களான வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலியை காண தில்லை வந்தார். தில்லையில் ஜீவசமாதி கொண்ட திருமூலரை சிவகங்கையருகே, ஆலமரம் அடியில் சாமதி செய்து மேலே லிங்கம் நட்டு பூஜித்து வந்தனர். சிங்கவர்மன் உடல்பிணியால் மேலும் பயணிக்கயிலாது பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ளதை தன்து ஞான திருஷ்டியால் அறிந்த இவ்விரு முனிவர்களும், சிங்கவர்மன் அழைத்து வந்து சிவகங்கையில் நீராட செய்து உடற்பிணி நீங்க செய்தனர். இதனால் சிங்கவர்மன் இரண்யவர்மன் என அழைக்கப்பட்டான். பின் சிங்கவர்மன் இவ்விரு முனிவர்களிடம் ஆசி பெற்று மீளகாஞ்சிபுரம் சென்று படையும், பொருளும் கொண்டு, கி.பி.648 ல் திருமூலர் ஜீவ சமாதிக்கு கோயில் கட்டியும், சிவகங்கையில் மூழ்கிய போது கண்ட நடராஜர் நடனகாட்சியை சித்சபை நிறுவி நடராஜரை கற்றளியாக ஸ்தாபிதம் செய்தான்.
கி.பி 1011ல் முதலாம் இராஜராஜ சோழன் கற்றளி நடராஜரை அகற்றி தற்போது உள்ள உற்சவர் நடராஜரை ஸ்தாபிதம் செய்தான். இதனால் இவன் சிவபாத சேகரன் என அழைக்கப்பட்டான். திருமுறைகளை வெளிக்கொண்டு வந்து ஓதசெய்ததால் திருவருட்செல்வன் எனவும் அழைத்தனர்.
கி.பி. 1248 ல் பல்லவ வழிக்காடவ மன்னன் கோப்பேருஞ்சிங்கன் இக்கோயிலை கருங்கல் கோயிலாக கட்டி, 80 காணி நிலம் தானம் செய்துள்ளான்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இக்கோயில் வசிஷ்டரால் பூஜிக்கப்பட்டுள்ளது. பின்பு கி.பி.642ல் இரண்டாம் பரமேஸ்வர்மன் பல்லவன் செங்கற்களால் கோயில் கட்டியுள்ளார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|