Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகள் ...
முதல் பக்கம் » காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள்
காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள் பகுதி - 2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2014
05:11

இது குறித்து ஸ்வாமிகளின் பிரதான சீடராக இருந்து, காவாங்கரையில் அவருடைய திருக்கோயிலில் பல ஆண்டுகள் வழிபாடுகள் செய்து வந்த கோவிந்தராவ் ஸ்வாமிகள், தனது அனுபவத்தை இப்படி எழுதி வைத்திருக்கிறார். 1957ல் முதன்முறையாக சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்தேன்.  அதன்பிறகுதான் ஸ்வாமிகளின் தொடர்பு எனக்குக் கிடைத்தது.  இத்தகைய ஒரு சிறந்த குருவை எனக்கு ஐயப்பன்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு முறை சபரிமலை போய் வந்ததும் முதல் வேலையாகக் காவாங்கரை சென்று கண்ணப்பஸ்வாமிகளைக் தரிசித்து, பிரசாதம் கொடுப்பேன்.  ஸ்வாமிகள் பெரிதும் மகிழ்வார்.  1958ல் ஸ்வாமிகள் கையாலேயே மாலை அணிந்து சபரிமலை யாத்திரை செல்லத் தீரிமானித்தேன். மறுநாள் காலை புஷ்பம், பழம், ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காவாங்கரைக்குப் பயணமானேன்.  என்ன ஒன்று, நான் அணிந்துகொள்ள வேண்டிய மாலையை வீட்டிலேயே மறந்து வைத்துப் புறப்பட்டுவிட்டேன்.

மாலையை எடுத்து வர மறந்துவிட்டேன் என்று ஸ்வாமிகளிடம் எப்படிச் சொல்வது என்று தவித்தேன். சரி, நடப்பது நடக்கட்டும் என்று குளித்துவிட்டு மாலை அணிவதற்காக ஸ்வாமிகளின் முன்னால் போய் நின்றேன்.  அப்போது நான் கண்ட காட்சி என்னைச்  சிலிர்க்க வைத்தது.  ஒரு பழைய மாலையை தன் அழுக்குக் குவளையில் போட்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்.  ஐயப்பா என்று அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தேன்.  என் முகத்தில் தெரிந்து குழப்பத்தைப் பார்த்துவிட்டு அவரே சொன்னார்.  என்னப்பா, மாலை என்கிட்டேயும் இருக்கு.  ஒரு காலத்துல நான் போட்டிருந்தது.  வா, உனக்குப் போட்டு விடறேன்.  என்று என் கழுத்தில் அணிவித்து  அனுப்பினார்.  பெரும்பாலும் சபரிமலை செல்லும் பக்தர்களே, இவரிடம் சிஷ்யர்களாக இருந்துள்ளனர்.  இவர்களை அடியார் திருக்கூட்டம் என்கிறார்கள். கோவிந்தராவ் ஸ்வாமிகளின் வாழ்வில் நேர்ந்த ஓர் அனுபவம் ரொம்பவும் சிலிர்ப்பானது.  இதுகுறித்து கண்ணப்ப ஸ்வாமிகளின் பக்தர் ஒருவர் நம்மிடம் சொன்னார்.

கோவிந்தராவ் ஸ்வாமிகளின் மகான் ஹரிசங்கர் (கஞ்சிரா வித்வான்) அவர் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.  அவர்கள் குடும்பம் சென்னையில் இருந்தது.  என்னென்னவோ வைத்தியம் செய்தும் குழந்தையின் ஜுரம் கொஞ்சமும் இறங்கவில்லை. குழந்தையின் <உயிருக்கே ஆபத்தான நிலைமை.  ஹரிசங்கரின் பெற்றோர் தவித்துப்போய்விட்டனர். மனவேதனையுடன் இருந்த கோவிந்தராவ் ஸ்வாமிகள் வீட்டில் சொல்லிவிட்டு இரவு பஸ் பிடித்து மிண்ட் வந்து அங்கிருந்து ஒரு லாரி பிடித்து.  காவாங்கரை வந்தார்.  கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த கண்ணப்ப ஸ்வாமிகள் திடீரென எழுந்து உட்கார்ந்தார். யாரோ ஒரு பக்தன் அந்த இரவு வேளையில் தன்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான் என்பது.  அவருக்குப் புரிந்துவிட்டது.  இருள் வேளையில் தட்டுத் தடுமாறி வந்த கோவிந்தராவ் ஸ்வாமிகள் கயிற்றுக்கட்டிலின் அருகே அமர்ந்து ஸ்வாமிகளைப் பார்த்து ஹோ வென அழ ஆரம்பித்துவிட்டார்.  அவருடைய பக்தர்களுக்கு ஊதுவத்தி ஏற்றுவதுதான் பிரதான வழிபாடு.  தினமும் அவருடைய படத்துக்கு ஊதுவத்தி ஏற்றிக் காண்பித்தாலே அவர் மகிழ்ந்து விடுவாராம்.

வீட்டுல ஊதுவத்தி ஏத்தி வச்சுட்டல்ல? என்று மட்டும் கேட்டார் கண்ணப்ப ஸ்வாமிகள். ஏத்தி வச்சுட்டேன் சாமீ.  அவன் பொழைப்பானான்னு தெரியல என்ற கோவிந்தராவால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ஒண்ணும் இல்லே. முதல்ல நீ தண்ணி குடி. வீட்டுக்கு இங்கேர்ந்து போன் பண்ணிப் பாரு.  அவன் இப்ப  விளையிõடிக்கிட்டு இருக்கான்.  தூளில படுத்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கான்.  கண்ணைத் தொடச்சுக்க என்று கண்ணப்ப ஸ்வாமிகளின் வாயில் இருந்து நற்செய்தி வந்ததும்தான் கோவிந்தராவ் ஸ்வாமிகள் தெம்பானார்.  அவருடன் துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார் கண்ணப்ப ஸ்வாமிகள். மெயின்ரோடை அடைந்த கோவிந்தராவ் ஸ்வாமிகள் அங்குள்ள ஒரு லாரி ஆபிஸில் இருந்து தன் வீட்டுக்கு போன் செய்தார்.  அவர் மனைவி, கண்ணப்ப ஸ்வாமிகள் அதே நற்செய்தியைச் சொன்னார்.  நீங்க கிளம்பின அடுத்த நிமிஷமே இவன் விளையாட ஆரம்பிச்சுட்டான்.  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை ஜன்னி கண்டு துவண்ட குழந்தையான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு என்றாராம்.

ஒரு குருவுக்கு தெரியாதா தன் சீடனின் கவலை? ஒருமுறை கண்ணப்ப ஸ்வாமிகளை தரிசிக்க வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.  அவர்கள் பெரும் பசியோடு இருந்தனர்.  ஸ்வாமிகளும் இதை உணர்ந்துவிட்டார்.  அவர்கள் வந்திருந்த நேரம் பார்த்து ஸ்வாமிகள்  உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  இது அல்ல விஷயம்.  அப்போது அவருடைய தட்டில் இருந்தது அசைவ <உணவு. வந்திருந்த பக்தர்களோ சைவ ஆசாமிகள்.  ஏகத்துக்கும் நெளிந்து விட்டனர். தங்களுக்குப் பசி என்றுகூடச் சொல்லாமல் ஸ்வாமிகள் முன்னே நெளிந்தவாறு தரிசனம் செய்து கொண்டிருந்தனர். முதலில் அவர்களைத் தன் எதிரே அமரச் சொன்னார்.  அவர்களுக்கு முன் வாழை இலைகளைப் போடச் சொன்னார்.  விஷயத்தை எப்படிச் சொல்வது என்று குழம்பினர்.

வீட்டில் அப்போது இருந்த அசைவ உணவை எடுத்துவந்து.  தானே பரிமாறினார் கண்ணப்ப ஸ்வாமிகள்.  அவருடைய கையில் இருந்ததோ அசைவ உணவு.  ஆனால் இலைகளில் விழுந்ததோ சைவ உணவு.  மாமிசத் துண்டங்கள் எல்லாம் கத்திரிக்காய் பொரியலாக இலைகளில் விழுந்தன.  இந்தக் காட்சியைத் தங்களது கண்களால் நேராகப் பார்த்த பக்தர்கள், சாப்பிடுவதையும் மறந்து ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, தங்களைத் தவறாக எண்ணிய எங்களை மன்னியுங்கள் பிரபோ என்று தேம்பினர்.  பிறகென்ன, சைவ உணவு, ஏகத்துக்கும் அங்கே மணம் பரப்பியது.  வந்திருப்பவர்கள் சைவ விரும்பிகள் என்று தெரிந்து.  கைவசம் இருந்த அசைவ உணவையே சைவமாக்கிப் பரிமாறி இருக்கிறார் கண்ணப்ப ஸ்வாமிகள்.

பாம்புகள், கண்ணப்ப ஸ்வாமிகளை அடிக்கடி வந்து சூழ்ந்து கொள்ளுமாம்.  ஸ்வாமிகளின் உடலில் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பல பக்தர்களும் பார்த்துள்ளனர்.  ஒருமுறை, ஸ்வாமிகள் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு கருநாகம் புற்றில் இருந்து வெளிப்பட்டு, ஸ்வாமிகளைக் கொத்திவிட்டு ஊர்ந்து சென்றது.  பாம்பை அடிக்க ஓடினார்கள்.  சிலர், விஷம் ஏறிய ஸ்வாமிகளுக்கு என்ன ஆகுமோ என்ற கவலையில் இருந்தனர். ஸ்வாமிகள் அமைதியாக, கவலைப்படாதீர்கள்.  அந்தப் பாம்பின் விதி இதோடு முடிந்துவிட்டது.  அதை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டி இருக்காது என்றார். பாம்பைத் துரத்திக் கொண்டு ஓடிய பக்தர்கள் விரைவாக ஸ்வாமிகளிடம் வந்து, சாமி, அந்தப் பாம்பு சிறிது தூரம் ஒடிய பின் சுருண்டு விழந்து செத்துவிட்டது என்றனர். இதைத்தானேப்பா நானும் சொன்னேன் என்று சிரித்தாராம் பாம்பின் விஷம் துளியும் ஸ்வாமிகளின் உடலில் ஏறவில்லை என்பது ஆச்சரியம்.

கண்ணப்ப ஸ்வாமிகளை ஆதிசங்கரரின் அவதாரம் என்றும் அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள்.  ஒருமுறை கோவிந்தராவ் ஸ்வாமிகளும் ரங்கநாதன் என்ற பக்தரும், அவர் இருப்பிடத்தில் இல்லாததால் எங்கே போயிருப்பார் என்று அவரைத் தேடி நெடுஞ்சாலை வரை சற்று தூரம் நடந்து வந்தார்கள்.  அப்போது அவர்களுக்கு எதிரே சுவாமிகள் நடந்து வந்து கொண்டிருந்தார்.  எப்படித் தெரியுமா? தன் கையில் இருந்த காவிப்பையை அவர் ஊன்றி வந்த கோலின் முனையில் செருகி நடந்து வந்து கொண்டிருந்தார்.  பார்ப்பதற்கு காவிக்கொடி ஏந்திய ஆதிசங்கரராக அவர் காட்சி அளித்தாராம். ஆதிசங்கரருடன் இவரைத் தொடர்புபடுத்தும் இன்னொரு நிகழ்வும் 25.12.1960 அன்று நிகழ்ந்தது.  ஸ்வாமிகளை அன்றைய தினம் புகைப்படம் எடுப்பதற்காக அன்பர் ஒருவர் வந்திருந்தார்.  அப்போது ஸ்வாமிகள் தன் கழுத்தில் இருந்த ரோஜா மாலையில் இருந்து 4 இதழ்களை எடுத்துத் தன் முன் வரிசையாக வைத்தார் (ஆதிசங்கரருக்கு பிரதான சீடர்கள் நால்வர்)

மலர் அலங்காரத்துடன் இருக்கும் ஸ்வாமிகளின் படத்தைப் பார்த்தால் அவருடைய அருள் திறன் நன்கு புலப்படும்.  அதாவது தன் வலதுகை ஆட்காட்டி விரலால் தன் இடது பாதத்தைத் தொட்டுக் காண்பித்தப்படி இருப்பார். இது சொல்லும் செய்தி என்ன தெரியுமா? என் பாதங்கனை உள்ளன்புடன் நம்பியவர்களுக்கு என்றென்றும் நான் துணை இருப்பேன் என்பதுதான்.
பூஜா காலங்களில் ஆதிசங்கரருக்குச் சொல்லப்படும் அஷ்டோத்திரமே இவருக்கும் வழங்கப்படுகிறது.  தன் வலது கரத்தில் தடி ஏந்தி நின்ற வண்ணம் காணப்படும் இவருடைய ஒரு புகைப்படத்தை. கண்ணப்ப ஸ்வாமிகளின் பக்தர்களது இல்லத்து முகப்பில் காணலாம்.  இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் ஒரு குடிசை வீடும், நாயும் தென்படும்.  என் பக்தர்களின் வீட்டில் ஒரு கூர்க்காவாக இருந்து அவர்களை என்றென்றும் காப்பேன் என்றே கண்ணப்ப ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறாராம்.

இடது தாடையில் ஸ்வாமிகளுக்கு ஏற்பட்ட சிறுபுண், கண் வடிவில் புற்று நோயாக மாறியது.  தன் ஆகாரத்தைக் குறைத்துக் கஞ்சி, பால் இவற்றையே உண்டு வந்தார்.  தனக்கு இருந்த நோய் குணமாவதற்கு எந்த ஒரு சிகிச்சையயும் மேற்கொள்ளவில்லை.  ஸ்வாமிகள் மேல் அதிகப் பிரியம் கொண்ட பக்தர்கள் சிலர்.  நகரத்துக்குச் சென்று சிகிச்சை செய்துகொள்ளலாம், வாருங்கள் என்று அழைத்தப்போதெல்லாம், ஸ்வாமிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை.  சிகிச்சைக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. இறுதியில் 9.10,1961 பிலவ வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி மகளாய அமாவாசை ஹஸ்த நட்சத்திர தினத்தில் முக்தி அடைந்தார். தற்போது இந்த நாளில் கண்ணப்ப ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. புழல் சிறைச்சாலையின் அருகே ஒரு வளைவின் உள்ளே சென்றால் இவருடைய சமாதியையும் திருக்கோயிலையும் அடையலாம்.  ஒரு சிறு சாலையின் ஒரு பக்கம் திருக்கோயிலும் மறுபக்கம் சமாதியும் அமைந்துள்ளள.  சமாதி அடைவதற்கு முன் தனக்கான இடத்தைத் தேடினாராம்.

கண்ணப்ப ஸ்வாமிகள் அருகில் உள்ள ஓர் இடத்தைத் தேர்வு செய்தார்.  தன் சீடர்களை அழைத்து இந்து இடம் ராஜா அண்ணாமலைச் சொட்டியாருக்குச் சொந்தமானது.  செட்டியாரிடம் சென்று பேசிப் பாருங்கள்.  நம் தேவையைச் சொல்லுங்கள் என்றார். அதன்படி ராஜா அண்ணாமலை செட்டியாரை சந்தித்து கண்ணப்ப ஸ்வாமிகளின் விருப்பம் பற்றிச் சொன்னார்கள் சீடர்கள்.  அதற்கு தங்களிடம் உள்ள ஆவணங்களைச் சோதித்த செட்டியார், நீங்கள் கூறும் காவாங்கரை இடத்தில் எங்களுக்குச் சொந்தமான நிலம் எதுவும் இல்லையே என்று சொல்லி இருக்கிறார். சீடர்கள் கவலையுடன் கண்ணப்பஸ்வாமிகளிடம் வந்து விஷயத்தைச் சொன்னார்கள்.  அப்போது, எரியும் தீக்குச்சி கொண்டு ஒரு சிகரெட் அட்டையில் ஓர் எண்ணை எழுதி, இதுதான் சர்வே எண்.  இது அவர்களுடைய நிலம்தான். மீண்டும் பேசுங்கள் என்று அனுப்பினார்.  கண்ணப்பஸ்வாமிகள், அதன்படி போய் மீண்டும் ராஜா அண்ணாமø செட்டியாரிடம் பேச அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானதுதான் என்கிற விவரம் அவர்களுக்கே புதியதாக இருந்தது.  இதைக்கண்டு பிடித்தவர் ஸ்வாமிகள்தான்.  அந்த இடத்திலேயே சமாதி அமைந்துள்ளது.

திருக்கோயிலுக்குள் நுழைந்தால் தெய்வத் திருவுருவங்களின் நிறைவான தரிசம்.  சமாதிக்குள் அந்த சத்திய புருஷனின் சான்னித்யம். திருக்கோயிலுக்குள் சுதை. சிலா (கல்) மார்பிள் வடிவங்களில் கண்ணப்ப ஸ்வாமிகள் அருள் புரிகிறார்.  தவிர விழாக் காலங்களில் உலா வருவதற்கு இவருக்கு இங்கே பஞ்சலோக விக்கிரகமும் இருக்கிறது.  இந்தத் திருக்கோயிலை <உருவாக்கியதில் கோவிந்தராவ் ஸ்வாமிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.  மூலவர் விக்கிரகம் கிழக்கு நோக்கியும் உற்சவர் விக்கிரகம் வடக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன,  தவிர விநாயகர், ஆதிசங்கரர், முருகப் பெருமான், ஐயப்பன், ஆஞ்சநேயர் முதலான தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு. பௌர்ணமி, அமாவசை (இரு தினங்களில் இரவில் வழிபாடு) பிரதோஷம் (மாலை வேளை) ஜனவரி முதல் தேதி, தமிழ்புத்தாண்டு தினம் (சித்திரை 1) கண்ணப்ப ஸ்வாமிகளின் குருபூஜை தினம் புரட்டாசி ஹஸ்த நட்சத்திரம்) ஆகிய நாட்களில் இங்கே விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. சென்னை அருகே காவாங்கரையில் உறையும் கண்ணப்ப ஸ்வாமிகளின் தூய வாழ்க்கையைப் போற்றி, அவருடைய சந்நிதியை தரிசனம் செய்து அருள் பெறுவோம்.

 
மேலும் காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள் »
temple news
சபரிமலைக்குச் செல்லும் வழக்கம் உள்ள பக்தர்கள், காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள் பற்றி ஓரளவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar