பதிவு செய்த நாள்
02
டிச
2014
03:12
வாழ்ந்த தலம் : பாடகச்சேரி.
எங்கே இருக்கிறது: கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் சாலையில் வலங்கைமானை அடுத்து, குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு இரண்டு கி.மீ. முன்னால் வரும் ஊர் - பாடகச்சேரி. மெயின் ரோட்டில் இறங்கிக்கொண்டு, இங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவு நடந்து சென்றால் பாடகச்சேரி சுவாமிகளின் திருக்கோயில் வரும். கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவு. வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு. ஆலங்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் பேருந்துகளில் பயணித்தால், பாடகச்சேரி என்று கேட்டு இறங்கிக்கொள்ளலாம். இரண்டு கி.மீ. நடந்துதான் செல்லவேண்டும். அல்லது வலங்கைமான், வெட்டாற்றங்கரை, ஆலங்குடி போன்ற இடங்களில் இறங்கிக்கொண்டால் ஆட்டோ வசதி உண்டு.
தொடர்புக்கு: டிரஸ்டி,
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அன்னதான அறக்கட்டளை,
18/33, எல்லய்யா செட்டித் தெரு, கும்பகோணம் - 612 001.
போன்: 0435-243 3623 மொபைல்: 9443070421.
ஜீவ சமாதி ஆன இடம்: திருவொற்றியூர்.
எங்கே இருக்கிறது?: வடசென்னையில்.
எப்படிப் போவது?: சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தும் திருவொற்றியூருக்குப் பேருந்துகள் ஏராளம். அங்கிருந்து சமாதி இடத்தை அடைவது எளிது.
தொடர்புக்கு:
மேனேஜிங் டிரஸ்டி, பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மடம்,
38, பட்டினத்தார் கோயில் தெரு,
திருவொற்றியூர், சென்னை - 600 019.
மொபைல்: 98410 21820.