அனுக்ஞை சுக்லாம்பரதரம்... சாந்தயே ப்ராணாயாமம்
சங்கல்பம்
சுபசோபனே - பரமேச்வர (நாராயண) ப்ரீத்யர்த்தம் - நக்ஷத்ரே - ராசௌ ஜாதஸ்ய - சர்மண: (நாம தேயஸ்ய) ஸஹ குடும்பஸ்ய ÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் கரிஷ்யே
அக்னியை தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக.
பூர்ப்பு வஸ்ஸீவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க.
அருகில் கும்பத்தில் வருணணை ஆவாகித்துப் பூஜை செய்க அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து துர்க்கை ஆவாஹனம், பின் அதில் 16 உபசார பூஜை செய்க.
பரி÷க்ஷசனம்
அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ ஸரஸ்வதே
அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸீவ
பின், அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)
இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம: நிர்ருதயே நம:
வருணாய நம: வாயவே நம: ஸோமாய நம:
அக்னயே நம: (அக்னியில்) ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:
நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர் ஓம் ஆததஸ்வ என்று சொல்லியதும், சமித்துகளை அக்னியில் சேர்க்க, பிரஜாபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென்கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா ஸமித்துக்களையும் தொடுக. ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் நமி மம என்று கூறுக ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம என்று கூறி தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக. அக்னயே ஸ்வாஹா அக்னியே இதம் நமம என்று தென்கிழக்குப் பாதியிலும் நெய்யால் ஹோமம் செய்க.
எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக ஓம் பூர்ப்புவஸ்ஸீவ ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறி நெய் விடுக.
அக்னியின் மத்தியில் ஸுதர்சனரைத் தியானம் செய்க. அஸ்யஸ்ரீ ஸுதர்சன மஹாமந்த்ரஸ்ய அஹிர்புத்ந்யோ ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ ஸுதர்சன மஹாவிஷ்ணுர் தேவதா
ரம்-பீஜம் ஹீம் - சக்தி பட்-கீலகம் ஸ்ரீ ஸுதர்சன ப்ரஸாத ஸித்யர்த்தே ஹோமே விநியோக: (கரந்யாஸம், அங்கந்யாஸம் செய்க).
பூர்ப்புவஸ்ஸீவரோம் என்று திக்பந்தனம் செய்க.
தியானம்
சங்கம் சக்ரம்ச சாபம் பரசுமஸிம் இஷூம்
சூல பாசாங்கு சாக்னீன்
பிப்ராணம் வஜ்ரகேடௌ ஹல முஸல கதா
குந்தம் அதயுக்ர தம்ஷ்ட்ராம்
ஜ்வாலாகேசம் த்ரிநேத்ரம் ஜ்வலதனலநிபம்
ஹார கேயூர பூஷம்
த்யாயேத் ஷட்கோண ஸம்ஸ்தம் ஸகலரிபுஜன
ப்ராண ஸம்ஹார சக்ரம்
பஞ்ச பூஜை
லம் ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மனே புஷ்பாணி பூஜயாமி
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்ரபயாமி
ரம் அக்னியாத்மனே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மனே அம்ருதம் மஹானநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மனே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
(பின் ஸுதர்சன மூலமந்திர ஜபம் செய்க)
இனிப் பிரதான ஹோமம் தொடங்குகிறது. நெய்கலந்த அன்னம், சர்க்கரைப் பொங்கல், நாயுருவி சுமித், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்க. 336 முறை, 1008 முறை ஹோமம் செய்யலாம்.
பிரதான ஹோமம்
முதலில் ஓம் ஸஹஸ்ரார ஹீம்பட் என்ற மந்திரத்தால் 16 முறையும், அடுத்து ஓம் நமோ பகவதே மஹா ஸீதர்சனாய என்ற மந்திரத்தால் 16 முறையும், பின் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய.. என்ற மந்திரத்தால் 336 முறையும் தொடர்ந்து ஸீதர்சன காயத்ரியால் 16 முறையும் ஹோமம் செய்க. பின்னர்ப் புருஷஸீக்தம், நாராயண ஸீக்தம், விஷ்ணுஸீக்தம் ஆகியவற்றைப் பாராயணம் செய்க.
உத்தராங்கம்
பூ: ஸ்வாஹா அக்னய இதம்
புவ ஸ்வாஹா வாயவ இதம்
ஸீவ: ஸ்வாஹர ஸீர்யாய இதம்
அஸ்மின் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராய்ச்சித்தார்ததம் ஸர்வ ப்ராயச்சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம்பூர்புவஸ்ஸுவ: ஸ்வாஹா ப்ரஜாபதய இதம்
ஸ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதய இதம்
(நீரால் கைகளை நனைக்க)
பூர்ணாகுதி
அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹூதிம் கரிஷ்யே
பூர்ணாகுதி தேவதாப்யோ நம: ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
மூலமந்திரம் + இறுதியில் வெளஷட்
பூர்ணாகுதிம் உத்தமம் ஜீஹோதி ஸர்வம் வை பூர்ணாகுதி: ஸர்வம் ஏவாப்நோதி
அதோ இயம் வை பூர்ணாஹீதி: அஸ்யாமேவ ப்ரதிதிஷ்டதி
பூர்ணமத: பூர்ணமிதம் ... பூர்ணமேவாவசிஷ்யதே
ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவி:.... ஸமாதிநா
பின் பிராணாயாமம் செய்க
பரிஷேசனம்
அதிதே அன்வமங்ஸ்தா: அநுமதே அன்வமங்ஸ்தா: ஸரஸ்வதே
அன்வ மங்ஸ்தா: தேவ ஸவித: ப்ராஸாவீ:
வருணாய நம: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்
பிரம்ம உத்வாஸனம்
ப்ரஹ்மன் வரம் தே ததாமி ப்ரஹ்மனே நம: ஸகல ஆராதனை ஸவர்ச்சிதம்
(நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).
உபஸ்தானம்
ஸ்வாஹா (ஒரு சமித்தை அக்கினியில் சேர்க்க)
அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹீதாசன
யத்துதம் து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்து தே
ப்ராயஸ் சித்தானி அசேஷாணி தப: கர்ம ஆத்மகானி வை
யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்
(நமஸ்காரம் செய்க)
அக்னிம் ஆத்மனி உத்வாஸயாமி (இதயத்தில் அஞ்ஜலி செய்க)
ரøக்ஷ
ப்ருஹ்த ஸாம க்ஷüத்ரப்ருத் வ்ருத்த வ்ருஷ்ணியம்
த்ரிஷ்டு பௌஜ: ஸீபிதம் உக்ர வீரம்
இந்த்ரஸ்தோமேன பஞ்சதசேன மத்யம் இதம்
வாதேன ஸகரேண ரக்ஷ
ஸமர்ப்பணம்
குஹ்யாதி குஹ்ய கோப்தாத்வம் க்ருஹாணாஸ்மத்
க்ருதம்ஹவம்
ஸித்தி பவது மே தேவ த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திரா
காயேன வாசா நாராயணாயேதிஸமர்ப்பயாமி ஸ்ரீ சுதர்சன
பரப்ஹம்ணேநம ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து.