இராகம் சுருட்டி -தாளம் ஆதி
பல்லவி
மூலமென்றழைத்த யானையைக்காத்தருள்
முகுந்தனைப் பணிநெஞ்சே
அனுபல்லவி
சீலமேவும்பத்மாசனன் வணங்கும்
திருவரங்கத்தர வணைமிசையுறங்கும்
நீலமேனியனை நிறைபரஞ்சோதி
நித்தியநிர்மல நிராமய ஆதி (மூல)
சரணங்கள்
மழையெனமும்மதம் பொழியும்விகடதட
மத்தகஜங்கள் கோடி - இரு
மருங்குமணியணியாய் நெருங்கித்தொடர்ந்து
வரவனத்தில் நடந்தோடி
எழுகடலாமெனயலைகள் பொன்மணிகொழித்
தெறியுமடுவைத் தேடிவண்
டிரைத்தக்கமலம்விண்டு சுரக்குஞ்செந்தே
னிறைத்தினித் தண்புனல்நாடி
அழகோடிறங்கியதில் முழுகியேபைய
அலைப்புத்தணியப்பல சலக்கிரீடை செய்ய
மழைநிகர்வாய்த் திறிந்தனல்விழி பெய்ய
முதலைப் பிடித்தளவிற் கதறியேயுய்யற - மூல
காலனைப்போலுக்ர மானகராவினைக்
கண்டதனோ டூடி - வெகு
காலமணுவளவும் வெறுப்புசலிப்பில்லாமல்
கடுமையோ டூடாடி
ஸ்தூலசரீரமகமேரு நிகருடலுஞ்
கப்பல்போல வாடிக் - கால்
துவண்டுபராக்கிரமங்குறைந்து நடுங்கிவிழி
சொருகிக் கண்மூடி
ஞாலமேலெதிர்ந்த தீவினைப்பழுது
நமக்கென்றதலைமிசை துதிக்கைவைத்தழுது
ஓலமிட்டண்ட சராசரமுழுதும்
உடையவனெவனவன் கதிஎன்றுதொழுது - மூல
அடுத்துசெவியில்வந்து நுழைய - அபய
மென்னுமந்தக்குரலைக் கேட்டு - பால்
அலைவழாழியிற் பெரியபிராட்டியோ
டாடியவிளை யாட்டு
விடுத்துயர்கருடன்மே ளேரியாயிரம்படம்
விரித்தெழுமணிச் சூட்டிச் - சேஷ
மெத்தைதுறந்துதிரு மார்பிற்பளபளென
விளங்கியெழில் காட்டி
வடந்தணிகவுஸ்துவமசைய பொன்னாடை
வங்கயபசுந்துளப பரிமளவாடை
எடுத்திடவுருவஞ்செந் தாமரையோடை
எனச்சிறந்திடக்ஷணத் தொழிந்திடப்பீடை
மிக்கதிர்சூரியனுந்தன் னொலிமயங்கிப்பிர
மித்துக்கண்கள் கூச - முடி
மீதுகவிந்தநவ ரத்னநெடுமகுடம்
விண்ணிடை வெளியில்வீச
எரிமணிப்பிரயை திகழ்வாகுலமேகத்
திந்திரதனுமிசை யேகக் - கையில்
ஏந்தியபாஞ்ச சன்னியசக்ராயுத
மிலங்கிடக் கைலாச
வரையுறைசிவன்முத லோரிதுவென்ன
மாயமோவென்றிறைஞ்சித் திறம்பன்னத்
திருமுகம்வேர்த்துளங் குறுநகைதுன்னச்
சித்தமிரங்கிக்கிருபைபெருகியே மின்ன - மூல
காதினிற்குண்டல ஜோதியினாலிருள்
பாதலத்தகன் றோட - மிகக்
கெனவர்மலர்மாறி சொரியததேவ
கானங்கின்னரர் பாட
கோதறவயிற்றில் வைத்திடு சகலாண்டமும்
குலுங்கநான்மறை தேடச் - செழுங்
கொத்துமலர்மாலை சரிந்திடஅந்தர
துந்துபியொலி வெகுவாய்நீட
மாயவர்களித்திட வேகமொடுசென்று
மரகதமலைப்போலெதிர் நின்று
நீ திகைத்தஞ்சாதே யஞ்சாதேயன்று
நெடியமுதலை யைக்கொன்
றிடர்தொலைத் தன்று-மூல
கஜேந்திர மோக்ஷக் கீர்த்தனை முற்றிற்று.