காப்பு - வெண்பா
ஓங்குபெரும் பாருதவி வுண்ணாமுலையனை
மேற்பாங்கு பெருஞ் செந்தமிழிற் பாவுரைக்க நீங்கரிய
வெந்துயரெல்லாம் போக்கும் வேழ முகன் செய்ய
திருகந்த மலர்ச் செஞ்சரணங்காப்பு.
ஆசிரிய விருத்தம்
1. சீர்கொண்ட வாழிமிசை பள்ளிகொண்ட திரு மாலு முண்டகமிடை,
யூர்கொண்ட நான் முகனும் பரந்து உடைகொண்ட சிந்தையோடுமே
பேர் கொண்ட வள்ளி மலை நாதர் நாம மிழைகொண்ட மின்னலிடையாய்,
வார்கொண்ட வுண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
2. பிறவாடரும் புவனசம் பிறங்கு நனி வாவி சூழ மிளவெண்,
பிறைநீடு செஞ்சடாவி கண்டனாறு பெருகுஞ் சிறந்த வெழிலார்
நிறையோடுகின்றகிரியும் விளங்க நிலைவாம வாலைநெடுநாள்,
மறைதேடு முண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
3. கலையாய் மிலைந்தவீரி நீறுடுத்த கவினார் புவிப்பெணவாளொண்,
டலையாய் விளங்கிடணவாதி கேடசயனஞ்சிரங்க ணொளிருஞ்
சிலையாம் நீ வந்த தனி ஞானதீப சிகை கொண்டளாவு நெடிய,
மலை மேவு முண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
4. பொன்னிற் பரந்த புவியிற் பொருந்துபுள குற்ற மாதர் மயலிற்,
சென்னிக்கண் வைத்து மருள் வேனைப் பொய்யில் திருவேனைச் சற்று மிளகாக்
கொன்னைச் சொலேனை கொடுமைக்குளேனை குறை தீரவுக் கணருளான்
மன்னிக்கு முண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
5. எந்தாவிணின் கணிமையோர் பரவுமிதயந் தரும் பெருமையென்
சிந்தாகுலங்களடி யோடகழ்ந்து சிதறும் படிச்செய் திடுவாள்,
பந்தானரும் யடியேனுளத்தை பருகும் பயங்கிளியென்முன்
வந்தாள்க வுண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
6. சற்றாகினும் முளுடையாவுலுத்தர் முசகத்திலேகி கவிபாடித்
தாழ்வுறாமலிணையம் புயங்களெனுநன் சரணங்களெளியேன்,
வித்தாரமான தமிழ் பாடி ஞான விறன்மேவ வைத்திடுபோல்
வற்றாத உண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
7. அயனாவினுங் கணரிமார்பினுஞ் சேவரனார் மருங்கு மிடவி,
னயனார் விந்த மொருவாயிரங் கணக்கு மிந்திரன்றனுழியும்,
உயமன் பிலங்கொளுயிர் தோறு நின்றனுவருகேசனன்றியுளதோ
மயமாது வுண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
8. கறுவீடு தேச மதிலாறுவீடு கடைவீடு வுச்சிநடுவிற் பெறுவீடு காட்சி
மணல் வீடு கட்டுப் பிசியே னடுக்க வசமோ,
எறிவீடெனெச்சால் இடுகாடு போமுனெளியேன் முனேகி வருவாய்,
வறுவீடு முண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
9. அரவுண்ட நஞ்சமதுதீரவென்று மறு மங்கை யாகிவரவும்
பெருநீரிலோலை எதிரேறமாறன் பிணியான வெட்பகலவும்
திரு வார்ந்த ஞானவமுதங்கரந்து சீர் காழியதற்குதவவே
வருசொல்லி யுண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
10. சுழியூடெழுந்த வழல்சோதி நீடுசுவை கண்டு வுன்னு மறிவை,
இழைவாடுகின்றயெனையாரெனச் சொல்லிடுவே னெவர்க்கு முறவாம்,
ஒழிவொடு மோன தனிஞானியான விமையேதிணிலமிடறோன்
வழிவாடு முண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
11. அதிகத்துயர்க்குள் பகையெற்குனாம அசனத்தை யன்றி யில்லை,
பதிகத்தை நற்சரணபங்கயத்திலும் பரிவுற்றுரைக்க வெனையாள்,
ததிமெத்ததிச்சொல் கதியைத் தருமுத்தமியே பரைப்பேணுமையே
மதிசத்திமுண்ணாமுலை நாமதேவி வரவேண்டு மென்றனருகே.
கட்டளைக் கலித்துறை
நாயகியே பொற்கணங்குடற்பைத் தலைகச்செயிற்று வாசுகிமேற்று
பில்வோனருஞ் சோதரியேவர்கண் மயமா நுதலாம்பிறையாய் நின்றன்
சேவடியில் சேயகத் தேவைத்திடு யுண்ணாமுலைச் சிறப்பையே.
உண்ணாமுலையம்மன் பதிகம் முற்றிற்று.