|
ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜிநீலதீ தீநாமவித்ர்யவது
சரஸ்வதி தேவி அன்னம் முதலான பொருள்களையும் ஸூக்ஷ்ம புத்தியின் வாயிலாக அறியத்தக்க சகல வித்தைகளையும் நமக்குக் கொடுத்து, நம் பூஜாதிகளால் திருப்தியடைந்து நம்மை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்
ஆநோ திவோ ப்ருஹத: பர்வதாதா ஸரஸ்வதீ யஜதா கந்து யஜ்ஞம் ஹவம் தேவீ ஜுஜுஷாணா க்ருதாசீ சக்மாம் நோ வாசமுசதீ ச்ருணோது
அனைவரும் வழிபடத் தகுந்த சரஸ்வதி தேவி மூன்றாவது உலகத்திலோ மேரு மலையிலோ வசித்தாலும் எங்களுடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வதற்காக,சுகத்தைக் கொடுக்கக் கூடிய வேதரூபமான ஸ்தோத்திர வார்த்தைகளையும் அழைப்பையும் விரும்பியவளாக, இளகிய தன்மையுடன் அவசியம் வந்து, பூஜையைப் பெற்று எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் |
|
|