| ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்
ஓம் சூர்யதேவாய நம!
சூரியோதயம் (வீரசோழியம்)
வேலை மடற்றாழை வெண்டோட்டிடைக்கிடந்து மாலைத் துயின்ற மணிவண்டு - காலைத் துளிநறவந் தாதெதிரத் தோன்றிற்றே காமர்த் தெளிநிற வெங்கதிரோன் தேர்.
(வேறு)
இரவிடை மதியம் என்பான் நாடிப்போய் மறையும் எல்லை விரியிருள் எழினி நீக்கி விசும்பெனும் அரங்கு தன்மேல் கரைகடல் முழவம் ஆர்ப்பக் கதிரெனும் கைகள் வட்டித்து எரிகதிர் என்னும் கூத்தன் ஆடுவான் எழுந்து போந்தான்.
சூரிய பகவான்
(தண்டியலங்காரம்)
முன்னங் குடைபோல் முடிநாயக மணிபோல் மன்னுந் திலகம்போல் வாளிரவி - பொன்னகலந் தங்குங் கவுத்துவம்போ லுந்தித் தடமலர்போல் அங்கணு லகளந்தார்க் காம் .
|