SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காப்பு - வெண்பாதேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்காரணிந்த யானைமுகன்-காப்பு1. ஆதிவே தாந்த முதலறிய ஞானமைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடுசோதி சிற்றம்பலத்தி லாடிகின்றசுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலேபாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்தசனியனே காகமேறுந் தம்பிரானே2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்தகாரணமும் நீபிடித்த கருமத்தாலேசாலவுனையான் றொழுதே னெனைத்தொடதேசனியனே காகமேறுந் தம்பிரானே3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்துபஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றேயிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதேசனியனே காகமேறுந் தம்பிரானே4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்தவடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்திமனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்விண்டலத்தை பானுகோபன்றன்னாலேவெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதேசனியனே காகமேறுந் தம்பிரானே5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்சிலையாகவேசாப முறவேசெய்தாய்கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதேசனியனே காகமேறுந் தம்பிரானே6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்ப<ஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கைசூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதேசனியனே காகமேறுந் தம்பிரானே7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டுதுலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்தாருகாசுரனுமே சமரில் மாண்டான்தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்சனியனே காகமேறுந் தம்பிரானே8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதேசனியனே காகமேறுந் தம்பிரானே9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதேசனியனே காகமேறுந் தம்பிரானே10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதேசனியனே காகமேறுந் தம்பிரானே11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றிநெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றிசூரியன் தவத்தில் வந்த பாலா போற்றிதுலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றிகாரியன் பெயர்களுப காரா போற்றிகாசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றிமூரிகொளு நோய்மகவாமுடவா போற்றிமூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி