|
ப்ரம்ம புத்ராய வித்மஹே சித்ர வர்ணாய தீமஹி தந்நோ: கேது ப்ரசோதயாத்
அஸ்வத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ: கேது ப்ரசோதயாத்
ஸ்லோகம்
தூம்ரவர்ணம் த்விபாஹும்ச கேதும் ச விக்ருதானனம் க்ருத்ராஸன கதம் நித்யம் த்யாயேத் ஸர்வபலர்ப்தயே
(எல்லாப் பலன்களையும் கொடுக்கவல்ல கேதுவை தியானம் செய்தால், தாய் வழிப்பாட்டன் ÷க்ஷமம், உண்மையான ஞானம் பெறல், நடைப்பாதைத் தொழில்களில் லாபம் பெற (செருப்பு ரிப்பேர், பற்ற வைப்பு, காலிடப்பா, பாட்டில்கள் விற்பனை போன்ற தொழில்கள்) அயல்நாடுகளில் வாழ்ந்து தொழில் அல்லது சம்பாத்தியம், கபட மோசடிகளில் வெற்றி இவற்றிற்கு உதவி செய்வார். ஆராத ரணம், விஷ பாண்டு, குஷ்டம், தீராத வயிற்றுவலி அக்கினி பயம், சிறைத் தண்டனை, விபசார அபவாதம், துர்தேவதைகளால் ஏற்படும் மனோவியாதி இவைகளை வராமல் தடுப்பார்) |
|
|