|
ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ
யத் ப்ராதுர்ப்பவநா தவந்த்யா ஜடரா யாத்ருச்சிகாத் வேதஸாம் யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ ஸ்த்தூணா பிதாமஹ்யபூத் - தசாவதார ஸ்தோத்ரம் 5(ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகன்)
நம்பனே! நவின் றேத்தவல் லார்கள் நாத னேநர சிங்கம தானாய் உம்பர் கோனுல கேழு மளந்தாய்! ஊழி யாயினாய்! அழிமுன் னேந்தி! கம்ப காமகரி கோள்விடுத் தானே கார ணா! கடலைக்கடைந் தேனே! எம்பி ரான்! என்னை யாளுடைத்தானே! ஏழை யேனிட ரைக்களை யாயே. - பெரியாழ்வார் திருமொழி5-1-9
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம் ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி, பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய் தெள்ளய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. - திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 2-3-8
ஆடியாடி யகம்க ரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்கா வென்று, வாடி வாடுமிவ் வாணுதலே - நம்மாழ்வார் திருமொழி 2-4-1 |
|
|