13. அறியாத ஏகவெளி வீதியாகி அகண்டபரி பூரணமாய் வாசி யோகச் சுழியாகிச் சுழுமுனைச்சூட்சும முமாகித் துலங்குகின்ற விந்துவும் நாதமாகி ஒளியாகிப் பரஞ்சுடராய் உருவமாகி ஒன்றிரண்டாய் மூன்றாக உலக மெங்கும் தெளிவாக விளையாடும் ஐயா வா வா சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி
14. கைகொடுத்து மெல்லமெல்ல வாவா என்றால் கால்தூக்கி நடக்க நடை காட்டி என்னை பையவேனும் நடைவருமோ தூக்கி னாலும் படுத்திருந்து தூங்குமுன்னே பரனே யுன்றன் மெய்யருளே தான்காட்டி ஞானங்காட்டி விந்தைலர்த் தாள்காட்டி வியாளத் தொண்டு செய்தவர்க்கு இதுசமயம் ஐயா வாவா சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி
15. நலங்கள்பெற ஆறெழுத்தின் பொருளுங் காட்டி நடுகின்ற முதலெழுத்தின் பொருளுங் காட்டி துலங்குகின்ற விதிவாசல் நாலுங் காட்டிச் சூழ்ந்து நின்ற நல்வீரசொ ரூபங்காட்டி இலங்குகின்ற தெய்வானை மயில் சேவலேந்தி என்னிருகண் விழிகாணத் தோற்றம் காட்டி சதங்கைப்பதத் தினைக்காட்டும் ஐயா வா வா சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி
31. நீவா வா காத்தருள எளியே னுள்ளம் நினைத்தவரம் அருள்புரிவாய் நீதானப்பா தாய் வா வா சுவாமி நீ வாவா என்று தமியேன் கைக்குதவிதந்து ரட்சி ஐயா வா வா யென்றழைத்திட்டால் வந்தேன் முன்னே வாராதிங் கிருப்பதற்கு வழக்கும் உண்டோ தேவாதி தேவாவா ஐயா வாவா சிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி