|
ஓம் - பரப்பிரும்மம் ஸ்ரீம் - லக்ஷ்மி நாராயணர் ஹ்ரீம் - கௌரி கிரீசர் க்லீம் - ரதி மன்மதர் க்லௌம் - பூமிதேவி வராஹர் கம் - கணபதி பீஜம் (இறை வடிவம்) கணபதயே - கணபதிக்கு வணக்கம் வர - மேம் பட்டவனே வரத - விரும்பியதை அருள்பவனே சர்வஜனம் - எல்லா உயிர்களையும் மே - எனக்கு வசம் ஆனய - வசப்படுத்துவாயாக இந்த மந்திரத்தை அனுதினம் 108 முறை பாராயணம் செய்ய சகல காரியங்களும் சித்தியாகும்.
குரு, விக்நேச்வரர் ஆராதனை
மந்த்ரங்கள் குரு மூலமாகத்தான் கற்றறியப்பட வேண்டும். க்ரியைகள் ஆச்சார்யன் மூலமாகத்தான் செய்வித்துக் கொள்ளப்பட வேண்டும். இறைவனே நம் அனைவர்க்கும் ஆதிகுரு. அவர் தொடங்கி, குருமார்களின் பரம்பரை வழிவழியாகத் தோன்றி, நம்மை வாழ வைத்து வருகின்றது. அந்தக் குரு பரம்பரையை வணங்கித்தான் எந்தச் செயலையும் தொடங்க வேண்டும்.
ஸ்ரீ ஹரி ஓம் குருப்யோ நம:
1. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர: குருஸ்ஸாக்ஷõத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
2. குரவே ஸர்வ லோகாநாம் பிஷஜே பவ ரோகிணாம் நிதயே ஸர்வ வித்யாநாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
3. ஸதாசிவ - ஸமாரம்பாம் சங்கராச்சார்ய - மத்யமாம் அஸ்மத் - ஆசார்ய - பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
4. குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம: |
|
|