வாக்கு உண்டாம்: நல்ல மணமுண்டாம்: மாமலரரள் நோக்கு உண்டாம்: மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்: விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணியின் கனிந்து
பிடி அதன் உரு உமை கௌமிகு கரியது வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர விண்மனி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். |