SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நக்கீரர் அருளியதுசீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கேகார்நிற மேனிக் கற்பகக் களிறேஅல்லல் வினையை யறுத்திடு ஞானவல்லபை தன்னை மருவிய மார்பாபொங்கர வணிந்த புண்ணிய மூர்த்திசங்கரனருளிய சற்குரு விநாயகாஏழையடியே னிருவிழி காணவேழமுகமும் வெண் பிறைக் கோடும்பெருகிய செவியும் பேழை வயிறும்திருவளர் நுதலின் திருநீற் றழகுஞ்சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்நவமணி மகுட நன்மலர் முடியும்கவச குண்டல காந்தியும் விளங்கச்சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும்ஐந்து கரத்தினழகும் வீற்றிருக்கபாச வினையைப் பறித்திடு மங்குசபாசத் தொளியும் பன்மணி மார்பும்பொன் னாபரணமும் பொருந்துமுந் நூலும்மின்னா மெனவே விளங்கு பட்டழகும்உந்திச் சுழியும் உரோமத்தழகும்தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்றவேதனு மாலும் விமலனு மறியாப்பாதச் சலங்கைப் பலதொனி யார்ப்பத்தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்எண்டிசை மண்டல மெங்கு முழங்கத்தொகுது துந்ததுமி தொந்தோ மெனவேதகுகு திந்திமி தாள முழங்கஆடிய பாத மண்டர்கள் போற்றநாடிமெய்யடியார் நாளுந் துதிக்கக்கருணை புரிந்து காட்சித்தந்தருளஇருளைக் கடிந்து எங்கும் நிறையப்பொங்குபே ரொளியாய்ப் பொன்மலை போலத்திங்கள் முடியான் றிருவுள மகிழவந்த வாரண வடிவையுங் காட்டிச்சிந்தை தளர்ந்த சீரடியார்க்குஇகபர சாதன மிரண்டு முதவிஅகவினைத் துன்ப மகந்தை யறுத்துமூலா தார முச்சுடர் காட்டிவாலாம்பிகை தன் வடிவையுங் காட்டிமாணிக்க மேனி மலர்ப் பதங் காட்டிப்பேணிப் பணியப் பீஜா ட்சரமும்ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளேஆமென் றெழுந்த அட்சர வடிவும்இடைபிங் கலைகளி ரண்டினடுவேகடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்துமண்டல மூன்றும் வாய்வோர் பத்துங்குண்டலி யசைவிலி கூறிய நாடியும்பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்வாதனை செய்யு மறிவையுங் காட்டிஆறா தார அங்குச நிலையைப்பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப்பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்தபஞ்சத் திகளின் பாதமுங் காட்டிநவ்விட மௌவும் நடுவணை வீட்டில்அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்மைவிழி ஞான மனோண்மணி பாதமும்நைவினை நணுகா நாத கீதமும்கண்டு வணங்கக் கண்ணைத் திறந்துவிண்டலமான வெளியையுங் காட்டிஐம்பத் தோரெழுத் தட்சர நிலையைஇன்பச் சக்கர விதிதனைக் காட்டிபுருவ நடுவணைப் பொற்கம லாசனன்திருவிளை யாடலின் திருவடி காட்டிநாதமும் விந்தும் நடுநிலை காட்டிபோத நிறைந்த பூரணங் காட்டிஉச்சி வெளிதனி லுள்ளொளி காட்டிவச்சிரம் பச்சை மரகத முத்துப்பவள நிறைந்த பளிங்கொளி காட்டிச்சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்தத்துவத் தொண்ணூற் றாறையு நீக்கிக்கருவி காணக் களங்க மறுத்துமருவிய பிறவி மாயையை நீக்கிஉம்பர்கள் ரிஷிகள் ஒருவருங் காணாஅம்பர வெளியி னருளையுங் காட்டிச்சத்தி பராபரைசதானந்தி நிராமயநித்திய ரூபி நிலைமையுங் காட்டிஅடியவர் ஞான மமிர்தமா யுண்ணும்வடிவை யறியும் வழிதனைக் காட்டிநாசி நுனியில் நடக்குங் கலைகள்வாசிவா வென்று வாங்கிப் பிடித்துநின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்வின்மய மான விதத்தையுங் காட்டித்தராதல முழுதுந் தானாய் நிறைந்தபராபர வெளியைப் பணிந்திடக் காட்டிஎன்னுட லாவியிடம் பொரு ளியாவுந்தன்னுடை வசமாந் தவநிலை காட்டிநானெனு மாணவம் நாசம தாகத்தானென வந்து தயக்கந் தீரஆன குருவா யாட்கொண்டருளிமோன ஞான முழுது மளித்துச்சிற்பரி பூரண சிவத்தைக் காணநற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்துகுருவுஞ் சீடனும் கூடிக் கலந்துஇருவரு மொருதனி இடந்தனிற் சேர்ந்துதானந்த மாகித் தற்பர வெளியில்ஆனந்த போத அறிவைக் கலந்துபுவனத் தொழிலைப் பொய்யென றுணர்ந்துமவுன முத்திரைய மனத்தினி லிருத்திப்பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்கண்டது மாயைக் கனவெனக் காட்டிப்பாச பந்தப் பவக்கடல் நீக்கிஈச னிணையடி யிருத்தி மனத்தேநீயே நானாய் நானே நீயாய்க்காயா புரியைக் கனவென உணர்ந்துஎல்லா முன்செய லென்றே யுணரநல்லா யுன்னருள் நாட்டம்தருவாய்காரண குருவே கற்பகக் களிறேவாரண முகத்து வள்ளலே போற்றிநித்திய பூஜை நைவேத்தியமும்பத்தடியாக் கொடுத்தேன் பரமனே போற்றிஏத்தியனுதின மெளியேன் பணியக்கூற்றினை யுதைந்த குளிர்பதந் தந்துஆசுமதுர வமிர்த மளித்தும்பேசு ஞானப் பேரெனக் கருளிமனத்தில் நினைத்த மதுர வாசகம்நினைவினுங் கனவிலும் நேசம் பொருந்திஅருணகிரியா ரவ்வை போலக்கருத்து மிகுந்த கவிமழை பொழியவாக்குக் கெட்டா வாழ்வை யளித்துநோக்கரு ஞான நோக்கு மளித்துஇல்லற வாழ்க்கை யிடையூறகற்றிப்புல்லரிடத்திற் புகுந்துழ லாமல்ஏற்ப திகழ்ச்சி என்பதகற்றிக்காப்ப துனக்குக் கடன் கண்டாயேநல்லினை தீவினை நாடி வருகினுஞ்செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்தந்தையும் நீயே தாயும் நீயேஎந்தையும் நீயே தாயும் நீயேபோத ஞானப் பொருளும் நீயேநாதமும் நீயே நான்மறை நீயேஅரியும் நீயே அயனும் நீயேதிரிபுர தகனஞ் செய்தவன் நீயேசத்தியும் நீயே சதாசிவம் நீயேபுத்தியும் நீயே புராந்தகன் நீயேபத்தியும் நீயே பந்தமும் நீயேமுத்தியும் நீயே மோட்சமும் நீயேஏகமும் நீயே என்னுயிர் நீயேதேகமும் நீயே தேவனும் நீயேஉன்னருளின்றி உயிர்த்துணை காணேன்பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்வேதனை கொடுத்த மெய்யிது தன்னில்வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்மூன்றுத நாடியும் முக்கணமாகித்தோன்றும் வினையின் துன்ப மறுத்துநாலாயிரத்து நானூற்று நாற் பத்தெண்மேலாம் வினையை மெலியக் களைந்துஅஞ்சா நிலைமை யருளியே நித்தன்பஞ்சாட்சரநிலை பாலித் தெனக்குச்செல்வமும் கல்வியும் சீரும் பெருகநல்வர மேதரும் நான்மறை விநாயகாசத்திய வாக்குச் சத்தா யுதவிப்புத்திர னேதரும் புண்ணிய முதலேவெண்ணீ றணியும் விமலன் புதல்வாபெண்ணா முமையாள் பெற்றிடுந்தேவேஅரிதிரு மருகா அறுமுகன் துணைவாகரிமுக வாரணக் கணபதி சரணம்குருவே சரணம் குணமே சரணம்பெருவயிற்றோனே பொற்றாள் சரணம்கண்ணே மணியே கதியே சரணம்விண்ணே யொளியே வேந்தே சரணம்மானத வாவி மலர்த் தடத் தருகில்தானத்தில் வாழும் தற்பரா சரணம்உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்சச்சிதானந்த சற்குரு சரணம்விக்கிந விநாயகா தேவே ஓம்ஹரஹர ஷண்முக பவனே ஓம்சிவசிவ மஹாதேவ சம்போ ஓம்.