SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றிஓம் அகிலாண்ட நாயகியே போற்றிஓம் அருமறையின் வரம்பே போற்றிஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றிஓம் அரசிளங்குமரியே போற்றிஓம் அப்பர்பிணி மருந்தே போற்றிஓம் அமுத நாயகியே போற்றிஓம் அருந்தவ நாயகியே போற்றிஓம் அருள்நிறை அம்மையே போற்றிஓம் ஆலவாய்க் கரசியே போற்றி ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றிஓம் ஆதியின் பாதியே போற்றிஓம் ஆலால சுந்தரியே போற்றிஓம் ஆனந்தவல்லியே போற்றிஓம் இளவஞ்சிக் கொடியே போற்றிஓம் இமயத்தரசியே போற்றிஓம் இடபத்தோன் துணையே போற்றிஓம் ஈசுவரியே போற்றிஓம் உயிர் ஓவியமே போற்றிஓம் உலகம்மையே போற்றி ஓம் ஊழிவினை தீர்ப்பாய் போற்றிஓம் எண்திசையும் வென்றோய் போற்றிஓம் ஏகன் துணையே போற்றிஓம் ஐங்கரன் அன்னையே போற்றிஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றிஓம் ஒப்பிலா அமுதே போற்றிஓம் ஓங்கார சுந்தரியே போற்றிஓம் கற்றோர்க் கினியோய் போற்றிஓம் கல்லோர்க்கும் எளியோய் போற்றிஓம் கடம்பவன சுந்தரியே போற்றி ஓம் கல்யாண சுந்தரியே போற்றிஓம் கனகமணிக் குன்றே போற்றிஓம் கற்பின் அரசியே போற்றிஓம் கருணையூற்றே போற்றிஓம் கல்விக்கு வித்தே போற்றிஓம் கனகாம்பிகையே போற்றிஓம் கதிரொளிச் சுடரே போற்றிஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றிஓம் காட்சிக்கினியோய் போற்றிஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றிஓம் குலச்சிறை காத்தோய் போற்றிஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றிஓம் கூடற்கலாப மயிலே போற்றிஓம் கோலப் பசுங்கிளியே போற்றிஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றிஓம் சக்தி வடிவே போற்றிஓம் சங்கம் வளர்த்தாய் போற்றிஓம் சிவகாம சுந்தரியே போற்றிஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி ஓம் சிவயோக நாயகியே போற்றிஓம் சிவாநந்த வல்லியே போற்றிஓம் சிங்கார வல்லியே போற்றிஓம் செந்தமிழ் தாயே போற்றிஓம் செல்வத்துக்கரசியே போற்றிஓம் சேனைத் தலைவியே போற்றிஓம் சொக்கர் நாயகியே போற்றிஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றிஓம் ஞானாம்பிகையே போற்றிஓம் ஞானப் பூங்கோதையே போற்றி ஓம் தமிழர் குலச்சுடரே போற்றிஓம் தண்டமிழ்த் தாயே போற்றிஓம் திருவுடையம்மையே போற்றிஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றிஓம் திரிபுர சுந்தரியே போற்றிஓம் திருமலை நாயகியே போற்றிஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றிஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றிஓம் தென்னவன் செல்வியே போற்றிஓம் தேன்மொழியம்மையே போற்றி ஓம் தையல்நாயகியே போற்றிஓம் நற்கனியின் சுவையே போற்றிஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றிஓம் நல்ல நாயகியே போற்றிஓம் நீலாம்பிகையே போற்றிஓம் நீதிக்கரசியே போற்றிஓம் பக்தர்தம் திலகமே போற்றிஓம் பழமறையின் குருந்தே போற்றிஓம் பரமானந்தப் பெருக்கே போற்றிஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி ஓம் பவளவாய்க் கிளியே போற்றிஓம் பல்லுயிரின் தாயே போற்றிஓம் பசுபதி நாயகியே போற்றிஓம் பாகம் பிரிய அம்மையே போற்றிஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றிஓம் பார்வதி அம்மையே போற்றிஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றிஓம் பெரிய நாயகியே போற்றிஓம் பொன் மயிலம்மையே போற்றிஓம் பொற்கொடி அன்னையே போற்றி ஓம் மலையத்துவசன் மகளே போற்றிஓம் மங்கல நாயகியே போற்றிஓம் மழலைக் கிளியே போற்றிஓம் மனோன் மணித் தாயே போற்றிஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றிஓம் மாயோன் தங்கையே போற்றிஓம் மாணிக்க வல்லியே போற்றிஓம் மீனவர்கோன் மகளே போற்றிஓம் மீனாட்சி அம்மையே போற்றிஓம் முழுஞானப் பெருக்கே போற்றி ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி ஓம் யாழ் மொழியம்மையே போற்றிஓம் வடிவழகம்மையே போற்றிஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றிஓம் வேத நாயகியே போற்றிஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றிஓம் அம்மையே அம்பிகையே போற்றிஓம் அங்கையற்கண் அம்மையே போற்றி போற்றி