SS சிவபெருமான் 1008 போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவபெருமான் 1008 போற்றி
சிவபெருமான் 1008 போற்றி
சிவபெருமான் 1008 போற்றி

நக்கீரர்

ஓம் ஒருதலை மகனாய்  உயர்ந்தோய்  போற்றி
ஓம் மறுதலை நோய்கள் அறுப்போய்  போற்றி
ஓம் கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி  
ஓம் முடியடி தெரியா முதலே  போற்றி
ஓம் கூற்றுவன் பிணியாக் கொற்றவா போற்றி
ஓம் ஏற்றன இயற்றும் எந்தாய்  போற்றி
ஓம் இன்னதென் றறிகிலா இறையே போற்றி
ஓம் மன்னும் நிலையுடை மறையே போற்றி
ஓம் தென்னன் உவந்த மன்னனே போற்றி
ஓம் இன்னல் அழிப்பாய் போற்றி போற்றி

காரைக்கால் அம்மையார் - மூத்த திருப்பதிகம்

ஓம் அறிவாய் போற்றி அறிவிப்பாய் போற்றி
ஓம் அறிவை அறியும் பொருளே போற்றி
ஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம் எப்பொழுதும் எம்மனம் இருப்போய் போற்றி
ஓம் மறவா மக்களை மதியாய் போற்றி
ஓம் பிறவாமை காக்கும் பெரும போற்றி
ஓம் நகைப்பில் உலகம் துகைப்பாய் போற்றி
ஓம் அகப்பேய் அகந்தை அழிப்பாய் போற்றி
ஓம் ஆதியா நின்ற அருளே  போற்றி
ஓம் வேதியா உண்மைப் பொருளே போற்றி
ஓம் தென்குடந்தை மேவும் தேவா போற்றி
ஓம் பெண்மடந்தைத் தோளா போற்றி போற்றி
ஓம் ஐயாறு  நின்ற ஐயா போற்றி
ஓம் கையறு தும்பம் களைவோய் போற்றி
ஓம் திருத்துருத்தி கொண்ட தென்னவா போற்றி
ஓம் சிரித்துப் பகை வெல்லும் சிவனே  போற்றி
ஓம் திருக்கோடி காவுடைத் திருவே போற்றி
ஓம் அருட்பா உரைப்பார்க்கு அன்பா போற்றி
ஓம் பழிதுடைத்து ஆளும் பரனே  போற்றி
ஓம் குழிதண்டலையாய் போற்றி போற்றி
ஓம் மயிலையம்பதி மணியே போற்றி
ஓம் செயலை முற்றச் செய்குவாய் போற்றி
ஓம் குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி
ஓம் உளத்துள் சிறக்கும் உறவே போற்றி
ஓம் பூம்புகார்ச் சாய்க்காடு புகுந்தாய் போற்றி
ஓம் தேம்புவார் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சிராமலை மேவிய சிவனே  போற்றி
ஓம் இராமல் எங்கும் இருப்போய் போற்றி
ஓம் ஒற்றியூர் <உடைய கொற்றவா போற்றி
ஓம் வெற்றியே நல்கும் வீரா போற்றி

திருஞானசம்பந்தர் - 1,2,3, ஆம் திருமுறைகள்

ஓம் காடிடங் கொண்ட கடவுளே போற்றி
ஓம் நாடகம் நடத்தும் நாயகா போற்றி
ஓம் பாடகம் ஒலிப்ப ஆடுவாய் போற்றி
ஓம் கூடலம் பதியுறை கோவே போற்றி
ஓம் ஞாலமே நடத்தும் நாயகா போற்றி
ஓம் ஆலவாய் அமர்ந்த அண்ணலே போற்றி
ஓம் பூவில் மணமாய்ப் பிறப்பாய் போற்றி
ஓம் காவின் தென்றலே ஆவாய் போற்றி
ஓம் நாவிற் சொல்லாய் மலர்வாய் போற்றி
ஓம் நல்லவர் இதயம் ஆவாய் போற்றி
ஓம் மணியொலி சங்கொலி அணிவாய் போற்றி
ஓம் நணுகுதல் அரிய நிலையே போற்றி
ஓம் பணிசெய உவக்கும் பதியே போற்றி
ஓம் அணிகிளர் கூடல் அமர்ந்தோய் போற்றி
ஓம் அண்டவர் காணா அரனே போற்றி
ஓம் கண்டவர் நெஞ்சம் கவர்வாய் போற்றி
ஓம் பண்டும் இன்றும் நின்றாய் போற்றி
ஓம் தொண்டவர் உள்ளம் ஆண்டவா போற்றி
ஓம் செய்யனே போற்றி ஐயனே போற்றி
ஓம் சித்தனே போற்றி அத்தனே போற்றி
ஓம் சொக்கனே போற்றி சிட்டனே போற்றி
ஓம் அண்ணாலே போற்றி அங்கணா போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி போற்றி
ஓம்  அட்ட மூர்த்தியே போற்றி போற்றி
ஓம் மதுரனே போற்றி மணாளனே போற்றி
ஓம் சதுரனே போற்றி சாமியே போற்றி
ஓம் பாதி மாது பரமா போற்றி
ஓம் கோல நீறணி கோமான் போற்றி
ஓம் கோதிலார் மனத்தே மேவுவாய் போற்றி
ஓம் அங்கயர் கண்ணியோ டமர்ந்தாய் போற்றி
ஓம் அற்றவர்க்கு அற்ற அரனே போற்றி
ஓம் பாண்டி மாதேவிக்கு அருளினோய் போற்றி
ஓம் குலச்சிறை ஏத்துங்குன்றே போற்றி
ஓம் தோடுடைச் செவியாய் போற்றி போற்றி
ஓம் தூவெண் மதியைச் சூடினோய் போற்றி
ஓம் காடுடைப் பொடியைப் பூசினோய் போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி போற்றி
ஓம் என்றும் இருந்தாய் போற்றி போற்றி
ஓம் உள்ளம் கவர்ந்த வள்ளலே போற்றி
ஓம் பெற்றம் ஊர்ந்த கொற்றவா போற்றி
ஓம் ஒருமை பெண்மை உடையாய் போற்றி
ஓம் அருமையான ஐயா போற்றி
ஓம் பெருமைக்குரிய இறைவா போற்றி
ஓம் சிறுமை நோக்கிச் சினந்தாய் போற்றி
ஓம் மறையாய் ஒலிக்கும் மணியே போற்றி
ஓம் இறையாய் எங்கும் இருப்பாய் போற்றி
ஓம் ஊழியின் முடிவிலும் உள்ளாய் போற்றி
ஓம் ஆழிகள் அனைத்தும் அணிந்தாய் போற்றி
ஓம் அருநெறி அருளும் அண்ணல் போற்றி
ஓம் பெருநெறி மேவும் அருளே போற்றி
ஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம் குறியாம் இசையில் குளிர்ந்தாய் போற்றி
ஓம் நெறியாய்க் கலந்த நினைவே போற்றி
ஓம் பண்ணில் நிலவும் பாடலே போற்றி
ஓம் உண்ணி லாவிய உணர்வே போற்றி
ஓம் மண்ணில் நிலவும் மன்னா போற்றி
ஓம் கண்ணார் அமுதே போற்றி போற்றி
ஓம் யாரினும் இனியன் ஆனோய் போற்றி
ஓம் பேரிலும் பெரியன் நீயே போற்றி
ஓம் பொய்யில்லாத மனத்தாய் போற்றி
ஓம் மெய்யில் நின்ற ஐயா போற்றி
ஓம் செய்ய மேனியின் அழகா போற்றி
ஓம் பைய வினைகள் பறிப்பாய் போற்றி
ஓம் விழவின் ஒலியை விரும்புவாய் போற்றி
ஓம் முழவின் முழக்கில் முகிழ்ப்பாய் போற்றி
ஓம் கள்ள மனத்தைக் கடந்தாய் போற்றி
ஓம் உள்ளம் ஆர்ந்த உருவே போற்றி
ஓம் தவத்தில் காட்டும் முகத்தாய் போற்றி
ஓம் அவத்தை அகற்றும் அண்ணல் போற்றி
ஓம் உவப்பில் மலரும் உளமே போற்றி
ஓம் உணர்தற்கு அரியாய் போற்றி போற்றி
ஓம் அன்பிற்கு இணங்கும் ஐயனே போற்றி
ஓம் துன்பந்துடைக்கும் தூயனே போற்றி
ஓம் செய்ய நெறியில் செலுத்துவாய் போற்றி
ஓம் உய்யும் வண்ணம் உணர்த்துவாய் போற்றி
ஓம் ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றி
ஓம் புற்றின் அரவம் புனைந்தாய் போற்றி
ஓம் பற்றினார் பற்றினைப் பறிப்பாய் போற்றி
ஓம் நற்றவக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் புந்தியொன்றினோர்ப் பொருளே போற்றி
ஓம் சிந்தியா தவர்க்கும் சொந்தமே போற்றி
ஓம் தெரியத் தேனாய் இனிப்பாய் போற்றி
ஓம் அரியன வெல்லாம் அருள்வாய் போற்றி
ஓம் உரியன வெல்லாம் உவந்தாய் போற்றி
ஓம் நுதற்கண் கனலாய் போற்றி போற்றி
ஓம் உருக்கண் மணியாய் போற்றி போற்றி
ஓம் மறைக்கண் ணொளியாய் போற்றி போற்றி
ஓம் உரைக்கண் கடந்தாய் போற்றி போற்றி
ஓம் நஞ்சும் அருந்தும் நெஞ்சினோய் போற்றி
ஓம் அஞ்சினார் உருக அணைப்பாய் போற்றி
ஓம் நெஞ்சத் தாமரை நிலைப்பாய்  போற்றி
ஓம் வஞ்சர்க்கும் அருளும் வள்ளால் போற்றி
ஓம் கலைகள் அனைத்தும் கடந்தாய் போற்றி
ஓம் நிலையாய் நின்ற தலைவா போற்றி
ஓம் பொய்ம்மொழிப் பொருளைப் பொடிப்பாய் போற்றி
ஓம் செம்மொழி அருளும் சிவனே போற்றி
ஓம் பொங்கும் ஞானம் புரிவாய் போற்றி
ஓம் எம்மிறை யானே ஏந்தலே போற்றி
ஓம் இலங்கெரி யெடுத்தே ஆடுவாய் போற்றி
ஓம் புலன்விளை வினைகள் போக்குவாய் போற்றி
ஓம் கோயிற் குடிகொளும் கொற்றவா போற்றி
ஓம் நாவின் துதிகொளும் நாயகா போற்றி
ஓம் அல்லல் அறுக்கும் நல்லாய் போற்றி
ஓம் எல்லாப் பொருளும் இயக்குவாய் போற்றி
ஓம் சொல்லில் தெறிக்கும் சுவையே போற்றி
ஓம் நல்லவர் உள்ளம் நயப்பாய் போற்றி
ஓம் நுண்ணறி வாளர் கண்ணே போற்றி
ஓம் எண்ணரும் ஞானத் தின்பமே போற்றி
ஓம் அருவினை அனைத்தும் அறுப்பாய் போற்றி
ஓம் பெருவினை இயற்றும் பெரும போற்றி
ஓம் கற்றவர் உள்ளம் உற்றாய் போற்றி
ஓம் செற்றவர் சினத்தை எற்றுவாய் போற்றி
ஓம் மற்றெவர் மனத்தும் மகிழ்வாய் போற்றி
ஓம் நற்றவ நாதா போற்றி போற்றி
ஓம் சொந்தமும் துணையும் ஆனோய் போற்றி
ஓம் செந்தமிழுள்ளும் சிறந்தாய் போற்றி
ஓம் மலைமகள் மணாளா போற்றி போற்றி
ஓம் கலைபயில் அழகா போற்றி போற்றி
ஓம் நிலைபெயர் வறியாத் தலைவா போற்றி
ஓம் நினைவார்க்குரிய துணைவா போற்றி
ஓம் புண்ணியர் போற்றும் பொருளே போற்றி
ஓம் போற்றுவார் பாடல் புனைவாய் போற்றி
ஓம் பண்ணியல் மாலை நண்ணுவாய் போற்றி
ஓம் பாடுவார் நாவில் ஆடுவாய் போற்றி
ஓம் முத்தியர் உவக்கும் உத்தம போற்றி
ஓம் பத்திமைப் பாடல் நத்துவாய் போற்றி
ஓம் எத்திசை யுள்ளும் இருப்பாய் போற்றி
ஓம் அத்தனே இசையிற் பித்தனே போற்றி
ஓம் வந்தனைந்து ஏத்துவார் வரமே போற்றி
ஓம் சொந்தமென்று உரைப்பார் சுகமே போற்றி
ஓம் குற்ற மறுத்தார் குணமே போற்றி
ஓம் சொற்கவி அனைத்தும் சூழ்ந்தாய் போற்றி
ஓம் வெற்றியின் விளைவே போற்றி போற்றி
ஓம் கண்டவர் சிந்தை கவர்ந்தாய் போற்றி
ஓம் கருதி வந்தோர்க்கு உறுதியே போற்றி
ஓம் கரங்கூப்ப நேரும் காட்சியாய் போற்றி
ஓம் வரமீந்து உதவும் வள்ளல் போற்றி
ஓம் சைவம் அருளிய தெய்வமே போற்றி
ஓம் வையகம் காக்கும் ஐயனே போற்றி
ஓம் வித்தாய் அன்பு விதைப்பாய் போற்றி
ஓம் தத்துவ ஞானத் தமிழே போற்றி
ஓம் பொன்னியல் கொன்றை பூண்பாய் போற்றி
ஓம் இன்னிசை மாலை ஏந்துவாய் போற்றி
ஓம் காற்றாய்த் திரியும் அரனே போற்றி
ஓம் கனலாய் எரியும் சிவனே போற்றி
ஓம் கடலாய்ப் பரக்கும் முதலே போற்றி
ஓம் உடலாய் உயிராய் உள்ளாய் போற்றி
ஓம் மலையாய் நிலைப்பாய் போற்றி போற்றி
ஓம் மண்ணாய் வளர்வாய் போற்றி போற்றி
ஓம் வெளியாய் இருப்பாய் போற்றி போற்றி
ஓம் வேண்டுதல் வெறுப்பு வேண்டாய் போற்றி
ஓம் ஒளியாய் நிறைவாய் போற்றி போற்றி
ஓம் உருகுவார் உள்ளத்து இறங்குவாய் போற்றி
ஓம் பொருந்தும் மானம் காப்பாய் போற்றி
ஓம் புண்ணியப் பயனே போற்றி போற்றி

பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம்

ஓம் பூவின் நாயகா போற்றி போற்றி
ஓம் பூமகள் நாயகா போற்றி போற்றி
ஓம் தாவில் நாயகா போற்றி போற்றி
ஓம் தேவி நாயகன் போற்றி போற்றி
ஓம் பராபர முதலே போற்றி போற்றி
ஓம் பத்தியில் விளைவாய் போற்றிபோற்றி
ஓம் சராசரமாகி நின்றாய் போற்றி
ஓம் வெள்ளி அம்பல ஆடலாய் போற்றி
ஓம் கயல்விழி பாகம் கொண்டாய் போற்றி
ஓம் பெரியோய் போற்றி புனிதா போற்றி
ஓம் அரியாய் போற்றி எளியாய் போற்றி
ஓம் பழையோய் போற்றி புதியோய் போற்றி
ஓம் இருளாய் ஒளியாய் நின்றாய் போற்றி
ஓம் அருளா போற்றி அழகா போற்றி
ஓம் அரசால் மதுரை அமர்ந்தாய் போற்றி
ஓம் கூடற் கோயில் கொண்டாய் போற்றி
ஓம் ஆடல் அரங்காய் அமர்ந்தாய் போற்றி
ஓம் சத்தியும் சிவமும் ஆனோய் போற்றி
ஓம் முத்தியான முதலே போற்றி

மாணிக்கவாசகர் - திருவாசகம்

ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி
ஓம் தென்றிலை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் இன்றெனக்கு ஆரமுது ஆனோய் போற்றி
ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
ஓம் சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
ஓம் மின்னார் உருவ விகிர்தா போற்றி
ஓம் கன்னார் உரித்த கனியே போற்றி
ஓம் ஆவா வென்றெனக்கு அருளாய் போற்றி
ஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி

ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஓம் ஈச போற்றி இறைவா போற்றி
ஓம் தேசப் பளிங்கின் திரளே போற்றி
ஓம் அரைசே போற்றி அமுதே போற்றி
ஓம் விரைசேர் சரண வித்தகா போற்றி
ஓம் வேதி போற்றி விமலா போற்றி
ஓம் ஆதி போற்றி அறிவே போற்றி
ஓம் கதியே போற்றி கனியே போற்றி
ஓம் நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
ஓம் உடையாய் போற்றி உணர்வே போற்றி

ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஓம் ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம் சைவா போற்றி தலைவா போற்றி
ஓம் குறியே போற்றி குணமே போற்றி
ஓம் நெறியே போற்றி நினைவே போற்றி
ஓம் வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம் மூவேழ் சுற்றம் முரணுரு போற்றி
ஓம்  ஆழாமே அருளும் அரசே போற்றி
ஓம் தோழா போற்றி துணைவா போற்றி

ஓம் வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
ஓம் முத்தா போற்றி முதல்வா போற்றி
ஓம் அத்தா போற்றி அரனே போற்றி
ஓம் உரையுணர் விறந்த ஒருவ போற்றி
ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
ஓம் கருமுகி லாகிய கண்ணே போற்றி
ஓம் மன்னிய திருவருண் மலையே போற்றி
ஓம் என்னையும் ஒருவனாக்கி யிருங்கழற் போற்றி
ஓம் சென்னியில் வைத்த சேவக போற்றி

ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் அழிவிலா ஆனந்த வாரி போற்றி
ஓம் அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
ஓம் முழுவதும் இறந்த முதல்வா போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் வானகத் தமரர் தாயே போற்றி
ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
ஓம் வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

ஓம் வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
ஓம் அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
ஓம் கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி
ஓம் நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் அண்ணா மலையெம் அண்ணல் போற்றி
ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி

ஓம் ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் பற்றை அறுக்கும் கொற்றவா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
ஓம் ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி

ஓம் அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
ஓம் தத்துவ ஞானத் தெளிவே போற்றி
ஓம் அத்திக் கருளிய அரசே போற்றி
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
ஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
ஓம் மானக் கயிலை மலையாய் போற்றி
ஓம் அருளிடத் தோன்றும் அம்மான் போற்றி
ஓம் இருள்கெட அருளும் இறைவா போற்றி
ஓம் அஞ்சேல் என்றிங்கு அருள்வோய் போற்றி

ஓம் நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
ஓம் நித்தா போற்றி நிமலா போற்றி
ஓம் பத்தா போற்றி பவனே போற்றி
ஓம் பெரியாய் போற்றி பிரானே போற்றி
ஓம் அரியாய் போற்றி அமலா போற்றி
ஓம் மறையோர் கோல நெறியே போற்றி
ஓம் முறையே அருளும் முதல்வா போற்றி
ஓம் உறவே போற்றி உயிரே போற்றி
ஓம் சிறவே போற்றி சிவமே போற்றி
ஓம் மஞ்சா போற்றி மணாளா போற்றி

ஓம் பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
ஓம் மலங்கெட அருளும் மன்னே போற்றி
ஓம் இலங்கு சுடரெம் ஈசா போற்றி
ஓம் சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் குவைப்பதி மலிந்த கோவே போற்றி
ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
ஓம் கலையார் அரிகே சரியாய் போற்றி
ஓம் திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் அருவமும் உருவமும் ஆனோய் போற்றி

ஓம்  மருவிய கருணை மலையே போற்றி
ஓம் துரியமும் இறந்த சுடரே போற்றி
ஓம் தெரிவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தோளா முத்தச் சுடரே போற்றி
ஓம் ஆளான வர்கட்கு அன்பா போற்றி
ஓம் ஆரா அமுதா அருளே போற்றி
ஓம் பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி
ஓம் தாளி யறுகின் தாராய் போற்றி
ஓம் நீளொளி ஆகிய நிருத்தா போற்றி
ஓம் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

ஓம் சிந்தனைக் கரிய சிவமே போற்றி
ஓம் மந்திர மாமலை மேயோய் போற்றி
ஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
ஓம் புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி
ஓம் அலைகடன் மீமிசை நடந்தோய் போற்றி
ஓம் குருவி தனக்கும் அருளினை போற்றி
ஓம் இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
ஓம் படியுறப் பயின்ற பரனே போற்றி
ஓம் அடியொடு நடுவீறு ஆனோய் போற்றி
ஓம் நரகுறு துன்பம் அறுத்தனை போற்றி

ஓம் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
ஓம் தொழுவார் மையல் துனிப்பாய் போற்றி
ஓம் பிழைப்பன பொறுக்கும் பெரியோய் போற்றி
ஓம் குழைத்தசொன் மாலை கொள்வோய் போற்றி
ஓம் புரம்பல வெரித்த புராண போற்றி
ஓம் பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
ஓம் புயங்கப் பெருமான் போற்றி போற்றி
ஓம் புராண காரண போற்றி போற்றி

அப்பர் 4, 5, 6 - ஆம் திருமுறைகள்

ஓம் எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி
ஓம் எரிசுடர் ஆன இறைவா போற்றி
ஓம் கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
ஓம் கொல்லுங் கூற்றினை <உதைத்தாய் போற்றி
ஓம் பாடலின் ஆடலின் பண்பா  போற்றி
ஓம் பல்லூழி அனைத்தும் படைத்தாய் போற்றி
ஓம் ஒட்டகத்து ஊணா உகந்தாய் போற்றி
ஓம் உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி

ஓம் முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
ஓம் முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
ஓம் எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஓம் ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
ஓம் சில்லைச் சிரைத்தலை ஊணா போற்றி
ஓம் சென்றடைந்தார் தீவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி
ஓம் திருவீரட்டானச் செல்வா போற்றி
ஓம் சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி
ஓம் தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி

ஓம் கூம்பித் தொழுவார் குறிப்பே போற்றி
ஓம் குறிக்கோள் ஆகும் குழகா போற்றி
ஓம் பாம்பும் மதியும் அணிந்தாய் போற்றி
ஓம் பகையறப் புனலும் சுமந்தாய் போற்றி
ஓம் நீறேறு நீல மிடற்றாய் போற்றி
ஓம் நிழல்திகழ் மழுவாள் வைத்தாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னி உடையாய் போற்றி
ஓம் அடியார்க்கு ஆரமுதம் ஆனோய் போற்றி
ஓம்  பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி
ஓம் பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி

ஓம் வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
ஓம் வேழத் துரிவையும் போர்த்தாய் போற்றி
ஓம் நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி
ஓம் நாகம் அசைத்த நம்பா போற்றி
ஓம் மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மால்கடலும் மால்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் விண் துளங்க  மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் வேண்டுவ யாவும் தருவாய் போற்றி
ஓம் பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
ஓம் பார்முழுதும் ஆய பரமா போற்றி

ஓம் வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி
ஓம் விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
ஓம் துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
ஓம் நான்மறை ஆறங்கம் ஆனோய் போற்றி
ஓம் முக்கணா போற்றி முதல்வா போற்றி
ஓம் முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
ஓம் தக்கணா போற்றி தருமா போற்றி
ஓம் தத்துவனே போற்றி தாதாய் போற்றி

ஓம் கற்றவர் உண்ணுங் கனியே போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
ஓம் அற்றவர்க்கு  ஆரதமும் ஆனோய் போற்றி
ஓம் அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
ஓம் மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
ஓம் வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
ஓம் மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
ஓம் கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
ஓம் புலித்தோல் ஆடைக் குழகா போற்றி

ஓம் அங்கணனே அமரர்தம் இறைவா போற்றி
ஓம் ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி
ஓம்  மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
ஓம் நிலையாக நன்னெஞ்சில் நின்றாய் போற்றி
ஓம் நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
ஓம் இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஓம் ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனோய் போற்றி
ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
ஓம் பூதப் படையுடையாய் போற்றி போற்றி

ஓம் மன்னியசீர் மறைநான்கும் ஆனோய் போற்றி
ஓம் மறியேந்து கையானே போற்றி போற்றி
ஓம் உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
ஓம் உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
ஓம் நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
ஓம் வெண்மதியங் கண்ணி விரும்பினை போற்றி
ஓம் துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
ஓம் தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி

ஓம் சங்கரனே தத்துவனே போற்றி போற்றி
ஓம் சதாசிவனே நன்மையனே போற்றி போற்றி
ஓம் பொங்கரவா அழகியனே போற்றி போற்றி
ஓம் புண்ணியனே தெள்ளியனே போற்றி போற்றி
ஓம் அயன்மாலும் காணாத அரனே போற்றி
ஓம் அனலுருவா அன்புருவா போற்றி போற்றி
ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
ஓம் கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
ஓம் குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி

ஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
ஓம் உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
ஓம் வள்ளலே போற்றி மணாளா போற்றி
ஓம் வானவர்கோன் தோள்துனித்த மைந்தா போற்றி
ஓம் மேலோர்க்கும்  மேலோர்க்கும் மேலாய் போற்றி
ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
ஓம் புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
ஓம் தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
ஓம் திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
ஓம் சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி

ஓம் சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
ஓம் பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
ஓம் பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
ஓம் கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
ஓம் காதலிப்பார் தங்கட்கு எளியாய் போற்றி
ஓம் அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
ஓம் திருமூலட் டானனே போற்றி போற்றி
ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
ஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் பிச்சாடல் பேயொடு உகந்தாய் போற்றி
ஓம் பிறவி யறுத்திடும் பிரானே போற்றி
ஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மருவியே சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் போகாதென் நெஞ்சம் ஆள்வாய் போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி

ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வந்தென்றன் சிந்தை உவந்தாய் போற்றி
ஓம் ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பெயராதென் சிந்தை அமர்ந்தாய் போற்றி

ஓம் நீராவி யான நிழலே போற்றி
ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
ஓம் பற்றியுலகினை விடாதாய் போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பாவிப்பார் பாசம் அறுப்பாய் போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனோய் போற்றி
ஓம் விண்ணும் மண்ணும் ஆனோய் போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் இமையாது உயிராது இருந்தாய் போற்றி

ஓம் உமையாளை அகத்து அணைத்தாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
ஓம் அமையாவரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
ஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
ஓம் நீள அகலம் உடையாய் போற்றி
ஓம் அடியும் முடியும் இல்லாய் போற்றி
ஓம் அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி

ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் பண்ணார் இசையாய் நின்றாய் போற்றி
ஓம் பண்டே எம்மை ஆண்டாய் போற்றி
ஓம் பொறையுடைய பூமிநீர் ஆனோய் போற்றி
ஓம் பூதப் படையாள் புனிதா போற்றி
ஓம் நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
ஓம் நீங்காதென் உள்ளத் திருந்தாய் போற்றி

ஓம் மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
ஓம் வானோர் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் கறையுடைய கண்டம் உடையாய் போற்றி
ஓம் முன்பாகி நின்ற முதலே போற்றி
ஓம் மூவாத மேனி முக்கண்ணா போற்றி
ஓம்  அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மன்னியென் சிந்தை இருந்தாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்பாய் போற்றி

ஓம் மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஓம் ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
ஓம் உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
ஓம் படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
ஓம் பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
ஓம் சுடரில் திகழ்கின்ற சோதி போற்றி
ஓம் தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
ஓம் மாலுக்கோர் ஆழி ஈந்தாய் போற்றி

ஓம் பொய்சேர்ந்த சிந்தை போகாய் போற்றி
ஓம் போகாதென்  னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி
ஓம் மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி
ஓம் அடியார்க்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
ஓம் கூறேறா மங்கை மழுவா போற்றி
ஓம் கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
ஓம் அண்டமேழ் அன்று கடந்தாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி

ஓம் பாரோர் விண்ணேத்தப் படுவாய் போற்றி
ஓம் தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி
ஓம் தொழில் நோக்கியாளுஞ் சுடரே போற்றி
ஓம் பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
ஓம் பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
ஓம் உருகி நினைவார்க்கு உருகுவாய் போற்றி
ஓம் ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
ஓம் அருகி மிளிரும் பொன்னே போற்றி
ஓம் ஆரும் இகழப் படாதாய் போற்றி
ஓம் பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி

ஓம் பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
ஓம் மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
ஓம் பாட்டான நல்ல தொடையாய் போற்றி
ஓம் பரிசை  யறியாமை நின்றாய் போற்றி
ஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றி
ஓம் தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஓம் ஆட்டான அஞ்சும் அமர்ந்தாய் போற்றி
ஓம் அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
ஓம் சதுரா சதுரக் குழையாய் போற்றி

ஓம் சாம்பர் மெய்பசுந் தலைவா போற்றி
ஓம் எதிரா உலகம் அமைப்பாய் போற்றி
ஓம் என்றும் அருளே செய்வாய் போற்றி
ஓம் செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஓம் ஆகாய வண்ணம் உடையாய் போற்றி
ஓம் வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
ஓம் வேளாத வேள்வி உடையாய் போற்றி
ஓம் ஆட்சி உலகை உடையாய் போற்றி

ஓம் அடியார்க்கு அமுதெலாம் ஈவாய் போற்றி
ஓம் சூழ்ச்சி சிறிதும் இல்லாய் போற்றி
ஓம் மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
ஓம் முன்னியா நின்ற முதல்வா போற்றி
ஓம் மூவா மேனி உடையாய் போற்றி
ஓம் மன்னிய மங்கை மணாளா போற்றி
ஓம் மந்திரம் தந்திரம் ஆனோய் போற்றி
ஓம் எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி
ஓம் ஏறரிய ஏறுங் குணத்தாய் போற்றி
ஓம் பண்மேல் பாவித்து இருந்தாய் போற்றி

ஓம் பண்ணொடு வீணையாழ் பயின்றாய் போற்றி
ஓம் விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் முழுநீறு புனைந்த மூர்த்தீ போற்றி
ஓம் சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
ஓம் அடியார் அடிமை அறிவாய் போற்றி
ஓம் ஏற்றிசை வான்மேல் இருந்தாய் போற்றி
ஓம் எண்ணாயிர நூறு பெயராய் போற்றி
ஓம் நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
ஓம் நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
ஓம் சூலப் படையுடையாய் போற்றி போற்றி

ஓம் சுடர்த்திங்கட் கண்ணி உடையாய் போற்றி
ஓம் மாலைமகிழ்ந்து ஒருபால் வைத்தாய் போற்றி
ஓம் மேல்வினை தீர்க்கும் முனிவ போற்றி
ஓம் ஏலக் குழலி பாக போற்றி
ஓம் இடைமருது மேவிய ஈச போற்றி
ஓம் பத்துப் பல்லூழிப் பரந்தாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் திசையனைத்தும் பிறவும் ஆனோய் போற்றி
ஓம் வேதங்கள் வேள்வி பயந்தாய் போற்றி
ஓம் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனோய் போற்றி

ஓம் பூதங்கள் ஆய புராண போற்றி
ஓம் புகழப் பேரொளியாய் நின்றாய் போற்றி
ஓம் பத்தர்களுக்கு இன்பம் பயந்தாய் போற்றி
ஓம் மாகமடை மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் செய்வினைகள் நல்வினைகள் ஆனோய் போற்றி
ஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றி
ஓம் கொய்மலரங் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் கூத்தாட வல்ல குழக போற்றி
ஓம் தோலிற் பொலிந்த உடையாய் போற்றி
ஓம் சுடர்வாய் அரவுடைச் சோதி போற்றி

ஓம் கயிலாயம் இடமாக் கொண்டாய் போற்றி
ஓம் அந்திவாய் வண்ணத்து அழக போற்றி
ஓம் அணிநீல கண்டம் உடையாய் போற்றி
ஓம் முடித்தாமரை அணிந்த மூர்த்தி போற்றி
ஓம் மூவுலகும் தாமாகி நின்றாய் போற்றி
ஓம் கடித்தாமரை ஏய்ந்த கண்ணாய் போற்றி
ஓம் கல்லலகு பாணி பயின்றாய் போற்றி
ஓம் அடித்தாமரை மலர்மேல் வைத்தாய் போற்றி
ஓம் ஆக்கூரில் தோன்றிய அப்பனே போற்றி
ஓம் பதிற்று ஒருநாலும் இல்லாய் போற்றி

ஓம் உணரப் படாததொன் றில்லாய் போற்றி
ஓம் காதிற் குழையும் பெய்தாய் போற்றி
ஓம் கவலைப் பிறப்பும் காப்பாய் போற்றி
ஓம் நெய்யார் திரிசூலம் கையாய் போற்றி
ஓம் நீறேறு தோளெட்டு உடையாய் போற்றி
ஓம் மால்யானை மத்தகத்தைக் கீண்டாய் போற்றி
ஓம் மான்தோல் உடையா மகிழ்ந்தாய் போற்றி
ஓம் கோலானை அழலால் காய்ந்தாய் போற்றி
ஓம் குழவிப் பிறைசடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் ஊழித் தீயன்ன வொளியாய் போற்றி

ஓம் ஏறேறிச் செல்லும் இறைவ போற்றி
ஓம் தூண்டு சுடரனைய சோதி போற்றி
ஓம் தொல்லமரர் சூளா மணியே போற்றி
ஓம் காண்டற்கு அரியவொரு கடவுள் போற்றி
ஓம் கருதுவார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
ஓம் வேண்டுவார் வேண்டுவதே ஈவாய் போற்றி
ஓம் மெய்கிளரும் ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்யடியார் உள்ளத்து வித்தே போற்றி
ஓம் பைகிளரும் நாகம் அசைத்தாய் போற்றி
ஓம் பராபரா போற்றி பாசூரா போற்றி

ஓம் சிலந்திக்கருள் முன்னம் செய்தாய் போற்றி
ஓம் நிலந்துக்க நீர்வளிதீ ஆனோய் போற்றி
ஓம் கள்ளி முதுகாட்டில் ஆடி போற்றி
ஓம் ஏரி நிறைந்தனைய செல்வ போற்றி
ஓம் இன்னடியார்க் கின்பம் விளைப்பாய் போற்றி
ஓம் ஆரியன் போற்றி தமிழன் போற்றி
ஓம் அண்ணா மலையெம் அண்ணல் போற்றி
ஓம் ஆடல்மால் யானை <உரித்தாய் போற்றி
ஓம் அகத்தியன் பள்ளி அமர்ந்தாய் போற்றி
ஓம் கோடியாய் போற்றி குழக போற்றி

ஓம் குனிராரூர் கோயிலாக் கொண்டாய் போற்றி
ஓம் நாடிய நன்பொருள்கள் ஆனோய் போற்றி
ஓம் அம்மை பயக்கும் அமிர்தே போற்றி
ஓம் இம்மை பயக்கும் இறைவ போற்றி
ஓம் என்னெஞ்சே யுன்னில் இனியா போற்றி
ஓம் மெய்ம்மையே ஞான விளக்கே போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வ போற்றி
ஓம் முத்தமிழும் நான்மறையும் ஆனோய் போற்றி
ஓம் ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தாய் போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனோய் போற்றி

ஓம் பால விருத்தணும் ஆனோய் போற்றி
ஓம் பவளத் தடவரை போல்வாய் போற்றி
ஓம் நீற்றினையும் நெற்றிமேல் இட்டாய் போற்றி
ஓம் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டாய் போற்றி
ஓம் காற்றினும் கடிதாக நடந்தாய் போற்றி
ஓம் கண்ணின்மேற் கண்ணொன்று உடையாய் போற்றி
ஓம் கூற்றினையும் குரைகழலால் உதைத்தாய் போற்றி
ஓம் கொல்புலித் தோலாடைக் குழக போற்றி
ஓம் ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் அணியாரூர்த் திருமூலட்டானனே போற்றி

ஓம் பரியதோர் பாம்பரைமேல் ஆர்த்தாய் போற்றி
ஓம் பாசுபதம் பார்த்தற்கு அளித்தாய் போற்றி
ஓம் பெரியதோர் மலைவில்லா எய்தாய் போற்றி
ஓம் பேர்நந்தி யென்னும் பெயராய் போற்றி
ஓம் பிணியுடைய அடியாரைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பேசுவார்க்கு எல்லாம் பெரியாய் போற்றி
ஓம் மணியுடைய மாநாகம் ஆர்ப்பாய் போற்றி
ஓம் வாசுகிமா நாணாக வைத்தாய் போற்றி
ஓம் கற்றவர் விரும்புங் கனியே போற்றி
ஓம் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தாய் போற்றி

ஓம் நாட்டகத்தே நடைபலவும் நவின்றாய் போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் உடையாய் போற்றி
ஓம் காமரங்கள் பாடித் திரிவாய் போற்றி
ஓம் ஏனத் திளமருப்புப் பூண்டாய் போற்றி
ஓம் இமையவர்கள் ஏத்த இருந்தாய் போற்றி
ஓம் கானக் கல்லாற் கீழ் நிழலாய் போற்றி
ஓம் கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்ட போற்றி
ஓம் காமனையும் கரியாகக் காய்ந்தாய் போற்றி
ஓம் சோமனையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி

ஓம் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் இந்திரத்தை இனிதாக ஈந்தாய் போற்றி
ஓம் சுந்தரத்த பொடிதனைத் துதைந்தாய் போற்றி
ஓம் தூத்தூய திருமேனித் தோன்றல் போற்றி
ஓம் மந்திரத்தை மனத்துள்ளே வைத்தாய் போற்றி
ஓம் பிண்டத்தைக் காக்கும் பிரானாய் போற்றி
ஓம் பிறவி யறவி இலாதாய் போற்றி
ஓம் ஒருகாலத் தொன்றாகி நின்றாய் போற்றி
ஓம் ஊழி பலகண்டிருந்தாய் போற்றி
ஓம் பெருகாமே வெள்ளந் தவிர்த்தாய் போற்றி

ஓம் பிறப்பிடும்பை சாக்காடொன்று இல்லாய் போற்றி
ஓம் உருகாதார் உள்ளத்து நில்லாய் போற்றி
ஓம் அருகாக வந்தென்னை ஆள்வோய் போற்றி
ஓம் நன்றாக நடைபலவும் நவின்றாய் போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் வெள்ளமொரு சடைமேல் ஏற்றோய் போற்றி
ஓம் மேலோர்கண் மேலார்கண் மேலாய் போற்றி
ஓம் கள்ளங் கடிந்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் கருத்துடைய பூதப்படையாய் போற்றி
ஓம் உள்ளத்து உவகை தருவாய் போற்றி

ஓம் உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பாய் போற்றி
ஓம் பள்ளப் பரவை நஞ்சுண்டாய் போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் இரவும் பகலுமாய் நின்றாய் போற்றி
ஓம் எப்பொழுதும் என்னுள்ளத் துள்ளாய் போற்றி
ஓம் அரவம் அரையில் அசைத்தாய் போற்றி
ஓம் அனலாடி யங்கை மறித்தாய் போற்றி
ஓம் குரவங் கமழும் குற்றால போற்றி
ஓம் கோலங்கள் மேன்மேல் உகப்பாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி

ஓம் திசைக்கெலாம் தேவாகி நின்றாய் போற்றி
ஓம் ஆரா அமுதம் ஆனாய் போற்றி
ஓம் நீரார் நியமம் உடையாய் போற்றி
ஓம் கோலம் பலவும் உகப்பாய் போற்றி
ஓம் நீலம் பொலிந்த மிடற்றாய் போற்றி
ஓம் நீள்வரையின் உச்சி யிருப்பாய் போற்றி
ஓம் ஏய்ந்த வுமைநங்கை பங்க போற்றி
ஓம் ஏழூழிக்கு அப்புறம் நின்றாய் போற்றி
ஓம் ஆய்ந்து மலர்தூவ நின்றாய் போற்றி
ஓம் அளவில் பெருமை உடையாய் போற்றி

ஓம் ஓராதார் உள்ளத்தில் நில்லாய் போற்றி
ஓம் உள்ளும் அன்பர் மனத்தாய் போற்றி
ஓம் பேராதென் சிந்தையிருந்தாய் போற்றி
ஓம் பிறர்க்கென்றும் காட்சிக்கு அரியாய் போற்றி
ஓம் ஊராரும் மூவுலகத் துள்ளாய் போற்றி
ஓம் உலகை நடுங்காமற் காப்பாய் போற்றி
ஓம் ஆண்டுலகேழ் அத்தனையும் வைத்தாய் போற்றி
ஓம் அங்கங்கே சிவமாகி நின்றாய் போற்றி
ஓம் பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தாய் போற்றி
ஓம் விடையேறி வேண்டுலகத்து இருப்பாய் போற்றி
    
ஓம் விரிகதிரோன் சோற்றுத் துறையாய் போற்றி
ஓம் புடைசூழத் தேவர் குழாத்தாய் போற்றி
ஓம் பூந்துருத்தி நெய்த்தானம் மேயாய் போற்றி
ஓம் அடைவே புனல்சூழ் ஐயாற்றாய் போற்றி
ஓம் அரக்கனையும் ஆற்றல் அழித்தாய் போற்றி
ஓம் படையாப் பல்பூதம் உடையாய் போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் உலர்ந்தார் தம் அங்கம் அணிந்தாய் போற்றி
ஓம் உவகையோடு இன்னருள் செய்தாய் போற்றி
ஓம் நலந்திகழும் கொன்றைச் சடையாய் போற்றி

ஓம் தாமரையான் தலையைச் சாய்த்தாய் போற்றி
ஓம் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டாய் போற்றி
ஓம் பூமலரான் ஏத்தும் புனிதா போற்றி
ஓம் புணர்ச்சிப் பொருளாகி நின்றாய் போற்றி
ஓம் நீராகி நெடுவரைகள் ஆனோய் போற்றி
ஓம் நிழலாகி நீள்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் பாராகிப் பௌவம் ஏழானாய் போற்றி
ஓம் பகலாகி வானாகி நின்றாய் போற்றி
ஓம் அணுவாகி ஆதியாய் நின்றாய் போற்றி
ஓம் பொன்னியலும் திருமேனி <உடையாய் போற்றி

ஓம் பூங்கொன்றைத் தாரொன் றணிந்தாய் போற்றி
ஓம் மின்னியலும் வார்சடையெம் பெருமா போற்றி
ஓம் வேழத்தின் உருவிரும்பிப் போர்த்தாய் போற்றி
ஓம் தன்னியல்பார் மற்றொருவர் இல்லாய் போற்றி
ஓம் தாங்கரிய சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் கண்ணப்பர்க் சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் பாலாரும் மொழிமடவாள் பாகா போற்றி
ஓம் பசுவேறிப் பலிதிரியும் பண்பா போற்றி
ஓம் ஒருசுடராய் உலகேழும் ஆனோய் போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றாய் போற்றி

ஓம் விரிசுடராய் விளங்கொளியாய் நின்றாய் போற்றி
ஓம் விழவொலி வேள்வியொலி ஆனோய் போற்றி
ஓம் குமரனையும் மகனாக உடையாய் போற்றி
ஓம் குளிர்டவீழி மிழலையமர் குழகா போற்றி
ஓம் அடியேனை ஆளுடைய அடிகள் போற்றி
ஓம் கைவேழ முகத்தவனைப் படைத்தாய் போற்றி
ஓம் கயாசூரனை அவனாற் கொன்றாய் போற்றி
ஓம் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தாய் போற்றி
ஓம் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தாய் போற்றி
ஓம் மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தாய் போற்றி

ஓம் பொன்னொத்த திருமேனிப் புனிதா போற்றி
ஓம் பூதகணம் புடைசூழ வருவாய் போற்றி
ஓம் குண்டரொடு பிரித்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் குடமூக்கில் இடமாகிக் கொண்டாய் போற்றி
ஓம் வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தா போற்றி
ஓம் முத்தனைய முகிழ்முறுவல் உடையாய் போற்றி
ஓம் மொய்பவளக் கொடியனைய சடையாய் போற்றி
ஓம் எத்தனையும் பத்திசெய்வார்க்கு இனியாய் போற்றி
ஓம் இருநான்கு மூர்த்திகளும் ஆனோய் போற்றி
ஓம் அத்தனொடும் அம்மையெனக்கு ஆனோய் போற்றி
ஓம் அடியேமை ஆளுடைய அடிகள் போற்றி

சுந்தரர் - 7 -ஆம் திருமுறை

ஓம் ஊனே போற்றி உயிரே போற்றி
ஓம் வானாய் நிலனாய் நின்றாய் போற்றி
ஓம் அழகா போற்றி ஆரூரா போற்றி
ஓம் தலைக்குத் தலைமாலை யணிந்தாய் போற்றி
ஓம் இழைக்கும் எழுத்துக்கு <உயிரே போற்றி
ஓம் வன்னிமதி சென்னிமிசை வைத்தோய் போற்றி
ஓம் வேலைவிடம் உண்டமணி கண்டா போற்றி
ஓம் அண்டம தாய ஆதியே போற்றி
ஓம் அல்லல் களைந்தே ஆள்வாய் போற்றி
ஓம் நொந்தா ஒண்சுடரே எந்தாய் போற்றி

ஓம் தேனே இன்னமுதே கோனே போற்றி
ஓம் பரமா போற்றி பாசுபதா போற்றி
ஓம் மெய்யே நின்றெரியும் விளக்கே போற்றி
ஓம் மன்னே போற்றி மாமணி போற்றி
ஓம் பொன்னார் மேனி அண்ணா போற்றி
ஓம் இமையோர் நாயகா இறைவா போற்றி
ஓம் உமையோர் கூறுடை உருவா போற்றி
ஓம் நீறார் மேனி நிமலா போற்றி
ஓம் குழகா போற்றி குணக்கடலே போற்றி
ஓம் முத்தே போற்றி வித்தே போற்றி

ஓம் பண்ணிடைத் தமிழை ஒப்பாய் போற்றி
ஓம் பழத்தினிற் சுவையே ஒப்பாய் போற்றி
ஓம் கண்ணிடை மணியை ஒப்பாய் போற்றி
ஓம் கடுவிருட்சுடரை ஒப்பாய் போற்றி
ஓம் மண்ணிடை அடியார்க் காப்பாய் போற்றி
ஓம் பாடுவார் பசியினைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பரவுவார் பிணைகளைக் களைவாய் போற்றி
ஓம் அரும்பே போற்றி அலகே போற்றி
ஓம் அமுதே போற்றி தேனே போற்றி
ஓம் வான நாயகா போற்றி போற்றி...

ஓம் வழித்துணை மருந்தே போற்றி போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி போற்றி
ஓம் மறைதரும் பொருளே போற்றி போற்றி
ஓம் ஏழிசை ஆனோய் போற்றி போற்றி
ஓம் இசையின் பயனே போற்றி போற்றி
ஓம் இன்னமுது ஆனோய் போற்றி போற்றி
ஓம் கார்க்குன்ற மழையே போற்றி போற்றி
ஓம் கலைக்கெலாம் பொருளே போற்றி போற்றி
ஓம் பார்க்கின்ற உயிரே போற்றி போற்றி
ஓம் பரிந்தெனை ஆண்டாய் போற்றி போற்றி

ஓம் பகலுங் கங்குலும் ஆனோய் போற்றி
ஓம் ஓங்காரத் துருவாகி நின்றாய் போற்றி
ஓம் வான்அங்கத்தவர் தம் வளமே போற்றி
ஓம் வளமார் அடியார் தம் உளமே போற்றி
ஓம் பல்லடியார் பணிக்குப் பரிவாய் போற்றி
ஓம் பாடியாடும் பத்தர்க் கனியாய் போற்றி
ஓம் நல்லடியார் மனத்தூறும் நறவே போற்றி
ஓம் நாமுறு குறைநீக்கும் நலமே போற்றி

ஓம் பித்தா பிறைசூடி பெருமானே  போற்றி
ஓம் தடுத்தாட் கொண்ட நாதா  போற்றி
ஓம் மலையான் மடந்தை மணவாளா  போற்றி
ஓம் பல்பல வண்ணத் தரசே போற்றி
ஓம் பாரோடு விண்ணும் ஆனாய் போற்றி
ஓம் பகலும் இரவும் ஆனாய் போற்றி
ஓம் கடலும் வரையும் ஆனாய் போற்றி
ஓம் நீரும் நெருப்பும் ஆனாய் போற்றி
ஓம் காற்றும் வெளியும் ஆனாய் போற்றி
ஓம் ஆணும் பெண்ணும் ஆனாய் போற்றி

ஓம் ஆல நீழலில் அமர்ந்தாய் போற்றி
ஓம் அகரம் முதலின் எழுத்தானாய் போற்றி
ஓம் சொல்லுவார் சொற்பொருள் ஆனாய் போற்றி
ஓம் பண்ணிற் பாட்டு ஆனாய் போற்றி
ஓம் பத்தர் சித்தம் பரவினாய் போற்றி
ஓம் புலவர்க் கருளும் பெம்மான் போற்றி
ஓம் ஆக்கும் அழிவும் உடையாய் போற்றி
ஓம் மூவர் இருவர் முதல்வா போற்றி
ஓம் சொல்ல வொண்ணாச் சோதீ போற்றி
ஓம் உலகம் எல்லாம் உடையாய் போற்றி

ஓம் படிக்காசு வைத்த பரமா போற்றி
ஓம் குற்றம் பொறுத்த ஈசுவரா போற்றி
ஓம் சிந்திப்பார் நெல்லிக் கனியே போற்றி
ஓம் சிறியார் பெரியார் துணையே போற்றி
ஓம் நஞ்சுண்ட கண்டனே போற்றி போற்றி
ஓம் கங்கைச் சடையீர் போற்றி போற்றி
ஓம் கண்ணு மூன்றுடையீர் போற்றி போற்றி
ஓம் உமைபங்குடையீர் போற்றி போற்றி
ஓம் பரங்கிரி நாதா  போற்றி போற்றி
ஓம் பொறிவாயில் ஐந்தவித்தான் போற்றி போற்றி

ஓம் அமரர் பெருமான் போற்றி போற்றி
ஓம் அரத்துறை நாதா  போற்றி போற்றி
ஓம் எழுத்தக்குயிர் போன்றாய் போற்றி போற்றி
ஓம் பிரமற்குப் பிரானே போற்றி போற்றி
ஓம் அஞ்சைக் களத்தப்பா போற்றி போற்றி
ஓம் ஓணகாந்தீசுவரா போற்றி போற்றி
ஓம் வெள்ளை நீற்றா போற்றி போற்றி
ஓம் வன்மீக நாதா போற்றி போற்றி
ஓம் மதகரி உரித்தாய் போற்றி  போற்றி
ஓம் முப்புரம் எரித்தாய் போற்றி போற்றி

ஓம் அருமலரோன் சிரமறுத்தாய் போற்றி போற்றி
ஓம் காவ தேசுவரா போற்றி போற்றி
ஓம் பூவண நாதா போற்றி போற்றி
ஓம் துறையூர் நாதா போற்றி போற்றி
ஓம் மாற்றறி வரதா போற்றி போற்றி
ஓம் இரத்தின மலைநாதா போற்றி போற்றி
ஓம் அமிழ்த கலைநாதா போற்றி போற்றி
ஓம் நாவல் ஈசுவரா போற்றி போற்றி
ஓம் மாலட்சுமி நாதா போற்றி போற்றி
ஓம் கோளிலி நாதா போற்றி போற்றி

ஓம் திருமேற்றளி நாயகா போற்றி போற்றி
ஓம் நீலகண்டா போற்றி போற்றி
ஓம் பால்வண்ணநாதா போற்றி போற்றி
ஓம் வச்சிரத்தம்ப நாதா போற்றி போற்றி
ஓம் பழமலை நாதா போற்றி போற்றி
ஓம் காளத்தி நாதா போற்றி போற்றி
ஓம் வெள்ளடையப்பா போற்றி போற்றி
ஓம் இடையாற்று நாதா போற்றி போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகா போற்றி போற்றி
ஓம் விருந்திட்ட வரதா போற்றி போற்றி

ஓம் அழகிய வரதா போற்றி போற்றி
ஓம் மாணிக்க நாதா போற்றி போற்றி
ஓம் நற்றுணையப்பா போற்றி போற்றி

திருச்சிற்றம்பலம்

சேரமான் பெருமாள் நாயனார் 11- ஆம் திருமுறை
 
ஓம் வஞ்சம் கடிந்து வாழ்த்துவோய் போற்றி
ஓம் தஞ்சம் கொடுத்துத் தாங்குவாய் போற்றி
ஓம் முக்கணன் என்னும் முனிவா போற்றி
ஓம் சிக்கெனப் பிடிப்போர் சிந்தையோய் போற்றி
ஓம் புண்ணியம் புரியும் திண்ணியோய் போற்றி
ஓம் காரணங் காட்டும் கனியே போற்றி
ஓம் காரியம் நடத்தும் கடவுளே போற்றி
ஓம் அப்பனும் அம்மையும் ஆனோய் போற்றி
ஓம் ஒப்பள வில்லா உருவோய் போற்றி
ஓம் தொடங்கிய வாழ்க்கையில் தொடர்வோய் போற்றி
ஓம் அடங்கலும் வேட்கையை அறுப்போய் போற்றி
ஓம் சித்தம் தெளிய வைத்தாய் போற்றி
ஓம் பத்தி நெறியினைப் படைத்தாய் போற்றி

சேக்கிழார் - 12- ஆம் திருமுறை

ஓம் அண்ணாமலைமேல் அணிமலை போற்றி
ஓம் ஆரா அன்பின் கனியே போற்றி
ஓம் சடையாய் போற்றி சங்கரா போற்றி
ஓம் விடையாய் போற்றி வெண்ணீற்றாய் போற்றி
ஓம் உடையாய் போற்றி உத்தமா போற்றி
ஓம் வானவர் உய்ய நஞ்சுண்டாய் போற்றி
ஓம் தானவர் புரங்கள் எரித்தாய் போற்றி
ஓம் காலனைக் காய்ந்து நட்டாய் போற்றி

 நிரம்ப அழகிய தேசிகர்

ஓம் தாயென இரங்கும் உளத்தோய் போற்றி
ஓம் பனிமதி சூடுசெஞ் சடையோய் போற்றி
ஓம் அளியின் நீடு நிதியம் போற்றி
ஓம் அகில உலக நாதனே போற்றி
ஓம் ஒளிகொள் தேவ தேவனே போற்றி
ஓம் அத்தனே அகில அரசனே போற்றி
ஓம் திங்கட் பாதிசேர் சடையோய் போற்றி
ஓம் சோதியே அழிவி லானே போற்றி
ஓம் ஏகனே அம்பிகா பதியே போற்றி
ஓம் புனிதனே இராம நாதனே போற்றி

குலசேகர பாண்டியர் - இலிங்க புராணம்

ஓம் கிடைத்தற்கு அரிய பொருளே போற்றி
ஓம் கேடின்று உயர்ந்த சுடரே போற்றி
ஓம் அன்பர் படியும் கடலே போற்றி
ஓம் எரியுங் கனலாய் மதியாய் போற்றி
ஓம் உருவே அருவே சின்மயமே போற்றி
ஓம் துரியா தீதமாய் நின்றாய் போற்றி
ஓம் ஒன்றாய் அனைத்துமாய் நின்றாய் போற்றி
ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் எங்கும் உறைந்தருள் இறைவா போற்றி
ஓம் வெள்ளியம் பொருப்பின் விமலா போற்றி
ஓம் அருட்பெருங்கடலே அமலா போற்றி
ஓம் அடியவர்க்கு அருளும் அண்ணலே போற்றி
ஓம் ஏற்றுயர் கொடியாய் போற்றி போற்றி
ஓம் ஈறிலா முதலே போற்றி போற்றி
ஓம் மலைமகள் கொழுந போற்றி போற்றி
ஓம் சுடரொளிப் பிழம்பே போற்றி போற்றி

மறைஞானசம்பந்தர் - சிவதருமோத்தரம்

ஓம் கன்றிய காலனைக் காய்ந்தோய் போற்றி
ஓம் வென்றிவேல் வேடனை வீட்டினோய் போற்றி
ஓம் இடுபலி கொண்டுணி என்போய் போற்றி
ஓம் இருவினை தீர்ந்திடும் என்போய் போற்றி
ஓம் நடநவிலுந் தொழிலின் நல்லோய் போற்றி
ஓம் மடலவிழ் கொன்றை மாலையோய் போற்றி
ஓம் படிதனிற் காசிப் பதியோய் போற்றி
ஓம் பல்லுயிரிக் கெல்லாம் பதியோய் போற்றி

வரதுங்கராம பாண்டியர் - பிரமோத்தரகாண்டம்

ஓம் கையார் மழுவெம் படையாய் போற்றி
ஓம் பையாடு அரவத் தணியாய் போற்றி
ஓம் கருணைக் கடலே ஐயா போற்றி
ஓம் படர்செஞ் சடையாய் விமலா போற்றி
ஓம் தொத்ததார் இதழித் தொடையாய் போற்றி
ஓம் சத்தாகிய சிற்குணனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே அத்தா போற்றி
ஓம் கமலாலயனுக்கு அருள்வோய் போற்றி
ஓம் கயிலை மலையாய் போற்றி போற்றி

கோனேரியப்ப நாவலர் - உபதேச காண்டம்

ஓம் எந்தாய் போற்றி இறைவா போற்றி
ஓம் தந்தை போற்றி தருமமே போற்றி
ஓம் முந்தோய் போற்றி முக்கணா போற்றி
ஓம் செந்தழற் கொழுந்தே செய்யனே போற்றி
ஓம் அரியயற்கு எட்டா நிருத்தா போற்றி
ஓம் உயிர்க்குயிராய் வருகின்ற உயர்வே போற்றி
ஓம் திரிபுரம் எரித்த சிவனே போற்றி
ஓம் தவம்புரி தவமே தலைவா போற்றி

சிவஞான சுவாமிகள் காஞ்சிப் புராணம்

ஓம் கறைமணி மிடற்றோய் கடலே போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கொழுந்தே போற்றி
ஓம் பூரண முதலே சிவனே போற்றி
ஓம் நெஞ்சக விளக்கே வள்ளால் போற்றி
ஓம் நிறைபரஞ் சுடரே போற்றி போற்றி

இராமகிருஷ்ணர் மடம் தொகுப்பு திரு அருள் மொழி

ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் காலை முளைத்த கதிரே போற்றி
ஓம் கண்ணிற் கருமணி ஆவோய் போற்றி
ஓம் பண்ணிசையாகி நிற்பாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்போய் போற்றி
ஓம் ஞாலத்தார் தொழும் நன்மையே போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் நல்லோய் போற்றி நன்மணி போற்றி
ஓம் மால்வரை போற்றி மாதவ போற்றி
ஓம் வேலவன் தாதாய் போற்றி போற்றி

ஓம் சொல்லுவார் சொற்களைச் சோதிப்பான் போற்றி
ஓம் மன்னா போற்றி மறைவலா போற்றி
ஓம் இன்னமுது போற்றி இணையிலீ போற்றி
ஓம் கன்னல் போற்றி கரும்பு போற்றி
ஓம் கட்டியே போற்றி கதியே போற்றி
ஓம் சிட்டன் போற்றி சேகரன் போற்றி
ஓம் தோணியும் ஏணியும் ஆனவன் போற்றி
ஓம் நான்முகன் போற்றி நாரணன் போற்றி
ஓம் தேனன் போற்றி தேவர்பிரான் போற்றி
ஓம் வாராச் செல்வம் வருவிப்பான் போற்றி

ஓம் சிலந்திக் கருள்முனம் செய்தான் போற்றி
ஓம் எப்பொருட்கும் பொதுவானான் போற்றி போற்றி
ஓம் முளையே போற்றி முத்தே போற்றி
ஓம் இளைஞா யிற்றின் சோதியே போற்றி
ஓம் கற்றோர்களுக்கோர் அமுதே போற்றி
ஓம் நற்றுணை அருளும் நாயகா போற்றி
ஓம் புகழேயல்லாது பழியிலான் போற்றி
ஓம் கனலைக் கண்ணில் உடையோய் போற்றி
ஓம் புனலைச் சடையில் புனைந்தோய் போற்றி
ஓம் கால காலனாய் நின்றாய் போற்றி
ஓம் கால கண்டனே போற்றி போற்றி
தேவாரத் தலப்  போற்றி

ஓம் தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் வேட்கள நன்நகர் மேயாய் போற்றி
ஓம் நெல்வாயில் வளர் நிதியே போற்றி
ஓம் கழிப்பாலை உறை கரும்பே போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி

ஓம் மயேந்திரப் பள்ளி மன்னா போற்றி
ஓம் தென்திரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் கலிக்காமூர் வளர் கண்ணே போற்றி
ஓம் சாய்க்காடினிதுறை சதுரா போற்றி
ஓம் பல்லவனீச்சரப் பரனே போற்றி

ஓம் வெண்காடுகந்த விகிர்தா போற்றி
ஓம் கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் குருகாவூருறை குணமே போற்றி
ஓம் காழியுள் மேய கடலே போற்றி
ஓம் கோலக்காவிற் கோவே போற்றி

ஓம் வேளூர் மேவிய வித்தகா போற்றி
ஓம் கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி
ஓம் கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி
ஓம் நின்றியூர் வளரும் நிதியே போற்றி
ஓம் திருப்புன் கூரமர் திருவே போற்றி

ஓம் நீடுர் நிருத்தநின் நீளடி போற்றி
ஓம் அன்னியூர் வளர் அரனே போற்றி
ஓம் வேள்விக்குடி வளர் வேதா போற்றி
ஓம் எதிர்கொள்பாடி எம் இறைவா போற்றி
ஓம் மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி

ஓம் குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
ஓம் கருப்பறியல்நகர் காப்பாய் போற்றி
ஓம் குரக்குக்காவிற் குருவே போற்றி
ஓம் வாழொளிபுத்தூர் வாழ்வே போற்றி
ஓம் மண்ணிப்படிக்கரை மணியே போற்றி

ஓம் ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி
ஓம் கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி
ஓம் நாரையூர் நன்நகர் நலமே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் பந்தணை நல்லூர்ப் பசுபதீ போற்றி

ஓம் கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி
ஓம் கோடிக்காவுடைக் கோவே போற்றி
ஓம் திருமங்கலக்குடித் தேனே போற்றி
ஓம் பனந்தாள் தாடகேச் சரணே போற்றி
ஓம் ஆப்பா டிப்பதி அமலா போற்றி

ஓம் சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி
ஓம் திருந்துதேவன்குடித் தேவா போற்றி
ஓம் வியலூர் இருந்தருள் விமலா போற்றி
ஓம் கொட்டையூரிற்கோ டீச்சரா போற்றி
ஓம் இன்னம்பர் ஈசநின் இணையடி போற்றி

ஓம் புறம்பயப் பதிவாழ் புண்ணியா போற்றி
ஓம் விசய மங்கை வேதியா போற்றி
ஓம் திருவைகாஉறை சிவனே போற்றி
ஓம் வடகுரங்காடு துறையாய் போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி

ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் நெய்த்தானத்து நெய் ஆடியே போற்றி
ஓம் பெரும்புலியூர்ப்பெரு மானே போற்றி
ஓம் மழபாடி வயிரத் தூணே போற்றி
ஓம் பழுவூர் மேவிய பண்பா போற்றி

ஓம் கானூர் மேயசெங் கரும்பே போற்றி
ஓம் அன்பிலா லந்துறை அரசே போற்றி
ஓம் வடகரை மாந்துறை வள்ளால் போற்றி
ஓம் திருப்பாற் றுறையுறை தேவே போற்றி
ஓம் ஆனைக் காவுறை ஆதீ போற்றி

ஓம் பைஞ்ஞீலி அண்ணல்நின் பாதம் போற்றி
ஓம் பாச்சிலாச் சிராமப் பரனே போற்றி
ஓம் ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி
ஓம் வாட்போக்கி மலையுறை வாழ்வே போற்றி
ஓம் கடம்பந் துறைவளர் கடலே போற்றி

ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி
ஓம் மூக்கிச் சரத்து முதல்வா போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி

ஓம் நெடுங்களம் இனிதமர் நிமலா போற்றி
ஓம் மேலைக்காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் ஆலம் பொழிலுறை அரனே போற்றி
ஓம் திருப்பூந்துருத்தித் தேசிக போற்றி
ஓம் கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி

ஓம் சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி
ஓம் வேதி குடியுறை விஜய போற்றி
ஓம் தென்குடித் திட்டைத் தேவே போற்றி
ஓம் திருப்புள்ள மங்கைத் திருவே போற்றி
ஓம் சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி

ஓம் கருகாவூருறை கடம்பா போற்றி
ஓம் திருப்பாலைத்துறைச் செல்வா போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமநின் நற்பதம் போற்றி
ஓம் ஆவூர்ப்பசுபதீச் சரனே போற்றி
ஓம் சத்திமுத்தச் சதுரா போற்றி

ஓம் பட்டீச்சரமுறை பரமா போற்றி
ஓம் பழையாறை வடதளியாய் போற்றி
ஓம் வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
ஓம் குடமூக் கமர்கும் பேசா போற்றி
ஓம் கீழ்க்கோட்டத்தெங் கூத்தா போற்றி

ஓம் குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி
ஓம் நாகேச்சரம்வாழ் நாதா போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் தென்குரங்காடு துறையாய் போற்றி
ஓம் நீலக் குடியுறை நிருத்தா போற்றி

ஓம் வைகல் மாடக் கோயிலாய் போற்றி
ஓம் நல்லம் நடம்பயில் நாதா போற்றி
ஓம் கோழம் பத்துறை கோவே போற்றி
ஓம் ஆவடு தண்துறை அமரா போற்றி
ஓம் துருத்தி ஈசநின் துணையடி போற்றி

ஓம் அழுந்தூர் ஆளும் அரசே போற்றி
ஓம் மயிலாடுந்துறை மணியே போற்றி
ஓம் திருவிளநகர் உறை திருவே  போற்றி
ஓம் பரியல் வீரட்டப் பரமா போற்றி
ஓம் செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி

ஓம் நனிபள்ளி வளரும் நம்பா போற்றி
ஓம் வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
ஓம் தலைச்சங் காடமர் தத்துவ போற்றி
ஓம் ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி
ஓம் கடவூர்க்கால வீரட்டா போற்றி

ஓம் கடவூர் மயானக் கடவுளே போற்றி
ஓம் வேட்டக் குடியின் மேயோய் போற்றி
ஓம் திருத்தெளிச்சேரிச் சிவனே போற்றி
ஓம் தரும புரம்வளர் தாயே போற்றி
ஓம் நள்ளாறுடைய நாதா போற்றி

ஓம் கோட்டாற மருங்குழகா போற்றி
ஓம் அம்பர்க் பெருந்திருக் கோயிலாய் போற்றி
ஓம் அம்பர்மாகாளத் தரனே போற்றி
ஓம் மீயச் சூருறை விண்ணவ போற்றி
ஓம் மீயச் சூரிளங் கோயிலாய் போற்றி

ஓம் திலதைப் பதிவாழ் திலகமே போற்றி
ஓம் பாம்புர நன்நகர்ப் பரமனே போற்றி
ஓம் சிறுகுடிப் பிறைமுடிச் செல்வா போற்றி
ஓம் விண்ணிழி வீழி மிழலையாய் போற்றி
ஓம் வன்னியூர் மேவிய மைந்தா போற்றி

ஓம் கருவிலி அமருங் கண்ணே போற்றி
ஓம் பேணு பெருந்துறைப் பெம்மான் போற்றி
ஓம் நறையூர் சித்தீச் சரனே போற்றி
ஓம் அரிசிற்கரைப்புத் தூரா போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி

ஓம் கலைய நல்லூர்க் கடவுளே போற்றி
ஓம் கருக்குடி அண்ணல்நின் கழல்கள் போற்றி
ஓம் திருவாஞ் சியம்வளர் தேவே போற்றி
ஓம் நன்நிலத் துப்பெருங் கோயிலாய் போற்றி
ஓம் கொண்டீச் சரத்துக் கோவே போற்றி

ஓம் திருப்பனை யூர்வளர் தேவே போற்றி
ஓம் விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி
ஓம் புகலூர் மேவிய புண்ணியா போற்றி
ஓம் புகலூர் வர்த்தமானீச்சரா போற்றி
ஓம் இராமன தீச்சரத் திறைவா போற்றி

ஓம் பயற்றூ ருறையும் பண்பா போற்றி
ஓம் செங்காட்டங்குடிச் சேவகா போற்றி
ஓம் மருகற் பெருமநின் மலரடி போற்றி
ஓம் சாத்த மங்கைச் சம்புவே போற்றி
ஓம் நாகைக்கா ரோணம் நயந்தாய் போற்றி

ஓம் சிக்கல் நகர்வளர் செல்வா போற்றி
ஓம் கீழ்வேளூரான் கேடிலீ போற்றி
ஓம் தேவூர் ஆதிநல் தேனே போற்றி
ஓம் பள்ளிமுக் கூடற் பரனே போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

ஓம் ஆரூர் அரநெறி அப்பா போற்றி
ஓம் பரவையுண் மண்தளிப் பரனே போற்றி
ஓம் விளமர் உகந்த வித்தகா போற்றி
ஓம் கரவீ ரச்சங் கரனே போற்றி
ஓம் பெருவேளூருறை பெரும போற்றி

ஓம் தலையாலங்கா டமர்ந்தாய் போற்றி
ஓம் குடவாயில் மன்னிய குருவே போற்றி
ஓம் சேறைச் செந்நெறிச் செல்வா போற்றி
ஓம் நாலூர் மயான நாடகா போற்றி
ஓம் கடுவாய்க் கரைப்புத் தூரா போற்றி

ஓம் திருஇரும்பூளைத் தேவே போற்றி
ஓம் அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றி
ஓம் அவளிவள் நல்லூர் அரசே போற்றி
ஓம் பரிதி நியமப் பரனே போற்றி
ஓம் வெண்ணிவாழ் விமலநின் மெல்லடி போற்றி

ஓம் பூவனூர்ப் புனிதநின் பொன்னடி போற்றி
ஓம் பாதாளீச்சரப் பரமா போற்றி
ஓம் திருக்களர் மேவிய தேவே போற்றி
ஓம் ஓங்குசிற்றேமத்து ஒருவா போற்றி
ஓம் உசாத்தா னத்தமர் <உறவே போற்றி

ஓம் இடும்பா வனத்துறும் இறைவா போற்றி
ஓம் கடிக்குளத் துறைகடல் அமுதே போற்றி
ஓம் தண்டலை நீணெறித் தாயே போற்றி
ஓம் கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி
ஓம் வெண்டுறை மேவிய வேதா போற்றி

ஓம் கொள்ளம் பூதூர்க் கோவே போற்றி
ஓம் பேரெயில் பெருமநின் பெய்கழல் போற்றி
ஓம் கொள்ளிக் காடமர் கொற்றவ போற்றி
ஓம் திருத்தெங்கூர் வளர் தேனே போற்றி
ஓம் நெல்லிக் காஉறை நித்திய போற்றி

ஓம் நாட்டியத்தான்குடி நம்பீ போற்றி
ஓம் திருக்காறாயில் தியாகா போற்றி
ஓம் கன்றாப்பூர் நடுதறியே போற்றி
ஓம் வலிவலம் வந்தருள் வரதா போற்றி
ஓம் கைச்சின மேவிய கண்ணுதல் போற்றி

ஓம் கோளிலி உறையுங் கோவே போற்றி
ஓம் வாய்மூரடிகள் இன் மலர்ப்பதம் போற்றி
ஓம் மறைக்காடுறையும் மணாளா போற்றி
ஓம் அகத்தியான் பள்ளி ஐயா போற்றி
ஓம் கோடிக் கோயிற் குழகா போற்றி

ஓம் திருவிடை வாய்வளர் தேவா போற்றி
ஓம் கோணமாமலைமடி கொண்டாய் போற்றி
ஓம் அண்ணல்கே தீச்சரத்து அடிகள் போற்றி
ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் ஆப்பனூர் வளர் ஐயா போற்றி

ஓம் திருப்பரங்குன்றிற் செல்வா போற்றி
ஓம் ஏடகத்தெந்தை நின் இணையடி போற்றி
ஓம் கொடுங்குன்றமருங் கோவே போற்றி
ஓம் திருப்புத்தூர்த்திருத் தளியாய் போற்றி
ஓம் திருப்புனவாயிலெம் செல்வா போற்றி

ஓம் மால்செய்ராமேச வாழ்வே போற்றி
ஓம் ஆடானையுறை ஆதீ போற்றி
ஓம் கானப்பேருறை காளாய் போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் சுழியல் வளருந் துணைவா போற்றி

ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் நெல்வேலியுறை செல்வா போற்றி
ஓம் அஞ்சைக் களத்துறை அப்பா போற்றி
ஓம் அவிநா சிவ்வளர் அரனே போற்றி
ஓம் முருகன் பூண்டி முதல்வா போற்றி

ஓம் திருநணா வளரும் திருவே போற்றி
ஓம் கொடிமாடச் செங்குன்றாய் போற்றி
ஓம் வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி
ஓம் பாண்டிக் கொடுமுடிப் பழையோய் போற்றி
ஓம் கருவூர் ஆனிலைக் கண்மணி போற்றி

ஓம் நெல்வாயில் அரத்துறையாய் போற்றி
ஓம் பெண்ணா கடத்துப் பெரும போற்றி
ஓம் கூடலையாற்றூர்க் கோவே போற்றி
ஓம் எருக்கத்தம்புலியூர் எந்தாய் போற்றி
ஓம் திருத்தினை நகரச் சிவனே போற்றி

ஓம் சோபுர மேவிய சொக்கா போற்றி
ஓம் அதிகைவீரட்டத் தழகா போற்றி
ஓம் நாவலூர் மேவிய நம்பா போற்றி
ஓம் முதுகுன்றமர்ந்த முனிவா போற்றி
ஓம் நெல்வெண்ணெய் மேவிய நிருத்தா போற்றி

ஓம் கோவல்வீரட்டக் கோமான் போற்றி
ஓம் அறையணி நல்லூர் அரசே போற்றி
ஓம் இடையாறிடையமர் ஈசா போற்றி
ஓம் வெண்ணெய்நல்லூருறை மேலோய் போற்றி
ஓம் துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி

ஓம் வடுகூர் அடிகள் மாணடி போற்றி
ஓம் திருமாணி குழிவளர் தேவே போற்றி
ஓம் பாதிரிப் புலியூர்ப் பரம போற்றி
ஓம் முண்டீச் சரத்து முதல்வா போற்றி
ஓம் புறவார் பனங்காட்டூரா போற்றி

ஓம் திருஆமாத்தூர்த் தேவே போற்றி
ஓம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
ஓம் ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
ஓம் கச்சிமேற்றளியுறை கடலே போற்றி
ஓம் ஓணகாந்தன் தளியாய் போற்றி

ஓம் கச்சிஅநேகதங்காவதா போற்றி
ஓம் கச்சிநெறிக் காரைக் காடா போற்றி
ஓம் குரங்கணில் முட்டங் குலவினாய் போற்றி
ஓம் மாகறல் வாழும் மருந்தே போற்றி
ஓம் ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி

ஓம் வன்பார்த்தான் பனங்காட்டூரா போற்றி
ஓம் திருவல்லம் மேவிய தீவணா போற்றி
ஓம் மாற்பேறாள்உமை மணாளா போற்றி
ஓம் திருவூறல்வளர் தேவே போற்றி
ஓம் இலம்பையங் கோட்ரூர் ஈசா போற்றி

ஓம் விற்கோலத்துறை வீரா போற்றி
ஓம் ஆலங்காட்டெம் அடிகள் போற்றி
ஓம் பாசூர் அமர்ந்த பசுபதீ போற்றி
ஓம் வெண்பாக்கத்துறை விமலா போற்றி
ஓம் கள்ளில் மேய கனியே போற்றி

ஓம் காளத்தி நாதநின் கழலிணை போற்றி
ஓம் ஒற்றி யூருடை ஒருவ போற்றி
ஓம் வலிதா யம்உறை வள்ளால் போற்றி
ஓம் வடதிரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் வேற்காட்டு வேத வித்தகா போற்றி

ஓம் மயிலைக் கபாலீச் சரத்தாய் போற்றி
ஓம் வான்மியூ ரமர்ந்த வாழ்வே போற்றி
ஓம் கச்சூ ராலக் கோயிலாய் போற்றி
ஓம் இடைச்சுரம் இருந்த எழில்வண போற்றி
ஓம் திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி

ஓம் அச்சிறு பாக்கம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வக்கரை அமர்ந்த வரதா போற்றி
ஓம் அரசிலி நாதா ஐயா போற்றி
ஓம் இரும்பைமா காளத் திறைவா போற்றி
ஓம் கோலக் கோகர்ணக் கொழுந்தே போற்றி

ஓம் திருப்பருப்பதத்துத் தேவே போற்றி
ஓம் இந்திரநீல மலையாய் போற்றி
ஓம் அநேகதங் காவதம் அமர்ந்தாய் போற்றி
ஓம் கேதாரக்கிரிக் கிழவோய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
                                              
திருச்சிற்றம்பலம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar