SS அலைமகள் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அலைமகள் போற்றி
அலைமகள் போற்றி
அலைமகள்  போற்றி

அலைமகள் போற்றி

ஓம் திருமா மகளே செல்வி போற்றி
ஓம் திருமால் உளத்தில் திகழ்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடல்வரு தேவே போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவீ போற்றி
ஓம் அருளே உருவாய் அமைந்தாய் போற்றி
ஓம் மருநிறை மலரில் வாழ்வாய் போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
ஓம் இருளொழித் தின்பம் ஈவோய் போற்றி
ஓம் அருள்பொழிந் தெம்மை ஆள்வாய் போற்றி

ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றி
ஓம் சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி
ஓம் ஊக்கம தளிக்கும் உருவே போற்றி
ஓம் ஆக்கமும் ஈயும் அன்னாய் போற்றி
ஓம் இறைவி வலப்பால் இருப்போய் போற்றி
ஓம் பொறையுடன் உயிரைப் புணர்ப்போய் போற்றி
ஓம் அன்பினைக் காட்டும் ஆயே போற்றி
ஓம் வன்பினை என்றும் வழங்காய் போற்றி
ஓம் பனிமதி உடன் வருவாய் போற்றி
ஓம் கனியிலும் இனிய கமலை போற்றி

ஓம் நிமலனை என்றும் நீங்காய் போற்றி
ஓம் கமலம் துதித்த கன்னி போற்றி
ஓம் குற்றம் ஓராக் குன்றே போற்றி
ஓம் செற்றம் கொள்ளாச் சிறப்போய் போற்றி
ஓம் அன்னை யென்ன அணைப்போய் போற்றி
ஓம் தன்னிகர் தாளைத் தருவோய் போற்றி
ஓம் மாயனாம் மலர்க்கு மணமே போற்றி
ஓம் நேயமுற் றவனை நீங்காய் போற்றி
ஓம் இறைவியாய் எங்கணும் இருப்போய் போற்றி
ஓம் மறைமொழி வழங்கும் மாண்யே போற்றி

ஓம் மாலினைக் கதியாய் மதித்தோய் போற்றி
ஓம் சீலஞ் செறிந்த சீதா போற்றி
ஓம் அன்பருக் கருள்புரி அருட்கடல் போற்றி
ஓம் இன்பம் அருளும் எந்தாய் போற்றி
ஓம் அச்சுதன் காதல் ஆர்வோய் போற்றி
ஓம் எச்சுவை தனையும் ஈவோய் போற்றி
ஓம் பூதலத் தன்று போந்தாய் போற்றி
ஓம் தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி
ஓம் இலங்கை யிற்சிறை இருந்தோய் போற்றி
ஓம் நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி

ஓம் திரிசடை நட்பைத் தேர்ந்தோய் போற்றி
ஓம் பரிவுடையவர்பால் பரிவினாய் போற்றி
ஓம் குரங்கினைக் கண்டு குளிர்ந்தோய் போற்றி
ஓம் வரங்கள் அவர்க்கு வழங்கினை போற்றி
ஓம் அரக்கியர்க் கபயம் அளித்தோய் போற்றி
ஓம் இரக்கமாய் ஒன்றிற் கிருப்பிடம் போற்றி
ஓம் இராவணற் கிதமே இசைத்தோய் போற்றி
ஓம் இராமருக் குரிய இன்பே போற்றி
ஓம் கணவனை அடைந்து களித்தோய் போற்றி
ஓம் குணநிதி யாகக் குலவினாய் போற்றி

ஓம் அரசியாய் அயோத்திக் கானாய் போற்றி
ஓம் முரசொலி அந்நகர் முதல்வி போற்றி
ஓம் உருக்கு மணியாய் உதித்தோய் போற்றி
ஓம் செருக்கொழித் தொளிரும் செய்யாய் போற்றி
ஓம் சிசுபா லன்தனைச் செற்றோய் போற்றி
ஓம் பசுநிரை மேய்ப்போன் பாரியே போற்றி
ஓம் பத்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக் குந்துதி எந்தாய் போற்றி
ஓம் மாலின் சினத்தை மறைப்போய் போற்றி
ஓம் மேலருள் புரிய விளம்புவோய் போற்றி

ஓம் மாதவ னோடு வாழ்வோய் போற்றி
ஓம் ஆதவன் ஒளிபோன் றமைந்தோய் போற்றி
ஓம் சேதனர் பொருட்டுச் சேர்வோய் போற்றி
ஓம் பாதகம் தீர்க்கப் பகர்வோய் போற்றி
ஓம் நாதனுக் கருஞ்சொல் நவில்வோய் போற்றி
ஓம் ஏதமில் பொன்னென இலங்குவோய் போற்றி
ஓம் தக்கென ஓதும் தாயே போற்றி
ஓம் மக்களின் இன்னலை மாய்ப்போய் போற்றி
ஓம் பக்கலின் இருக்கும் பணி மொழி போற்றி
ஓம் துக்கம் ஒழியச் சொல்வோய் போற்றி

ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் பங்கயத் துறையும் பாவாய் போற்றி
ஓம் செங்கண்ணன் மார்பில் திகழ்வோய் போற்றி
ஓம் தண்ணருள் கொண்டுயிர் காப்போய் போற்றி
ஓம் எண்ணறு நலந்தரும் எம்மன்னை போற்றி
ஓம் நான்கிரு நாமம் நயந்தோய் போற்றி
ஓம் வான்மிகு பெருமை வாய்ந்தோய் போற்றி
ஓம் வெற்றியைத் தருமோர் விமலை போற்றி
ஓம் அற்றவர் அடையும் அரும்பொருள் போற்றி

ஓம் வரமளித் தூக்கும் வாழ்வே போற்றி
ஓம் உரமதை ஊட்டும் உறவே போற்றி
ஓம் செல்வமிக் காக்கும் தேவி போற்றி
ஓம் அல்லலை ஒழிக்கும் அருளே போற்றி
ஓம் வீரம் விளைக்கும் வித்தே போற்றி
ஓம் காரண பூதன் கருத்தே போற்றி
ஓம் பண்பினை வளர்க்கும் பயனே போற்றி
ஓம் நண்பாய் அறிஞர்பால் நண்ணுவோய் போற்றி
ஓம் எண்ணினுள் எண்ணே இசையே போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கருத்தே போற்றி

ஓம் அறிவினுள் அறிவாம் அன்னே போற்றி
ஓம் நெறியினுள் நெறியாம் நிலையே போற்றி
ஓம் உணர்வினுள் உணர்வாம் உருவே போற்றி
ஓம் குணத்தினுள் குணமாம் குன்றே போற்றி
ஓம் கருத்தினுள் கருத்தாய்க் கலந்தோய் போற்றி
ஓம் அருத்தியை ஆக்கும் அறிவே போற்றி
ஓம் தமிழினுக் கினிமை தருவோய் போற்றி
ஓம் அமிழ்தினும் இனிய ஆயே போற்றி
ஓம் பதின்மர் பாடலில் புதிவோய் போற்றி
ஓம் துதியாய் நூலினுள் துதைந்தோய் போற்றி

ஓம் தொண்டரின் தொண்டுளம் சேர்ப்போய் போற்றி
ஓம் அண்டர் போற்றும் அமலை போற்றி
ஓம் நாரணர்க் கினிய நல்லோய் போற்றி
ஓம் மாரனைப் பெற்ற மாதே போற்றி
ஓம் உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
ஓம் நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் எங்களுக் கின்னருள் ஈந்தருள் போற்றி
ஓம் மங்கலத் திருநின் மலரடி போற்றி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar