SS ரோகநிவாரணி அஷ்டகம் (துர்க்கை சித்தர் அருளியது) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ரோகநிவாரணி அஷ்டகம் (துர்க்கை சித்தர் அருளியது)
ரோகநிவாரணி அஷ்டகம் (துர்க்கை சித்தர் அருளியது)
ரோகநிவாரணி அஷ்டகம் (துர்க்கை சித்தர் அருளியது)

நோய்கள் விலக

பகவதி தேவி பர்வத தேவி.
பலமிகு தேவி துர்க்கையளே
ஜகமது யாவும் ஜயஜயவெனவே
சங்கரி உன்னைப் பாடிடுமே
ஹநஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடு ஜோதியானவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வ ரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவியளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

நாரணி மாயே நான் முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுத்தாயே
ஊர்த்துவ யாளே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
கானகயாளே காசி னியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தபநிவாரணி ஜய துர்க்கா

திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதியானாய் பேரறிவானாய்ப்
பெருவலியானாய்ப் பெண்மையளே
நறுமலரானாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

கோவுறை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே,
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியாளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரிணி சந்திர கண்டினியே
ஜய ஜய கூக்ஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யாயன்ய யளே
ஜய ஜய காலராத்திரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar