SS சுப்ரமணியர் பகை கடிதல் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சுப்ரமணியர் பகை கடிதல்
சுப்ரமணியர் பகை கடிதல்
சுப்ரமணியர் பகை கடிதல்

திருவளர் சுடர் உருவே
சிவைகரம் அமர் உருவே
அருமறை புகழ் உருவே
அரவர்கள் தொழும் உருவே
இருள் தபும்ஒளி உருவே
என நினை எனது எதிரே
குருகுகன் முதல் மயிலே
கொணர்தியுன் இறைவனையே.

மறைபுகழ் இறைமுனரே
மறைமுதல் பகர்உருவே
பொறைமலி உலகு உருவே
புனநடை தரும் உருவே
இறையிள முக உருவே
எனநினை எனது எதிரே
குறைவு அறு திரு மயிலே
கொணர்தியுன் இறைவனையே.

இதரர்கள் பலர் பொரவே
இவண்உறை எனது எதிரே
மதிரவி பல எனதேர்
வளர்சரண் இடைஎனமா
சதுரொடு வருமயிலே
தடவரை அசைஉறவே
குதிதரும் ஒரு மயிலே
கொணர்தியுன் இறைவனையே.

பவநடை மனுடர்முனே
படர்உறும் எனது எதிரே
நவமணி நுதலணி ஏர்
நகைபல மிடறு அணிமால்
சிவணிய திருமயிலே
திடனொடு நொடிவலமே
குவலயம் வரும் மயிலே
கொணர்தியுன் இறைவனையே.

அழகுஉரு மலர்முகனே
அமரர்கள் பணிகுகனே
மழஉரு உடையவனே
மதிநனி பெரியவனே
இழவுஇலர் இறைவனே
எனநினை எனது எதிரே
குழகது மிளிர்மயிலே
கொணர்தியுன் இறைவனையே.

இணை அறும் அறுமுகனே
இதசசி மருமகனே
இணர் அணி புரள்புயனே
எனநினை எனது எதிரே
கணபண அரவுஉரமே
கலை(வு)உற எழுதரும் ஓர்
குணம்உறு மணிமயிலே
கொணர்தியுன் இறைவனையே.

எளியவ என்இறைவ குகா
என நினை எனது எதிரே
வளிநிகழ் திரள்களை மீன்
மிளிர்சினை எனமிடைவான்
பளபள எனமினுமா
பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே
கொணர்தியுன் இறைவனையே.

இலகு அயில் மயில் முருகா
எனநினை எனது எதிரே
பல பல கல மணியே
பலபல பதமணியே
கலகல கலஎனமா
கவினொடு வரும் மயிலே
குலவிடு சிகை மயிலே
கொணர்தியுன் இறைவனையே.

இகல் அறு சிவகுமரா
எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர்
சுரர் பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே
சுரநடம் இடும் மயிலே
குகபதி அமர் மயிலே
கொணர்தியுன் இறைவனையே.

கருணைபெய் கனமுகிலே
கடமுனி பணிமுதலே
அருணையன் அரன் எனவே
அகம் நினை எனது எதிரே
மருமலர் மணி பலவே
மருவிடும் களமயிலே
குருபல அவிர்மயிலே
கொணர்தியுன் இறைவனையே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar