SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கந்தனே! கடம்பனே! கருத்தினில் உறைந்திடும்கருணை வடிவான குகனே!கண்களோ பன்னிரண்டிருந்திடுனும் ஏழையைக்காக்க ஒரு கண்ணுமிலையோ!சிந்தனை முழுவதும் சிதறிடா வண்ணமுன்செம்மலர்ப் பாதங்களே!சரண் என்று கொண்டுனைச் சந்ததம் பாவினேன்செவிகளில் விழவில்லையோ!வந்தனை செய்துனை வாழ்த்தியே நாளெல்லாம்வணங்கிடும் சிறுவன் என்னைவாழவே வைப்பதும் வேலனே! உனக்கு ஒருவிளையாட்டுச் செய்கை யன்றோ!வந்தெனை இக்கணம் வலியவந்தேஅருள வேண்டியே பணிந்து நின்றேன்வளமான திருத்தணியில் வந்து நிதம்வாழ்கின்ற வேலனே! சக்தி மகனே!எத்தனை விதங்களில் என் அப்பனே!உன்னையான் எப்படிப் பாடினாலும்எத்தனை இடங்களில் என் ஐயனே!உன்னையான் எப்படி நோக்கினாலும்எத்தனைபேர் சொல்லி என் குறைகள் யாவுமேஎடுத்து நான் கதறினாலு<ம்ஏலாமல் இன்னுமேன் என்னையே சோதித்துஎள்ளி நகையாடுகின்றாய்!உத்தமன் உன்னையே ஓர் துணை என்றுநான்உறுதியாய் பற்றி நின்றேன்உடனே உன்மயில் மீது ஓடோடி வந்தெனதுஉறுவினைகள் யாவும் களைவாய்பித்தனின் மைந்தனே! பக்தியாற் பிதற்றுமிப்பித்தனையும் ஆண்டருள்வாய்!பெருமைபொலி செந்தூரில் புகழ்சேர ஒளிர்கின்றபாலனே சக்தி மகனே!கதியாக உன்பதங் கருத்தினில் கொண்டு நான்கதறியே அழுகின்றதும்கொடுமையாம் வறுமையிற் குமைந்து நான்உன்னருளைக் கூவியே தொழுகின்றதும்பதியான உன்செவிகள் பன்னிரெண்டிலொன்றிலுமேபதியாமல் இருப்பதேனோபடுதுயரம் இனிமேலும் படமுடியாதப்பனேபார்த்தருள் புரிகுவாயே!விதியான தென்னை மிக வாட்டியே வதைத்திடவும்வேறொன்றும் செய்வதறியேன்விழிகளில் நீர் பெருக வீழ்ந்து நான் கதறுவதைவேடிக்கை பார்ப்பதழகோதுதிபாடி உன்னையே தொழுகின்ற என் துயர்துடைப்பதுன் கடமையன்றோ?தூய்மைசேர் பழநிதனில் தனியாகத் தவங்கொண்டதூயனே! சக்திமகனே!மாயவன் மருகனே! மாகாளி மைந்தனே!மனத்தினில் என்றும் வதியும்மாய சொரூபிணியும் மலையரசன் மகளுமாம்மாசக்தி வேல் கொண்டவாதூயவன் உன்னையான் தினமுமே பாடியும்திருவுளம் இரங்க விலையோ!துதிப்பதில் பிழையேது மிருப்பினும் தயவாகப்பொருத்தருள் தள்ளிடாதே!நீயெனத் தள்ளிடினும் நானுனது பாதமேநம்பினேன் நாளும் ஐயா!நெஞ்சமும் உருகியே நீராக விழிகளில்நாளெல்லாம் ஓடநானும்!ஐயனேஉன்னடிகள் அடைக்கலமென்றடைந்திட்டேன்ஆண்டருள் செய்குவாயே!அழகான ஏரகத்தமருமொரு குருவே! என்அன்னையாம் சக்தி மகனே!பாரதனில் பிறந்திட்டுப் பலகஷ்டம் தான் பட்டுப்பாவியேன் மிகவும் நொந்தேன்பார்த்தருள் புரிகுவாய்! பார்வதியின் மைந்தனேபாலனே! கருணை செய்வாய்!பேரெதும் வேண்டிலேன்! புகழ் வேண்டேன்உன் பாதப் புகலொன்றே போதுமப்பா!பேதை நான் படுந்துயரைப் புரிந்து நீஅருள் புரிந்து பாரெல்லாம் வாழவைப்பாய்ஆரெதும் சொல்லிடினும் அத்தனையும் உன்னடியில்அர்ப்பணித் தமைதி கொள்வேன்ஆதரவு நீயன்றி ஆருமெனக் கில்லையெனஅன்றே நான் கண்டுகொண்டேன்ஊரெதனில் உறைந்தாலும் உள்ளத்தில்என்றுமே உன்னை நான் சிக்கவைத்தேன்உயர்வான பழமுதிர் சோலைதனில் உறைகின்றஒருவனே சக்தி மகனே!