|
உன்னை யொழிய ஒருவரையும் நம்பகிலேன் பின்னை யொருவரு வரை யான் பின் செல்வேன் - பன்னிரு கைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே
நான் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும், குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன்னே வந்து தோன்றிடினே.
சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போதும் மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
முருகனே செந்தில்முதல்வனே மாயோன் மருகனே யீசன்மகனே - யொருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.
அஞ்சுமுகந் தோன்றி ஆறுமுகந் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்றுஓதுவார் முன்.
பன்னிரு கரத்தாய் போற்றி, பசும்பொன் மாமயிலாய் போற்றி முன்னிய கருணையாறு முகப்பரம் பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருணைவா ரீதியே போற்றி முன்னிய கருணையாறு முகப்பரம் பொருளே போற்றி ரிதியே போற்றி எண்ணிரு கண்ணே கண்ணுள் இருக்கு மாமணியே போற்றி
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மங்கை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க சீர் அடியா ரெல்லாம். |
|
|