SS அன்னை அருட்பா (தாயுமான சுவாமிகள் அருளியது) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அன்னை அருட்பா (தாயுமான சுவாமிகள் அருளியது)
அன்னை அருட்பா (தாயுமான சுவாமிகள் அருளியது)
அன்னை அருட்பா (தாயுமான சுவாமிகள் அருளியது)

மெய்யுணர்வு பெற

எய்யாத வாழ்வும் வேறெண்ணாத நிலையும்
நினை என்றும் மறவாத நெறியும்
இறவாத தகவும் மேம் பிறவாத கதியும்
இவ்வேழையே கருள் செய் கண்டாய்

கொய்யாது குவியாது குமையாது மணம் வீசும்
கோமளத் தெய்வ மலரே
கோவாத முத்தமே குறயாத மதியமே
கோடாத மணி விளக்கே

ஐயநநங் கொண்ண திலலையம் மருவும்
அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்டமும் சராசரமும் ஈன்றருள் பர
சிவானந்த வல்லி உமையே

நீறணிந்து ஒளிர் அக்க மணிதரித்து உயர்
சைவ நெறி நின்று உனக்குரிய வோர்
நிமலமுறும் ஐந்தெழுத்துள்நிலையுறக் கொண்டு
நின்னடி பூசை செய்து

வீறணிந்து என்றும் ஒரு தன்மை பெறும் சிவ
ஞான வித்தகர் பதம் பரவும் ஒர்
மெய்ச்செல்வ வாழ்க்கையின் விருப்பமுடையேன்
இது விரைந்தருள வேண்டும் அமுதே

பேறணிந்து அயன் மாலும் இந்திரனும் அறி
வறிய பெருமையை அணிந்த அமுதே
பிரச மலர் மகள் கலைசொல் மகள் விசய மகள்
முதல் பெண்கள் சிரமேவு மணியே

ஆறிணிந்திடு சடையார் தில்லை யம்பதி மருவும்
அண்ணலார் மகிழ மணியே
அகிலாண்டமும் சரா சரமும் ஈன்றருள்
பரசிவானந்த உமையே

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்
பக்க முண்டெக் காலமும்
பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாக யம
படரெனுந்திமிர மணுகாக்

கதியுண்டுஞானமாங் கதிருண்டு சதிருண்டு
காயசித் திகளுமுண்டு
கறையுண்ட கண்டர்பா லம்மை நின்றருளிற்
கருத்தொன்று முண்டாகுமேல்

நதியுண்ட கடலேனச் சமயத்தை யுண்டபர
ஞான வானந்த வொளியே
நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
நானெனு மகந்தை தீர்த்தென்

மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
மதுசூதனன் தங்கையே
வரை ரஜானுக் கிருகண் மணியா புதித்த மலை
வளர்காதலிப் பெணுமையே

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகீ த்ரியம்பகீ யெழிற்
புங்கவி விளங்கு சிவ சங்கரி சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கு

நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி யென்றுன்
நாமமேயுச்சரித்திடு மடியர் நாமமே
நானுச்சரிக்க வசமோ

வாரணி சடைக் கடவுளாரணி யெனப் புகழ
அகிலாண்ட கோடி யீன்ற
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசு
மானந்த ரூபமயிலே

வாரணியுமிரு கொங்கை மாதர் மகிழ கங்கைபுகழ்
வளமருவு தேவையரசே
வரை ரஜானுக் கிருகண் மணியாயுதித்த மலை
வளர் காதலிப்பெணுமையே.
(தாயுமானவர்).


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar