ஓராறு வாரங்கள் உன் விரதம் காமாட்சி தீராத துயர் தீர்ப்பான் முடிவினிலே காமாட்சி மாறாத பாசமதை காமாட்சி மகனுக்கே பொலிந்திருவாள் காமாட்சி முதல் வாரம் வெள்ளியன்று முதல் பூஜை
முன்வந்து எதுவேண்டும் என்றிடுவாள் காமாட்சி இரண்டாம் வார பூஜையிலே காமாட்சி குறை கேட்டு இரக்கம் கொள்வாள் காமாட்சி மூன்றாம் வார பூஜையிலே காமாட்சி முன்நின்று இடுக்கண் களைவாள் காமாட்சி
நான்காம் வார பூஜையிலே காமாட்சி நானே தான் துணையென்பாள் காமாட்சி ஐந்தாம் வார பூஜையிலே காமாட்சி ஐங்கரினின் அருள் இணைப்பாள் காமாட்சி ஆறாம் வார பூஜையிலே காமாட்சி
எண்ணமெல்லாம் ஈடேற்றும் காமாட்சி ஆறுமுகன் துணை தருவாள் காமாட்சி பேறு பல தந்திடுவாள் காமாட்சி மாவடியில் காப்பவளே காமாட்சி மாங்கல்யம் காப்பவளே காமாட்சி
நான் தருவேன் நிவேதனம் காமாட்சி எழுமிச்சை கனி (விழைவாள்) ஏற்பாள் காமாட்சி ஏழு பிறவி துணை நிற்பாள் காமாட்சி மாதாவே என்றழைத்தால் காமாட்சி மடிதந்து ஆதரிப்பாள் காமாட்சி
மாங்காடு சரணடைந்தால் காமாட்சி மங்காத வாழ்வளிப்பாள் காமாட்சி வெற்றி மேல் வெற்றி தரும் காமாட்சி வற்றாத ஜீவ நதி காமாட்சி தொழில் செய்ய வழி சொல்வாள் காமாட்சி
தொல்லையில்லா வாழ்வருள்வாள் காமாட்சி உத்தியோகம் உடன் கோட்டாள் காமாட்சி உத்திரவு உடன் இடுவாள் காமாட்சி சந்நிதியை சரணடைந்தால் காமாட்சி சந்தோஷி யாகிடுவாள் காமாட்சி
சிவம்பாதி கொண்ட சக்தி காமாட்சி பிள்ளை நான் பின்வருவேன் காமாட்சி தள்ளாமல் வழிநடத்து காமாட்சி கன்னியர்கள் கைதொழுதால் காமாட்சி கல்யர்ணம் கைகூட்டும் காமாட்சி