SS ஐயப்பன் வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஐயப்பன் வழிபாடு
ஐயப்பன் வழிபாடு
ஐயப்பன் வழிபாடு

ஸ்ரீ மஹா சாஸ்த்ரு ஸ்துதி அஷ்டகம்

1. சிதிஹயமதிருஹ்ய ஸஞ்சரந்தம்
ச்ரித ஜன சிந்தித பூரணே ப்ரவ்ருத்தம்
ஹிதகர மனிசம் ஸதாம் மஹாந்தம்
ஸததமஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: நீலவர்ணமான குதிரையின் மேல் அமர்ந்து பவனி வருபவரும், அடியார்களின் குறைகளைத் தீர்ப்பதிலே கருத்துள்ளவரும், சாதுக்களுக்கு எப்போதும் நன்மை செய்கின்றவரும், மகானும், ஈஸ்வரனுக்குத் தலைவனுமான ஐயப்பனை சரணமடைகிறேன்.

2. ஹரிஹர தனுஸம்பவம் ஸுபூர்ணம்
ஸுரமுனி சித்த ஜனைஸ்ச வந்த்ய மானம்
வரஸித மதவாரணேந்த்ர யானம்
ஸததமஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: ஹரிஹர சுதனும், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் ஆகியவர்களால் வணங்கப்படுபவரும், சிறந்த கம்பீரமான வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனை வணங்குகிறேன்.

3. வனபுவி ம்ருகயாம் ஸதா சரந்தம்
தனுஜாகுலாந்த கரோத்ய தோரு குந்தம்
கனகமணி விசித்ர பூஷணம்தம்
ஸதத மஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: அநீதி நிறைந்த காட்டில் எப்பொழுதும் வேட்டையாடுகின்றவரும், அசுர குலத்துக்கே முடிவு கட்டுபவரும், உயரத் தூக்கிய கையில் குந்தம் என்ற ஆயுதத்தை உடையவரும், பொன் மற்றும் ரத்னங்களாலான ஆபரணங்களை அணிந்தவரும், பிரசித்தரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் பெரியவருமான ஐயப்பனை துதிக்கிறேன்.

4. சரதமல ஸுதாம்க பிம்பவக்த்ரம்
தரணி ஸுதாகர வீதி ஹோத்ரநேத்ரம்
ஸுரதருஸும பூஷிதோரு காத்ரம்
ஸததமஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: அந்திப்பொழுதில் தோன்றும் பூரண நிலவைப்போன்ற முகத்தை உடையவரும்; சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரைக் தன் கண்களால் <உடையவரும், பாரிஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரீரத்தை உடையவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் தலைவருமான ஐயப்பனை சரணமடைகிறேன்.

5. வனபுவி ஸனகாதி ஸேவ்ய மானம்
மனுஜவரை ரணிசம் ப்ரபூஜ்யமானம்
ஜனனம்ருதி விஹீனதாம் த தானம்
ஸதத மஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: காட்டில் சனகர் முதலிய யோகிகளால் நமஸ்கரிக்கப்படுபவரும், உத்தமமான மனிதர்களால் எப்போதும் பூஜிக்கப்படுபவரும், பிறப்பு இறப்பு ஆகிய பயங்களைப் போக்குகின்றவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைப் பணிகின்றேன்.

6. ப்ரணவதரு விஹங்க மாதி தேவம்
குணமய ஸம்ஸ்ருதி கானனோரு தாவம்
கணபதி குஹ ஸன்னுத ப்ரபாவம்
ஸதத மஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: ப்ரணவமாகிய மரத்தில் பறவை போல் விளங்கும் முக்கிய தேவனாய் இருப்பவரும், முக்குணங்களால் உண்டான பிறப்பு, இறப்பு என்ற காட்டை அழிக்கக்கூடிய அக்கினியாக இருப்பவரும், கணபதி மற்றும் முருகனால் துதிக்கப்படுபவரும், சிறந்த மகிமை உடையவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் பெரியவருமான ஐயப்பனை வணங்குகிறேன்.

7. ஸுரபரிப்ருட ஸேவிதாங்க்ரி யுக்மம்
குருமகிலாத்ம த்ருஸாம் விஸுத்த தத்வம்
கிரிகுஹ ரத லே ஸுன்னிவிஷ்டம்
ஸதத மஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: தேவாதி வேதவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட பாத கமலங்களை <உடையவரும், எல்லா ஞானிகளுக்கும் குருவாக இருப்பவரும், சுத்த மனமுள்ளவரும், சபரிமலையின் குகையில் அமர்ந்திருப்பவரும் ஈஸ்வரர்களின் தலைவருமான பிரகதீஸ்வரரை (ஐயப்பனே ஈஸ்வரர்களில் மேலானவர் என்பதாலும் உலக உயிர்களின் தலைவன் என்பதாலும் பிரகதீஸ்வரர் என்ற பெயர்) வணங்குகிறேன்.

8. அஜமமர ணாதிபம் வரிஷ்டம்
கஜரிபு ப்ருஷ்டக தோரு ரத்ன பீடம்
விஜித மதன ஸுந்தரம் கரிஷ்டம்
ஸதத மஹம் ப்ருஹதீஸ்வரம் ப்ரபத்யே

பொருள்: கர்ப்பவாசமில்லாதவரும், தேவ நாயகனும், மிகச் சிறந்தவரும், சிங்கத்தின் வடிவிலான (கஜரிபு:) ரத்ன மயமான ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும், மன்மதனையே தன்னழகால் வென்றவரும் உத்தமானவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்.

9. இதி நுதி மதுலாம் மஹேச ஸுனோ:
ஹ்ருதி நிதரா மனு சிந்தயன் ஸ்வரூபம்
ஸது பஸு ஸுத ஸம்பதாம் நிவாஸம்
பரிபடதே ப்ருஹதீஸ்வர ப்ரஸாதாத்

பொருள்: நிகரற்ற சிவகுமாரனாகிய ஐயப்பனின் இந்தத் துதியை, யாரொருவர் முழுமனதாக ஐயப்பனை நினைத்துக் கொண்டு சொல்கிறாரோ, அவர் ஐயப்பனுடைய கருணையால் பசுக்கள், புத்ரர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று ஆரோக்யமான ஆனந்த வாழ்வு பெறுவார். அவர்தம் இல்லத்தில் என்றும் நிம்மதி. சந்தோஷம், உற்சாகம் நிறையும் !


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar