SS சரபேஸ்வரர் மந்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சரபேஸ்வரர் மந்திரம்
சரபேஸ்வரர் மந்திரம்
சரபேஸ்வரர் மந்திரம்

பாயரன்னோ தேவ: சரபஸ்த்வ பாயாத்
ஸதாரி ரோகாத் விபிநோர காப்யாம்
வைஸ்வானரோ குகரி ரிக்ஷகேப்ய:
ப்ரேப்யோ பூதேப்யோ ருஷ : க்ருதாந்தாத் அதர்வண வேதம்

இந்த அதர்வண வேத சரப மந்திரம் எல்லா பாபங்களையும் போக்கி ரக்ஷிக்கவல்லது என்று கூறப்படுகிறது.

தியான சுலோகம்

ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷீ சதுர் பாஹுக :
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர :
காலாக்னி கோடித்யுதி :
விச்வ ÷க்ஷõப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத :
கங்கா சந்தரதர : புரஸ்த சாப :
ஸத் யோரிபுக் னோஸ்து ந

(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் ÷போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என் முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

இந்த தியான சுலோகத்தை மனனம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்.

மூல மந்திரம்

ஓம் கேம் காம் கம் பட் ப்ராணக்ர
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹும் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷிராஜாய ஹும்பட் ஸ்வாஹா

லிங்க புராணம் 96வது அத்யாயத்தில், இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காண முடியாத துன்பம், வைத்யர்கள் கைவிட்ட வியாதிகள், அபமித்யு, பைத்யம், விஷ பயம், பூதப் பிரேத பைசாஸம் இவைகளின் பயம், இவைகளிலிருந்து நிவிருத்தி கிடைக்கும் என்று வியாசர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஸ்லோகம் :

ஸர்வ விக்னப் பிரசமனம் ஸர்வ வியாதி வினாசனம்
அரிசக்ர பிரசமனம் ஸர்வ துக்க வினாசனம்
அத்ரான் யோத்பாத பூகம்ப தாவாக்னி
பாம்ஸு வ்ருஷ்டிஸு
ததோ துர்ஸ்வப்ன சமனம் ஸர்வபூத நிவாரணம்
விஷக்ரக க்ஷயகரம் புத்ர பௌத்ராதி வர்த்தனம்
தத்ரக்ஷõ தாரணம் குர்யாத் ஜங்கமாங்கே வராணனே.

வித்யா உபாசகர்களுக்கு சரபர் அருளியது

யஸ்த் த்விதம் நாம ஸாகஸ்ரம்
ஸக்ருத் படதி பக்தி மாந்தேஷாம்
தஸ்ய யே சுத்ரவஸ்த் நிஹந்தா சரபேஸ்வர:

என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உத்திர பாகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம்:-

எவர் ஒருவர் லலிதா சகஸ்ர நாமத்தை பக்தியோடு ஒரு தடவை படிக்கிறாரோ அவருக்கு யார் சத்ருக்களோ அவர்களை சரப மூர்த்தி நாசம் செய்கிறார்.

சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சமே. ஆகவே கால பைரவாஷ்டகத்தையும் அச்சமயம் கூறி வழிபடலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar