SS மாதங்கி வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மாதங்கி வழிபாடு
மாதங்கி வழிபாடு
மாதங்கி வழிபாடு

ராஜமாதங்கி வழிபாடு

மூலாதாரச் சக்கரத்தில் உருவாவது பராவாக்கு, வயிற்றுப் பகுதியில் விரிவடைவது பசயந்தி வாக்கு, இடைப்பகுதிக்கு மேல் உருவாகி நிற்பது மத்யமா வாக்கு, வெளியில் உருப்பெற்று வருகிறபோது வைகரீ வாக்கு என்றும் பெயர் பெறுகின்றன. இவற்றுக்கு நாயகியான வாக் தேவதை, ராஜசியாமளா என்ற திருநாமத்தோடும் இருக்கிறாள். இந்த தேவிதான் தசமகாவித்யையில் ஒன்பதாவது சக்தியாக ராஜ மாதங்கி என்று அனைவராலும் போற்றப்படுகிறாள். ஒரு முறை பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மதேவன் சிவபெருமானை யானை வடிவம் (மதங்கம்) எடுத்து வழிபட்டார். அந்த நேரத்தில் பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியவர் மதங்க முனிவர்.

இந்த முனிவர், திருவெண்காடு அருகில் உள்ள ஸ்வேதவனம் என்ற மலர் வனத்துக்கு வந்து தவம் இயற்றியபோது திருவெண்காடு இறைவனின் காட்சி கிடைத்தது. என்ன வரம் வேண்டும்? என இறைவன் கேட்டபோது, அந்த ஆதிபராசக்தியே என் மகளாகப் பிறந்திட வேண்டும் என்று வேண்டினாராம் மதங்கர். இறைவனும் அப்படியே வரம் தந்தார். பின்னர், சிவனாரின் ஆசியோடு அவர் அருளிய பஞ்ச தசாட்சரி மந்திரத்தை ஒரு சோலையில் அமர்ந்து ஜெபம் செய்தார் மதங்கர். அங்கே, முனிவருக்குக் காட்சி தந்த பார்வதிதேவி, அடியவள் சித்ஸ்வரூபிணி. நான் தங்களுக்கு மகளாக அவதரிக்க இயலாது. எனது உபதேவதையான மந்திரிணி சக்தியே உமக்கு மகவாய் பிறப்பாள் என்றாள். இப்படியாக மதங்க முனிவருக்கு மகளாக அவதரித்தவளே மாதங்கி ஆனாள்.

ராஜமாதங்கி என்ற திருநாமத்துடன் ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், மதங்க புட்கரணியில் மலர்ந்த நீலோத்பல மலரில், மரகதப் பசுமை நிறத்துடன்... கரங்களில் வீணை, கிளியோடு மைவிழியளாகப் பெண் குழந்தையாகக் காட்சி தந்தாள். இந்த சக்தியை மகளாக எடுத்து வளர்த்து வந்தார் முனிவர். அவளுக்கு ஏழு வயது கடந்தபோது, ஒரு சித்திரை மாதம் சுக்லபட்ச சப்தமி திதியில் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொண்டாள். இந்நாள்தான் இறைவனை மாதங்கி மணம் புரிந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தேவி, எல்லா சக்திகளும் கொண்ட அன்னை லலிதா பரமேஸ்வரின் மந்திரியாக விளங்கி பணிகளைக் கவனித்து வருவதாலும், ராஜ வம்சத்தவர்களுக்குச் சமமான அதிகாரம் பதவி ஆகியவை இவளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாலும் ராஜ மாதங்கி என்று அழைக்கப்படுகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில் கதம்ப வன வாசின்யை நம: என்ற நாமாவளியின் கருத்துப்படி, கதம்ப வனத்தில் மாதங்கி வாசம் செய்வதால் இவளை வழிபடுபவர்கள் கதம்ப வனத்தை அழித்தல் கூடாது.

உடல் உள்ளத் தூய்மையோடு வீட்டில் வெள்ளிக்கிழமை, பவுர்ணமி நாளில் இந்த அம்பிகையை பூஜை செய்பவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி, கலைகளின் வழி அதிகமான பொருள் ஈட்டல், நாட்டியம் சங்கீதத் துறையில் பட்டம் பதவிகள் ஆகிய பலன்கள் யாவும் ஸித்திக்கும். மாதங்கி யந்திர வரைவை ஒரு மணைப் பலகையில் கோலமாகப் போட்டு, அதில் தீபம் ஏற்றி வைத்து முதலில் வித்யா கணபதியை வணங்க வேண்டும். அடுத்து தியானம் கூறுகையில் நீலநிற மலர் எடுத்துக் கொண்டு,

சியாமாங்கீம் சசிசேகராம் திரிநயனாம்
ரத்ன சிம் ஹாஸன ஸ்திதாம்
வேதைர்ப்பாஹு தண்டை: அஸி
கேடக பாசாங்குச தராம் - என்று தீபத்துக்கு அருகில் சமர்ப்பிக்கவும். பின்னர் மணைப்பலகை ஒன்றில் அமர்ந்து,

ஓம் ஹ்ரீம் க்லீம் ஹும் மாதங்க்யை பட் ஸ்வாஹா எனும் ராஜமாதங்கியின் மூலமந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வேண்டும். பிறகு, அவல் பாயசம் வைத்து நிவேதனம் செய்து, அதை சிறு குழந்தைகள் ஐந்து பேருக்குக் கொடுத்து, நாமும் ஞானப் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். கீழ்க்காணும் பாடலைப் பாடியும் வழிபடுவது விசேஷம்.

ஞானமும் திருவும் கொடுக்கும் ஞாலத்தின் புகழ்தேவி
நானிலம் போற்றும் சொற்பாவை அடியொற்றின்
வேறெதும் வேண்டுவதுண்டோ இம்மாநிலத்திலே
கூறும் மொழிகாக்கும் குணசுந்தரீ மாதங்கீ!

மாதங்கி தியானம்

த்யாயேயம் ரத்னபீடே சுககலபடிதம் ச்ருண்வதீம் ச்யாமளாங்கீம்
ந்யஸ்தை காங்க்ரீம் ஸரோஜே சசிசகல தராம் வல்லகீம் வாதயந்தீம்
கல்ஹாரா பத்தமாலாம் நியமித விகஸத் சூளிகாம் ரக்தவஸ்த்ராம்
மாதங்கீம் சங்கபத்ராம் மதுமத விவசாம் சித்ரகோத்பாஸி பாலாம்

பொருள் : ரத்ன பீடத்தில் அமர்ந்து ஒரு பாதத்தை தாமரைமலரில் வைத்திருப்பவளும், இரண்டு கிளிகளைக் கையில் கொண்டு அதன் அழகிய பேச்சை ரசிப்பவளும், பச்சை நிறத்தினளும், சந்திரகலை தரித்தவளும், வீணையைக் கையில் ஏந்தியுள்ளவளும், செங்கழுநீர் பூமாலை அணிந்தவளும், பின்னிய அழகிய சடையினை உடையவளும், சிவப்பு ஆடை அணிந்தவளும், சங்குத்தோடு அணிந்திருப்பவளும், (காதம்பரீ), மது அருந்தி போதை மயக்கத்தில் தன்னை மறந்திருப்பவளும், திலகம் விளங்கும் நெற்றியை உ<டையவளுமான ஸ்ரீராஜமாதங்கியைத் தியானிக்க வேண்டும். இவளுக்கு நான்கு கரங்களும் உண்டு. மேலும் எட்டு கரங்களும் உண்டு.

மூல மந்திரம் (பத்து அக்ஷரங்கள்)

ஓம் ஹ்ரீம் க்லீம் ஹும் மாதங்க்யை ப்பட் ஸ்வாஹா

காயத்ரீ மந்திரம்

ஓம் ஐம் சுகப்ரியாயை வித்மஹே க்லீம் காமேச்வர்யை


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar