|
பாஸ்வத் ரத்னௌக மௌளி ஸ்புரதம்ருத ருசோ ரஞ்ஜயத் சாருரேகாம் ஸத்யஸ்ஸம்தப்த கார்த்த ஸ்வரகமலஜபா பாசுராபி: ப்ரபாபி: விச்வா காசாவகாசம் ஜ்வலயத் அசிசிரம் தர்த்ரு பாசாங்கு சேஷ்டா பீதீனாம் பங்கி துங்க ஸ்தனமவது ஜகன்மாது ரார்க்கம் வபுர்ணா:
பொருள்: பிரகாசிக்கின்ற ரத்னங்களால் ஆன கிரீடத்தில் மின்னும் சந்திரனின் அழகிய கலையை அழகுறச் செய்கின்றதும், உருக்கிவிட்ட பொன், செந்தாமரை, செவ்வரத்தைப்பூ, (மஞ்சள் நிற மேனி, சிவந்த முகம், சிவந்த உதடுகள் உடையவளும்) இவைகள் போன்று பிரகாசிக்கின்ற காந்திகளால் ஆகாயத்தின் எல்லாப் பகுதிகளையும் ஜ்வலிக்கச் செய்கின்றதும், பாசம், அங்குசம், வரதம், அபயம், இவைகளைத் தன் கையில் கொண்டவளும், வெண்மையான நிமிர்த்த ஸ்தனங்களை உடையவளும், சூரிய மண்டலத்தில் இருப்பவளுமாகிய ஸ்ரீஜகன்மாதா புவனேஸ்வரியை வணங்குகிறேன்.
மூல மந்திரம் ஹ்ரீம்
காயத்ரீ மந்திரம்
ஓம் நாராண்யை வித்மஹே புவனேச்வர்யை தீமஹி தந்நோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் ஹ்ருல்லேகாயை வித்மஹே புவனேச்வர்யை தீமஹி தந்நோ சக்தி ப்ரசோதயாத்
ஓம் ஸர்வமோஹின்யை வித்மஹே விச்வஜனன்யை தீமஹி தந்நோ சக்தி ப்ரசோதயாத்
|
|
|