|
1. ஆதாரபூதே சாதேயே த்ருதிரூபே துரந்தரே த்ருவே த்ருவபதே தீரே ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள்: அண்ட சராசரங்களின் ஆதாரமாய் விளங்குபவளே ! அந்த ஆதாரத்தின் மீது அமர்பவளே ! அதைத் தாங்கும் சக்தியே ! பொறுப்பை ஏற்பவளே ! நிலையானவளே ! நிலைபெற்ற இடத்தில் இருப்பவளே ! உலகைத் தாங்குபவளே ! தாயே, உனக்கு வந்தனம். (ஆதாரம், ஆதேயம், தாரணம் எனும் திரிபுடி நிலையும் நிலைப்பும் ஆனவளே !)
2. சவாகாரே சக்திரூபே சக்திஸ்தே சக்திவிக்ரஹே சாக்தாரப்ரியே தேவி ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள்: சக்தியற்ற சவ வடிவினளே ! (சவத்தை உயிர்ப்பிக்கிற) சக்தி வடிவினளே ! அந்த சக்தியில் அமர்ந்தவளே ! சக்தியின் சொரூபமானவளே. சாக்த சம்பிர தாயத்தில் விருப்பமுள்ளவளே ! ஜகத்தாத்ரீ ! உனக்கு வந்தனம்.
3. ஜயதே ஜகதானந்தே ஜகதே ப்ரபூஜிதே ஜய ஸர்வகதே துர்கே ஜகத்தாத்ரி நமோஸ்து நம
பொருள்: வெற்றி அளிப்பவளே ! உலகின் ஆனந்தமே ! உலகால் தனிச்சிறப்புடன் வழிபடப் பெறுபவளே ! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவளே ! எளிதில் அணுக (அறிய) இயலாதவளே ! ஜகத்தாத்ரி ! வந்தனம்.
4. பரமாணுஸ்வரூபே சத்வயணுகாதி ஸ்வரூபிணி ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மரூபே ச ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள்: பரமாணு வடிவினளே ! இரண்டு அணுக்களின் கூட்டாக்கிய த்வ்யணுகம் முதல் உலகம் வரை அனைத்தின் வடிவே ! மிக நுண்ணிய வடிவினளே ! ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.
5. ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மரூபே ச ப்ராணாப்ராணாதி ரூபிணி பாவாபாவ ஸ்வரூபே ச ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள்: நுண்ணிய - மிக நுண்ணிய பொருள் வடிவினளே ! உயிர் காற்றுகளாகிய பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் ஆகிய வாயுவடிவினளே ! இருப்பும் இல்லாமையும் ஆனவளே ஜகத்தாத்ரி ! வந்தனம்.
6. காலாதிரூபே காலேசே காலாகால விபேதிநி ஸர்வஸ்ரூபே ஸர்வக்ஞே ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள்: காலம் (திசை) முதலானவளே ! காலத்தை ஆள்கின்றவளே ! உரிய நேரம் - தவறான நேரம் எனப் பாகுபடுத்துபவளே ! அனைத்துமானவளே ! அனைத்தும் அறிந்தவளே ! ஜகத்தாத்ரி ! வந்தனம்.
7. மஹாவிக்னே மஹோத்ஸாஹே மஹாமாயே வரப்ரதே ப்ரபஞ்சஸாரே ஸாத்வீசே ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள் : பெரும் தடையானவளே ! (எவராலும் அகற்ற இயலாத இடையூறாக உள்ளவளே !) பெரும் உற்சாகமானவளே ! (தடையை எதிர்த்துச் செல்கின்ற ஆர்வம் தருபவளே !) நிலையான தோற்றத்தால் மயக்குபவளே ! கோரியதைத் தருபவளே ! விரிந்த இந்த உலகின் சாரப் பொருளே ! நல்லோரை ஆட்டுவிப்பவளே ! ஜகத்தாத்ரி <உனக்கு வந்தனம்.
8. அகம்யே ஜகதாமாத்யே மாஹேச்வரி வராங்கனே அசேஷரூபே ரூபஸ்தே ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள் : எளிதில் அடைய முடியாதவளே ! உலகம் அனைத்தின் முதற்பொருளே ! மகேசனின் சக்தியே ! சிறந்த பெண்மணியே ! அனைத்தின் வடிவினளே ! உருவமெடுத்து அதில் துலங்குபவளே ! ஜகத்தாத்ரி ! வந்தனம்.
9. த்விஸப்தகோடி மந்த்ராணாம் சக்திரூபே ஸநாதநி ஸர்வசக்திஸ்வரூபே ச ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள் : 14 கோடி மந்திரங்களுக்கும் சக்தி ஆனவளே ! எப்போதும் உணரப்படுபவளே ! சக்திகள் அனைத்தின் வடிவானவளே ! ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.
10. தீர்த்த யக்ஞ தபோதானயோக ஸாரே ஜகன்மயி த்மேவ ஸர்வம் ஸர்வஸ்தே ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள் : புனித நதிகள், வேள்விகள், தவம், தானம், இவற்றின் ஒழுங்குமுறைகளின் சாரமே ! உலகமாகக் காணப் பெறுபவளே ! அனைத்திலும் உள்ளவளே ! நீயே அனைத்துமாயும் உள்ளாய்-ஜகத்தாத்ரி ! உனக்கு வந்தனம்.
11. தயாரூபே தயாத்ருஷ்டே தயார்த்ரே து: கமோசநி ஸர்வாபத்தாரிகே துர்கே ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள் : பரிவின் வடிவே ! பரிவுடன் நோக்குபவளே ! பரிவால் கனிந்தவளே ! துயரிலிருந்து விடுவிப்பவளே ! நெருக்கடிகள் அனைத்திலிருந்தும் காப்பவளே ! ஜகத்தாத்ரி உனக்கு வந்தனம்.
12. அகம்யதாமதாமஸ்தே மஹாயோகீசஹ்ருத்புரே அமேயபாவ கூடஸ்தே ஜகத்தாத்ரி நமோஸ்து தே
பொருள் : சென்றடைய இயலாத பெருநிலை எனும் மாளிகையில் இருப்பவளே ! பெரும் யோகீச்வரரின் இதயத்தைத் தன் தலைநகராகக் கொண்டவளே ! அளவிட இயலாத மூலப்பொருள் நிலையில் உள்ளவளே ! ஜகத்தாத்ரி உனக்கு வந்தனம். |
|
|