1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
விராட் சொரூபம்
5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)
இராம நாம மகிமை
16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)