மரகதவல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகின்றாள் கடைகண் அருளும் காமாட்சி காஞ்சியிலே வாழுகின்றாள் அகிலாண்ட நாயகியாய் அன்னை விசாலாட்சியானவள் காசி விஸ்வநாதருடன் ஆட்சியுமே புரிகின்றாள். (மரகதவள்ளி)
இமயமலை சிகரத்திலே உமையவளும் வாழுகின்றாள் பெண்மையின் வடிவினிலே உலகமெல்லாம் வாழுகின்றாள் கருணையுள்ள கற்பகமாய் மயிலையிலே வாழுகின்றாள் கபாலிநாதன் துணையுடனே காட்சியுமே தருகின்றாள் கயிலையிலே வாழுகின்றாள் கற்பகமாய் வாழுகின்றாள் (மரகதவள்ளி) |