SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காப்புவாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்துவாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவசவாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணைவாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.1. திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைசதிருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்றதிருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.2. செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்புசெப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னேசெப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே.3. சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண் ணெய்ச்சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்சசென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே.4. தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்றதேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே.5. தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போதித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவாதித்தவித் தார முடையா ரருள்வெள்ளந்தேக்கியன்புதித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனலே.6. செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய்திங்கட் சேய்புனைந்தசெவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றால திமிரமுமே.7. திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்திமிரத் திமிரத் தனையாவி யாளுமென் சேவகனேதிமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே.8. சீதனங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருகசீதனங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோசீதனங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்சீதனங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே.9. சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லு<ச்சிட்டவெச்சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்சிலைமத னம்படு தாமரை வாவி திரள் சங்கமே.10. திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்கதிரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்கதிரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே.11. திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே.12. சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்துசிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்டசிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.13. தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே.14. செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்கசெந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்கசெந்தி லகத்தலர் ராசிதந் தானைச்சிறையிட்டவேற்செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே.15. திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே.16. சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச்சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே.17. சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்சேரிக் குவடு விளைந்ததன் றேநன்றுதெண்டிரைநீர்சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்ற செவ்வேள்சேரிக் குவடு புடை சூழ் புனத்திற் றினைவிளைவே.18. தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே.19. சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே.20. செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே.21. சிந்தா குலவ ரிசைப்பேரு மூருகஞ் சீருமென்றோர்சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலைசிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே.22. செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்தசெற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே.23. தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்பதினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே.24. செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்டுசெகம்புர வாதிங்ஙன் செய்வதென் னோமயல் செய்யவன்புசெகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்கசெகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே.25. தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்தெளிதரு முத்தமி ழாநித்தர் சேவித்து நின்றதென்னாள்தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே.26. செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்புசெவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே.27. தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே.28. சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தேசிக்குறத் தத்தை வடிவே லெனார்சில ரன்பர்செந்தாள்சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே.29. திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோதிகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூதிகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபாதிகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே.30. தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்ததெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தேதெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே.31. தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்ததீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே.32. சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவாசித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே.33. சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச்செந் தூர்கருதசேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சேசேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே.34. திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே.35. திருத்துள வாரிகங் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்கதிருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தைதிருத்துள வாரன்னை செந்தூரையன்னள் செம்மேனியென்புதிருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே.36. செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீசெச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே.37. சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே.38. சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற் றிரி சிந்தையிடுஞ்சிற்றம் பலத்தை வரஞான தீபமிட்ட டார்க்குப்பரிசிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே.39. தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரணதீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே.40. சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்சேமர விக்கந் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே.41. தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீநரகே.42. தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே.43. செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே.44. சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருகசேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே.45. தேசம் புகல வயிலேயெ னச்சிறை புக்கொருகந்தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குபதேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்தேசம் புகல கமுதவி மானைச் செருச்செய்வதே.46. செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமத நூல்செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்புசெருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே.47. திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோதிடம்படு கத்துந் திரித்தம்பு வாலியு ரத்தும்பத்துத்திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்மதிடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே.48. சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.49. சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே.50. சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவாசித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்விசித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுக்திசித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே.51. சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ்சிலம்பம்புராசிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வாசிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வாசிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே.52. தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க்குஞ் சிதைதோல்தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீ விலங்கே!53. தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர்தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற் றவான்தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே.54. திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதாதிதத்தத்தத் தித்தத் திதித்தித்த தேதுத்து தித்திதத்தாதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்துதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீ தொத்ததே.55. தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே.56. தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந்தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.57. தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவேதீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே.58. சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநிசீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சுசீலங் கனமுற்ற வேதனை மேவித தியங்கினஞ்சீசீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே.59. சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளிசேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே.60. செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே.61. திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீதிக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே.62. திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னேதிலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே.63. தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநிதியங்காப் பொறியுண்டைபண்டுயப்போர் செய்த சேவகனே.64. சேவக மன்ன மலர்க்கோமுன் நீசொலத் தெய்வவள்ளிசேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே.65. திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணியதிகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுயதிகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவிதிகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே.66. சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவசீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசுசீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சுசீகர சிந்துரமால் வினைக்குன்றைச் சிகண்டி கொண்டே.67. சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திரிபுத்ரராசிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே.68. சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபதசேகர வாரண மேவும் புயாசல தீவினையின்சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே.69. சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்சீவன சத்துருச் செய்யாண் மருகவெ னாதிடையேசீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே.70. சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சாசிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே.71. திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிருதிங்களு மாசுண மாக்கும்ப தாம்புயன் செந்திலன்னாள்திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே.72. தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே.73. திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவதிசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போதிசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே.74. சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே.75. செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்செய்தவத் தாலஞ்சு கம்பெறச்சேயுரைக்கேற் றுருப்போய்ச்செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையேசெய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே.76. செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே.77. தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே.78. திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போதிரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே.79. செப்பா ரமுதலை மன்னோ திகனங்கு ரும்பைமுலைசெப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான் மருகன்செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே.80. சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே.81. சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலராசிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே.82. தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்தென்றலை யம்பு சகபூ தரவெளி சிந்திமன்றல்தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.83. தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே.84. சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவாசிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே.85. சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே.86. சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்சேறலைத் தாறலைத் தீர்க்குங் குமார திரியவினைச்சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே.87. திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்திறம்பா டுவர்தழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே.88. செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர் பிரான்செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே.89. சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே.90. சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலராசித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே.91. திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்னதிகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே.92. சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவடசேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே.93. செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்தசெல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மாநிறம்போற்செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே.94. சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே.95. திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்திறவா வனச முநியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே.96. திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்திருக்கையம் போருகக்கைந் நீற்றின்மாற்றித் தென்னூல்சிவபத்திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே.97. சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.98. சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்டசீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே.99. தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே.100. செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்விசெல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே.