ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉ<ண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல் தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே