|
1. கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க. 2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க. 3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக் கொள்ளாதீர்கள். 4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவ தன்னையும் விலக்குக. 5. புலால் உண்ணற்க எவ்வுயிரையும் கொலை செய்யற்க. 6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை வழிபாடாகக் கொள்க. 7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக. 8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய ஒழுக்கங்களைப் பின்பற்றுக. 9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க. 10. உயிர்க்குலமே கடவுள் வாழும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.
|
|
|