SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சிற்றம்பலம்1. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்பூத்தது பொன்ஒளி பொங்கிய தெங்கும்தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவேமுழுதும்ஆ னான்என ஆகம வேதமுறைகள்எ லாம்மொழி கின்றமுன் னவனேஎழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதிஎன்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.2. துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமாசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்தநற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதிஎன்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.3. நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவணநீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்றஅலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்அழிந்தது கழிந்தது மாயைமால் இரவுபுலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதிஎன்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.4. கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான்கண்டது கங்குலும் விண்டது தொண்டர்பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியேஎல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதிஎன்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.5. புன்மாலை இரவெலாம் புலர்ந்த்து ஞானப்பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதிஎன்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே6. ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவேஊதின சின்னங்கள் ஊதின சங்கம்பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்பெரும்புகழ் பேசினார் பெரியவர் சூழ்ந்தார்அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகிஅம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியேஇருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதிஎன்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.7. சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும்நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றிமுழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தேஎனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதிஎன்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.8. மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டுவந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலேகலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டேபாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதிஎன்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.9. மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தேஇருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ் சோதிஎன்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.10. அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலேஅமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமைவலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவேவாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுதுவிரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதிஎம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.- திருச்சிற்றம்பலம்