SS
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோகபாக்கியம் பரமநிதியம்பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப்பரமஏ காந்தநிலயம்பரமஞா னம்பரம சத்துவம் மகத்துவம்பரமகை வல்யநிமலம்பரமதத் துவநிர தி சயநிட்க ளம்பூதபௌதிகா தாரநிபுணம்பவபந்த நிக்ரக வினோதச களம்சிற்பரம்பரா னந்தசொருபம்பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம்பரமார்த்த முக்தமௌனம்படனவே தாந்தாந்த ஆகமாந் தாந்தநிருபாதிகம் பரமசாந்தம்பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம்பகிரங்கம் அந்தரங்கம்பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம்பரம்பரம் அனந்தம்அசலம்பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம்பரபதம் பரமசூக்ஷ்மம்பராபரம் அநாமய நிராதரம் அகோசரம்பரமதந் திரம்விசித்ரம்பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம்பரசுகோ தயம்அக்ஷயம்பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்பதித்துவ பரோபரீணம்பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்பரம்சிதம் பரவிலாசம்பகர்சுபா வம்புனிதம் அதுலம்அது லிதம்அம்பராம்பர நிராலம்பனம்பரவுசா க்ஷõத்கார நிரவய வம்கற்பனாதீத நிருவிகாரம்பரதுரிய அநுபவம் குருதுரிய பதம்அம்பகம்அம்பகா தீதவிமலம்பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்பவடிவம்பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானுபவவிலாசப் பிரகாசம்பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்தபதமகா மௌனரூபம்பரமபோ தம்போத ரகிதகசி தம்சம்பவாதீதம் அப்பிரமேயம்பகரனந் தானந்தம் அமலம்உசி தம்சிற்பதம்சதா னந்தசாரம்பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம்பாகார நிருவிகற்பம்பரசுகா ரம்பம் பரம்பிரம வித்தம்பரானந்த புரணபோகம்பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம்பரபரீணம் பராந்தம்பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாசபாவனம் பரமமோக்ஷம்பரமானு குணநவா தீதம்சி தாகாசபாஸ்கரம் பரமபோகம்பரிபாக வேதன வரோதயா னந்தபதபாலனம் பரமயோகம்பரமசாத் தியவதீ தானந்த போக்கியம்பரிகதம் பரிவேத்தியம்பரகேவ லாத்விதா னந்தானு பவசத்தபாதாக்ர சுத்தபலிதம்பரமசுத் தாத்விதா னந்தஅனு பூதிகம்பரிபூத சிற்குணாந்தம்பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்தபரமானு பவவிலாசம்தரமிகும் சர்வசா திட்டான சத்தியம்சர்வவா னந்தபோகம்சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வசத்திதர மென்றளவிலாச்சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத்தன்மைபல வாகநாடித்தம்மைநிகர் மறையெலாம் இன்னுமள விடநின்றசங்கரன் அநாதிஆதிசாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்டசசிகண்ட சாமகண்டசயசய வெனும் தொண்டர் இதயமலர் மேவியசடாமகுடன் மதன தகனன்சந்திரசே கரன் இடப வாகனன் கங்காதரன்சூல பாணிஇறைவன்தனிமுதல் உமாபதி புராந்தகன் பசுபதிசயம்புமா தேவன்அமலன்தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழும்அன்பர்தங்களுக் கருளாண்டவன்தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச்சைலம்எனும் ஒருவில்லவன்தக்ஷிணா மூர்த்திஅருள் மூர்த்திபுண் ணியமூர்த்திதகும்அட்ட மூர்த்தியானோன்தலைமைபெறு கணநாய கன்குழகன் அழகன்மெய்ச்சாமிநம் தேவதேவன்சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான்தாணுமுக் கண்களுடையான்சதுரன் கடாசல உரிப்போர்வை யான்செந்தழல்கரத் தேந்திநின்றோன்சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வசம்பிரமன் சர்வேச்சுரன்தகைகொள்பர மேச்சுரன் சிவபிரான் எம்பிரான்தம்பிரான் செம்பொற்பதம்தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பராசத்திவடி வாம்பொற்பதம்தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற்சத்திவடி வாம்பொற்பதம்சாற்றரிய இச்சைஞா னங்கிரியை என்னுமுச்சத்திவடி வாம்பொற்பதம்தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்தசத்திவடி வாம்பொற்பதம்தகுவிந்தை மோகினியை மானைஅசை விக்குமொருசத்திவடி வாம்பொற்பதம்தாழ்வில்ஈ சானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்திதம்சத்தி யாம்பொற்பதம்சவிகற்ப நிருவிகற் பம்பெறும் அனந்தமாசத்திசத் தாம்பொற்பதம்தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருட்சத்திஉரு வாம்பொற்பதம்தவாதசாந் தப்பதம் துவாதசாந் தப்பதம்தரும்இணை மலர்ப்பூம்பதம்சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலர்இதயசாக்ஷியா கியபூம்பதம்தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களில்சமரச முறும்பூம்பதம்தருபரம் சூக்குமம் தூலம்இவை நிலவியதமக்குள்உயி ராம்பூம்பதம்சரஅசர அபரிமித விவிதஆன் மப்பகுதிதாங்கும் திருப்பூம்பதம்தண்டபிண் டாண்டஅகி லாண்டபிர மாண்டந்தடிக்கவரு ளும்பூம்பதம்தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்காரசகலகர்த் துருபூம்பதம்சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகாசங்குலவு நற்பூம்பதம்மரபுறு மதாதீத வெளிநடுவில் ஆனந்தமாநடன மிடுபூம்பதம்மன்னும்வினை ஒப்புமல பரிபாகம் வாய்க்கமாமாயையை மிதிக்கும்பதம்மலிபிறவி மறலியின் அழுந்தும்உயிர் தமைஅருளின்மருவுற எடுக்கும்பதம்வளர்ஊர்த்த வீரதாண் டவமுதல் பஞ்சகமகிழ்ந்திட இயற்றும்பதம்வல்லமுய லகன்மீதில் ஊன்றிய திருப்பதம்வளந்தரத் தூக்கும்பதம்வல்வினையெ லாம்தவிர்த் தழியாத சுத்தநிலைவாய்த்திட வழங்கும்பதம்மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம்மறைப்பாது கைச்செம்பதம்மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம்மறைப்பரி உகைக்கும்பதம்மறையவன் உளங்கொண்ட பதம் அமித கோடியாம்மறையவர் சிரஞ்சூழ்பதம்மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொள்மறையவன் வாழ்த்தும்பதம்மறையவன் செயஉலகம் மாக்கின்ற அதிகாரவாழ்வைஈந் தருளும்பதம்மறையவன் கனவினும் காணாத பதம்அந்தமறையவன் பரவும்பதம்மால்விடை இவர் ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடுமால்அருச் சிக்கும்பதம்மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிருமால்விழிஇ லங்கும்பதம்மால்தேட நின்றபதம் ஓரனந் தம்கோடிமால்தலை அலங்கற்பதம்மால்முடிப் பதம்நெடிய மால்உளப் பதம்அந்தமாலும்அறி வரிதாம்பதம்மால்கொள் அவ தாரங்கள் பத்தினும் வழிபட்டுவாய்மைபெற நிற்கும்பதம்மால்உலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின்வதிந்திட அளிக்கும்பதம்வரையுறும் உருத்திரர்கள் புகழ்பதம் பலகோடிவயஉருத் திரர்சூழ்பதம்வாய்ந்திடும் உருத்திரற்கியல்கொள் முத்தொழில் செய்யும்வண்மைதந் தருளும்பதம்வானஇந் திரராதி எண்திசைக் காவலர்கள்மாதவத் திறனாம்பதம்மதிஇரவி ஆதிசுரர் அசுரர் அந் தரர்வானவாசிகள் வழுத்தும்பதம்மணிஉரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர்மாமுனிவர் ஏத்தும்பதம்மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள்மதித்துவர மேற்கும்பதம்மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர்மற்றையர்கள் பற்றும்பதம்வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கள்மனக்கோயில் வாழும்பதம்மாதேவி எங்கள்மலை மங்கைஎன் னம்மைமென்மலர்க்கையால் வருடும்பதம்மறலியை உதைத்தருள் கழற்பதம் அரக்கனைமலைக்கீழ் அடர்க்கும்பதம்வஞ்சமறு நெஞ்சினிடை எஞ்சலற விஞ்சுதிறன்மஞ்சுற விளங்கும்பதம்வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடஉள்மந்தணந விற்றும்பதம்மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிடமாறிநட மாடும்பதம்மறக்கருணை யும்தனி அறக்கருணை யும்தந்துவாழ்விக்கும் ஒண்மைப்பதம்இரவுறும் பகலடியர் இருமருங் கினும்உறுவரெனவயங் கியசீர்ப்பதம்எம்பந்த மறஎமது சம்பந்த வள்ளல்மொழிஇயல்மண மணக்கும்பதம்ஈவரசர் எம்முடைய நாவரசர் சொற்பதிகஇசைபரி மளிக்கும்பதம்ஏவலார் புகழ்எமது நாவலா ரூரர்புகல்இசை திருப் பாட்டுப்பதம்ஏதவூர் தங்காத வாதவூர் எங்கோவின்இன்சொல்மணி அணியும்பதம்எல்லூரு மணிமாட நல்லூரி ல்அப்பர்முடியிடைவைகி யருள்மென்பதம்எடுமேல் எனத்தொண்டர் முடிமேல் மறுத்திடவும்இடைவலிந் தேறும்பதம்எழில்பரவை இசைஆ ரூர்மறுகின் அருள்கொண்டிராமுழுதும் உலவும்பதம்இன்தொண்டர் பசிஅறக் கச்சூரின் மனைதொறும்இரக்கநடை கொள்ளும்பதம்இளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோ றருந்தமுன்னிருந்துபின் நடக்கும்பதம்எறிவிறகு விற்கவளர் கூடல் தெருத்தொறும்இயங்கிய இரக்கப்பதம்இறுவைகை யங்கரையில் மண்படப் பல்கால்எழுந்துவிளை யாடும்பதம்எங்கேமெய் அன்பருளர் அங்கே நலந்தரஎழுந்தருளும் வண்மைப்பதம்எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றேஇரங்கிஈந் தருளும்பதம்என்போன்ற வர்க்குமிகு பொன்போன் கருணைதந்திதயத் திருக்கும்பதம்என்னுயிரை யன்னபதம் என்னுயிர்க் குயிராய்இலங்குசெம் பதுமப்பதம்என்னறிவெ னும்பதம் என்அறிவினுக் கறிவாய்இருந்தசெங் கமலப்பதம்என் அன்பெ னும்பதம்என் அன்பிற்கு வித்தாய்இசைந்தகோ கனகப்பதம்என்தவ மெனும்பதம்என் மெய்த்தவப் பயனாய்இயைந்தசெஞ் சலசப்பதம்என்இருகண் மணியான பதம்என்கண் மணிகளுக்கினியநல் விருந்தாம்பதம்என்செல்வ மாம்பதம்என் மெய்ச்செல்வ வருவாய்எனும்தாம ரைப்பொற்பதம்என்பெரிய வாழ்வான பதம்என்க ளிப்பாம்இரும்பதம்என் நிதி யாம்பதம்என்தந்தை தாயெனும் இணைப்பதம் உறவாம்இயற்பதம்என் நட் பாம்பதம்என்குருவெ னும்பதம்என் இட்டதெய் வப்பதம்எனதுகுல தெய்வப்பதம்என்பொறிக ளுக்கெலாம் நல்விடய மாம்பதம்என்எழுமையும் விடாப்பொற்பதம்என்குறையெ லாம்தவிர்த் தாட் கொண்ட பதம்எனக்கெய்ப்பில்வைப் பாகும்பதம்எல்லார்க்கும் நல்லபதம் எல்லாம்செய் வல்லபதம்இணையிலாத் துணையாம்பதம்எழுமனம் உடைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட்கின்னமுத மாகும்பதம்எண்ணுறில் பாலில்நறு நெய்யொடு சருக்கரைஇசைந்தென இனிக்கும்பதம்ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதேனென்னமது ரிக்கும்பதம்எங்கள்பதம் எங்கள்பதம் என்றுசம யத்தேவர்இசைவழக் கிடுநற்பதம்ஈறிலாப் பதம்எலாந் தருதிருப் பதம் அழிவில்இன்புதவு கின்றபதமே.- திருச்சிற்றம்பலம்