அதனுக் கதுவாம் அருட்பெருஞ் ஜோதி எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி வல்லதாய் எல்லாம் ஆகிஎல் லாமும் அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர் அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஜோதி தாங்ககி லாண்ட சராசர நிலைநின் றாங்குற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்
தத்திசை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி சக்திகள் எல்லாம் தழைக்கஎங் கெங்கும் அத்தகை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஜோதி காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி இன்புறு சித்திகள் எல்லாம் புரிகஎன்
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும் ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல் ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி தீஇயல் பலபல செறித்ததில் பலவும் ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல் ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல் ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி காற்றினில் பெருநிலை கருநிலை அளவில ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி காற்றிடை ஈரியல் காட்டி அதிற்பல ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் இடைநடு கடைநடு அகப்புறம் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி காற்றிடைச் சத்திகள் கணக்கில் உலப்பில
ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி காற்றிடை உயிர்பல கதிபல கலைபல ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும் ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி காற்றிடைச் செயல்எலாம் கருதிய பயன்எலாம்
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல் அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி வெளியினில் ஒலிநிறை வியனிலை அனைத்தும் அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள் அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி வெளியிடை ஒன்றே விரித்ததில் பற்பல
அளிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி வெளியிடைப் பலவே விரித்ததில் பற்பல அளிதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி வெளியிடை உயிரியல் வித்தியல் சித்தியல் அளிபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும் அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி புறநடு வொடுகடை புணர்ப்பித் தொருமுதல் அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி புறத்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும் அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி பகுதிவான் வெளியில் படர்ந்தமாபூத அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில் அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி பரவெளி அதனைப் பரம்பா வெளியில் அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில் அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில் அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி இவ்வெளி எல்லாம் இலங்கஅண் டங்கள் அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம் அன்றற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பத்திடை ஆயிரம் பகரதில் கோடி அத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம்
ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி கோடியில் அனந்த கோடிபல் கோடி ஆடுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவாய் அத்தகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க அளவுசெய் தமைத்த அருட்பெருஞ் ஜோதி வித்தும் பதமும் விளையுப கரிப்பும் அத்திறல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி வித்திடை முளையும் முளையிடை விளைவும்
சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை அடைப்புறப் படைக்கம் அருட்பெருஞ் ஜோதி காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஜோதி அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும் அடப்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை அருட்டிறம் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி ஐந்தொழி லாதிசெய் ஐவரா திகளை ஐந்தொழி லாதிசெய் அருட்பெருஞ் ஜோதி இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்
அறந்தலை அளித்த அருட்பெருஞ் ஜோதி செத்தவர் எல்லாம் சிரித்தாங் கெழுதிறல் அத்தகை காட்டிய அருட்பெருஞ் ஜோதி இறந்தவர் எழுகஎன் றெண்ணியாங் கெழுப்பிட அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே
களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி விளங்கஎன் உள்ளே விளங்குமெய்ப் பொருளே மூவிரு நிலையின் முடிநடு முடிமேல் ஓவற விளங்கும் ஒருமைமெய்ப் பொருளே எழுநிலை மிசையே இன்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே நவநிலை மிசையே நடுவுறு நடுவே சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே ஏகா தசநிலை யாததின் நடுவே ஏகா தனமிசை இருந்தமெய்ப் பொருளே
திரையோ தசநிலை சிவவெளி நடுவே வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே ஈரெண் நிலைஎன இயம்புமேல் நிலையில் பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே எல்லா நிலைகளும் இசைந்தாங் காங்கே
எல்லா மாகி இலங்குமெய்ப் பொருளே மணாதிகள் பொருந்தா வானடு வானாய் அனாதிஉண் மையதாய் அமர்ந்தமெய்ப் பொருளே தானொரு தானாய்த் தானே தானாய் ஊனுயிர் விளங்கும் ஒருதனிப் பொருளே
அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப் பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய் உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே அருவினுள் அருவாய் அருஅரு அருவாய்
உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய் உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளாய் ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க உற்றரு ளாடல்செய் ஒருதனிப் பொருளே
எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே ஆரே என்னினும் இரங்குகின் றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனைஅருள்
சிவரக சியம்எலாம் தெரிவித் தெனக்கே நவநிலை காட்டிய ஞானசற் குருவே சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும் அத்தகை தெரித்த அருட்சிவ குருவே அறிபவை எல்லாம் அறிவித்தெனுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே கேட்பவை எல்லாம் கேட்பித் தெனக்கே வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே காண்பவை எல்லாம் காட்டுவித் தெனக்கே மாண்பதம் அளித்து வயங்குசற் குருவே
செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே உய்பவை அளித்தெனுள் ஓங்குசற் குருவே உண்பவை எல்லாம் உண்ணுவித் தென்னுள் பண்பினில் விளங்கும் பரமசற் குருவே சாகாக் கல்வியின் தரம்எலாம் கற்பித்
தேகாக் கரப்பொருள் ஈந்தசற் குருவே சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும் மெய்த்தகை அளித்தெனுள் விளங்குசற் குருவே எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம் வல்லான் எனஎனை வைத்தசற் குருவே
இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே எல்லா நன்மையும் என்தனக் களித்த எல்லாம் வல்லசித் தென்தனித் தந்தையே நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே
தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும் என்வசம் ஆக்கிய என்உயிர்த் தந்தையே தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதி என்கையில் கொடுத்த என்தனித் தந்தையே தன்னையும் தன்அருட் சத்தியின் வடிவையும்
என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல் என்ன இயற்றிய என்தனித் தந்தையே தன்உரு என்உரு தன்உரை என்உரை என்ன இயற்றிய என்தனித் தந்தையே
துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என உரைசெய்வே தங்கள் உன்னும்மெய்ச் சத்தே அன்றதன் அப்பால் அதன்பரத் ததுதான் என்றிட நிறைந்த என்தனிச் சத்தே என்றும்உள் ளதும்வாய் எங்கும்ஓர் நிறைவாய்
என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய் இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே
படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் ஏற்பட விளங்கிடும் என்தனிச் சித்தே உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும் கண்பெற நடத்தும் ககனமா மணியே பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும் சார்புற நடத்தும் சரஒளி மணியே
வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து நான்பெற அளித்த நாதமந் திரமே கற்பம் பலபல கழியினும் அழியாப் பொற்புற அளித்த புனிதமந் திரமே அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மைமந் திரமே ஐந்தென எட்டென ஆறென நான்கென முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
உயற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே சித்திக்கு மூலமாம் சிவமருந் தெனஉளம் தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்
அகங்காரம் ஆங்காங் கதிகரிப் பமைந்திடச் சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட அறிவுரு அனைத்தும் ஆனந்த மாயிடப் பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத் தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட அலகிலா அருளின் ஆசைமேற் பொங்கிட என்னுளத் தெழுந்துயிர் எல்லாம் மலர்ந்திட என்னுளத் தோங்கிய என்தனி அன்பே