|
வறுமை நீங்கி வளமுடன் வாழ
கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம் பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம் பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம் ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி. |
|
|