|
வேண்டியதைப் பெற
திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மையைப் போற்றினால் நாம் வேண்டியதை அருள்வாள். அபிராமி தேவி மீது அபிராமிப் பட்டர் பாடிய அந்தாதி மந்திர சக்தி வாய்ந்தது.
வருந்தா வகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தான் பழைய இருப்பிட மாக இனிஎனக்குப் பொருந்தா தொருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா னதைநல்கும் மெல்லியலே
பாற்கடலிலே தோன்றிய அமிழ்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிட காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத்தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டோ? |
|
|