யானை முகத்தையுடையவனே போற்றி. இடைஞ்சலுக்கு அரசன் போற்றி. தொடுத்த கருமத்தை நிறைவேற்றுபவனே போற்றி நல்லார் கூட்டத்துக்குத் தலைவா போற்றி பார்வதியின் மைந்தனே போற்றி போற்றுதற்கு உரியவனே போற்றி ஒற்றைத் தந்தத்தையுடையவனே போற்றி முதலில் வணங்கப்படுபவனே போற்றி பிள்ளைகளுக்கு அன்பனே போற்றி பெண்கள் எல்லாரையும் தாய் சொரூபமாக பார்ப்பவனே போற்றி அரச மரத்தடியில் இருப்பவனே போற்றி யோகியர் ஹிருதயத்தில் வீற்றிருப்பவனே போற்றி கொழுக்கட்டை உண்பவனே போற்றி அறுகம்புல் கொண்டு வணங்கப்படுபவனே போற்றி கல்விக்கு அரசனே போற்றி மூஞ்சூறு வாஹனனே போற்றி தலைமை வகிப்பவனே போற்றி அறியாமையை நீக்குபவனே போற்றி தந்தையிடம் பேரன்பு பூண்டவனே போற்றி ஆற்றல் படைத்தவர் கூட்டத்திற்குத் தலைவனே போற்றி ஞானியர் கூட்டத்துக்குத் தலைவனே போற்றி பக்குவப்பட்டவர்களால் வணங்கப்படுபவனே போற்றி நூல் இயற்றுபவனே போற்றி தொந்தி வயிறு உடையவனே போற்றி மகேசுவரனை மகிழ்வித்தவனே போற்றி ஓம் என்னும் மந்திர வடிவானவனே போற்றி. |