SS கோமாதா ஸ்துதி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கோமாதா ஸ்துதி!
கோமாதா ஸ்துதி!
கோமாதா ஸ்துதி!

பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது. பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.

லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சினார்கள். பசுவும், தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.

வைகுண்டம், ஸத்யலோகம் போன்று கோலோகம் என்று உள்ளது. அதில் ராதிகையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாக இருக்கிறார். அங்கு காமதேவனைப் படைத்து அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில் இருக்கிறது. இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். கோவை லட்சுமியாக பாவித்து வேதோக்த்த ஸ்ரீஸுக்தத்தினால் ஓம் ஸுரப்யை நம: என்னும் மந்திரம் சொல்லி ஆவாஹனாதி தூபதீப நைவேத்யம் முதலானவைகளுடன் ஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்ய மற்றும் பிரும்ம தேவன் சரஸ்வதியுடனும் இந்திரன் இந்திராணியுடனும் பூஜை செய்தார்கள்.
 
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நம: கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்ரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய: படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்

இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar