பத்ம புராணம், பாதாள கண்டத்தில் தொடர்ச்சியாக 100 அத்தியாயங்களில் பிரயாகை ÷க்ஷத்திரத்தின் பெருமை பகரப்பட்டுள்ளது. இதை ப்ரயாக்மாஹாத்ம்ய சதத்யாயீ என்று அழைப்பர். இதன் 35-வது அத்தியாயத்தில், வியாசர் அருளிய திரிவேணி தேவி ஸ்தோத்திரம், சநகாதி முனிவர்களுக்கு ஆதிசேஷன் உரைத்தது.
1. தேஹேந்த்ரிய ப்ராண மநோமநீஷா
சிதாஹமஜ்ஞாந விபிந்த ரூபா
தத்ஸாக்ஷிணீ யா ஸ்புரதி ஸ்வபாஸா
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதா ஸ்து
பொருள்: உடல், இந்திரியங்கள், உயிர், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று பலவிதமான உருவத்தில் தோன்றும் அஞ்ஞான மாயைக்கு எல்லாம் சாட்சியாக இருந்து, அவற்றைத் தன் ஒளியால் இயங்கும் திரிவேணிதேவி எனக்கு சித்தி அளிக்கட்டும்.
2. ஜாக்ரத்பதம் ஸ்வப்நபதம் ஸுஷுப்தம்
வித்யோதயந்தீ விக்ருதிம் ததீ யாம்
யா நிர்விகாரோபநிஷத் பிரஸித்தா
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதாஸ்து
பொருள்: ஜாக்ரத், ஸ்வப்னம், கஷுப்தி ஆகிய மாறுபட்ட நிலைகளை மின்னல்போல் மாற்றி மாற்றி அமைத்த போதிலும், தான் மட்டும் மாறாதவன் என்று உபநிஷத்துக்களில் போற்றப்படும் திரிவேணிதேவி எனக்கு சித்தி அளிக்கட்டும்.
3. ஸுப்தேஸமாஸாத் ஸகல ப்ரகார
ஜ்ஞாநக்ஷயே இந்த்ரியஜ அர்தபோதே
ஸர்ப்ரத்யபிஜ்ஞாயத ஏவஸர்வை
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதாஸ்து
பொருள்: தூக்கநிலையில் எல்லாவித அறிவும் மறைந்து இருக்கும்போது, இந்திரியங்கள் தங்களது செயல்திறனை இழந்திருக்கும்போதும், அனைவரது நினைவிலும் உணரப்படுபவளாகிய திரிவேணிதேவி எனக்கு சித்தியளிக்கட்டும்.
4. யஸ்யாம் ஸமஸ்தம் ஜகதேதி நித்யம்
ஏகாபரஸ்மை பவதி ஸ்வயம் ந
யாத்யந்த ஸத்ப்ரீதி பதம் த்வமாகாத்
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதாஸ்து
பொருள்: நித்தியமானவள் அவள் ஒருவளே என்றாலும் உலகம் முழுவதும் உறைந்துள்ள பிற பொருள்களில் இருந்து அவள் மாறுபட்டும் நிற்கிறாள். யாருடைய பதத்தை அனைவரும் முடிவில் போய்ச் சேருகிறார்களோ, அந்த தேவி எனக்கு சித்தியளிக்கட்டும்.
5. அவ்யக்த விஜ்ஞாந விராட் விபே தாத்
ப்ரதீ பயந்தீ நிஜதீப்தி தீபாத்
ஆதி த்யவத் விச்வ விபிந்த ரூபா
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதாஸ்து
பொருள்: தனது ஒளியால் மறைந்து இருப்பது ஒளியைத் தருவது, விஸ்வ ரூபமாக ஓங்கி இருப்பது என்ற பேதங்களை வெளிப்படுத்தி , சூரியன் போல் உலகில் பல வடிவங்களில் பிரதிபலிக்கும் திரிவேணி தேவி எனக்கு சித்தியளிகட்டும்.
6. ப்ரஹ்மாணமாதௌ ஜகதோஸ்ய மத்யே
விஷ்ணும் ததாந்தேகில சந்த்ரசூடம்
யாபா ஸயந்தீவ விபாஸமாநா
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதாஸ்து
பொருள்: ஆதியில் பிரம்மாவாகவும், மத்தியில் விஷ்ணுவாகவும், முடிவில் சிவனாகவும் யார் உலகில் பிரகாசிக்கிறாளோ, அந்த தேவி எனக்கு சித்தி தரட்டும்.
7. அகாரவாச்யா சதுராஸ்ய விச்வா
வைச்வாநராத்ம்யைவ மகாரவாச்யா
யாதுச்யதே தைஜஸ ஸூத்ரஸம்ஜ்ஞா
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதாஸ்து
பொருள்: அகாரம் என்பதால் சூட்சும நிலையில் நான்கு முகம் உள்ள விஸ்வா என்ற அக்னி சொரூபத்தையும், விழிப்பு நிலையில் உள்ள ஸ்தூல சரீரத்தையும், மகாரம் என்பதால் தைஜஸ் என்ற கனவு நிலையில் சூக்ஷ்ம சரீரத்தையும், யார் இந்தச் சூத்திரத்தின் மூலம் சுட்டிக் காட்டப்படுகிறாளோ, அந்த திரிவேணிதேவி எனக்கு சித்தியளிக்கட்டும்.
8. அவ்யாக்ருத ப்ராஜ்ஞ கிரீச்வராங்கீ
யா முக்திசாஜ்ஞாந ஸமஸ்த சூநயா
ஓங்கார லக்ஷ்ம்யா து துரீய தத்வா
ஸாக்ஷõத் த்ரிவேணீ மம ஸித்திதாஸ்து
பொருள்: வெளிப்படாத ப்ராக்ஞ என்ற சுஷுப்த நிலையில் உள்ள சிவபெருமானைக் குறிப்பவளும், அஞ்ஞானத்தில் விளையும் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை அளிப்பவளும், நான்காவது தத்துவமான ஓங்காரலக்ஷ்மி என்ற திரிவேணி தேவி எனக்கு சித்தியளிக்கட்டும்.
9. அநேந ஸ்தவநேநைநாம் த்ரிஸந்த்யம் ய ஸ்மரேந்நர
தஸ்ய வேணீ ஸுப்ரஸந்நா பவிஷ்யதி ந ஸம்சய
பொருள்: யார் இந்த ஸ்தோத்திரத்தால் முக்காலத்திலும் திரிவேணிதேவியை நினைக்கிறாரோ, அவருக்கு தேவி பிரசன்னமாவாள். அதில் சந்தேகம் இல்லை.
10. மந்தரஸாரமிதம் நாம வ்யாஸோக்தம் ஸ்தோத்திரமுத்தமம்
தஸ்ய ஜாப்யேந ஸா தேவீப்ரத்யக்ஷம் மம ஸர்வதா
பொருள்: வியாசர் இயற்றிய உத்தமமான மந்திரசாரம் என்ற இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால் திரிவேணி தேவி எனக்கு என்றும் பிரத்யட்சமாக இருக்கட்டும்.